1
subhatamilkathaigal-Tamil-stories-Tamil-poems: முயற்சி

முயற்சி



ஒன்று நினைத்து, உருட்டப்  பகடையை



எண்ணிய படியே என்றும் விழாத



தாயமாய், வாழ்விலும்  சற்றும் எண்ணா



மாயங் கள்பல வந்த வண்ணம்



உள்ளதேஉள்ள  உளைச்சல் இல்லா



உள்ளம் பெறவே, ஒருவழி உள்ளது



எதுவோ  நடக்குதுஎதற்கா கவோதான் 



அதுநடக் குதுமனம் அப்போது நினைத்திடப் 



பழக்கம் செய்க; பலதடை வரட்டுமே 



விழவிடா துமனதை விடாது முயல்கவே

Who Voted

Leave a comment