0
உங்கள்கண்களை நேசிக்கின்றேன் (EyeLoveU)
உங்கள்கண்களைநேசிக்கின்றேன்(EyeLoveU)என்பது ஒரு கட்டணமற்ற கணினி பயன்பாட்டு மென்பொருளாகும், இது நம்முடைய கண்களைப் பராமரிக்க உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும். இது நாம் தொடர்ந்து கணினியைப் பயன்படுத்தும் போது எவ்வளவு கால இடைவெளியில் நம்முடைய கண்கள் ஒய்வெடுக்க வேண்டும் என அந்த காலஇடைவெளியில் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த பயன்பாடானது நம்முடைய சுட்டி , விசைப்பலகை ஆகியவற்றின் செயலை துல்லியமாக கண்காணிப்பதன் அடிப்படையில், நாம் கணினியை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றோம் என்பதை தீர்மானிக்கின்ற, ஒரு வகையான கண்களின் பராமரிப்பு மென்பொருளாகும். எனவே, ஒவ்வொரு கணினி பயனாளருக்கும் அல்லது தங்கள் பிள்ளைகள் கணினியின் திரையை அதிக நேரம் தொடர்ந்து பார்ப்பதைத் தடுக்க விரும்பும் பெற்றோருக்கும் மிகவும் பயனுள்ள கருவியாகும்.
,
தொடர்ந்து கணினியின் திரையை பார்க்காமல் கண்களை சிறிதுநேரம் கண்களை மூடி இடைவெளிவிடுக! கணினியை பயன்படுத்திடும் போதான நம்முடைய கண்களை பராமரிப்பு செய்வதற்கான வழிகாட்டியாக திகழும் இந்த கருவியை ஒவ்வொரு கணினி பயனாளரும் கண்டிப்பாக பயன்படுத்திகொள்ளுமாறு பரிந்துரைக்ககப் படுகின்றது
இது செயல்படுவதற்கான கணினியின் தேவைகள்:
விண்டோ 10, விண்டோ 8, விண்டோ 7, விண்டோ விஸ்டா, விண்டோ எக்ஸ்பி ஆகிய இயக்கமுறைமைகளாகும் மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.eyeloveucare.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a comment