1
திரைஜாலம்: சொல் வரிசை - 186
சொல் வரிசை - 186 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.


1. ஒருவர் வாழும் ஆலயம்(--- --- என்றும் என் நெஞ்சிலே)

2. கோ(--- --- --- --- என் தோளில் சாய்ந்திட வா)

3. அண்ணன் ஒரு கோயில்(--- --- பொன் மொழி கிள்ளை)

4. அமரதீபம்(--- --- --- மாமலரைக் கண்டு)

5. எங்கேயும் எப்போதும்(--- --- --- உன்னை கூப்பிட முடியாது)

6. ஆசீர்வாதம்(--- --- --- நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி)

7. கொடிமலர்(--- --- ஒரு பாட்டு பாட வேண்டும்)

8. ராசி(--- --- --- --- ஆனந்தப் பறவை வானத்தை அளக்கும்)

9. ஆஷா(--- --- மலர்வனம் ஆனாலும்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்

Who Voted

Leave a comment