1
ஒரு கூடைக் கொழுந்து - எனக்குப் பிடித்த சிறுகதை

என்.எஸ்.எம்.இராமையா

“அக்கா எனக்கு எது நெரை?”

கொழுந்து இல்லாத கூடையின் தலைக்கயிறு தோள் வழியாக இடதுகைக்குள் அடங்கியிருக்க, வெற்றுக்கூடை முதுகில் அசைந்துகொண்டிருந்தது. லட்சுமியின் கேள்வி யார் காதில் விழுந்ததோ என்னவோ? பதிலே இல்லை. மற்ற நாட்களாக இருந்தால் அந்த ‘வயசுப்பெண்கள்’ குழுவினர் அவளை ஆளுக்கொரு பக்கமாக இழுப்பார்கள்.


“இங்கே வாடி லெட்சுமி! என்கிட்டே நிரைதாரேன்”

“ஐயோ! லெட்சுமிக்குட்டி! என்கிட்டே நிற்கட்டுண்டி”


நாலாபக்கத்திலிருந்தும் வரும் அழைப்பைக்கண்டு அவள் அரிசிப்பல் தெரியச் சிரிப்பாள். அவளுக்குச் சற்றுக் கர்வமாகக்கூட இருக்கும். இவ்வளவு, கிராக்கியா என்று!


அப்படிப்பட்டவங்கள் இன்று ஒரே மெளனம் அனுட்டித்தனர். எதற்கு இந்த மெளனம் என்று புரியாமல் அவர்கள் முகத்தைப் பார்த்தாள் லெட்சுமி. நிரை பிடித்துக்கொண்டு நின்ற அவளுடைய ‘செட்டு’கள் எல்லாம் சொல்லி வைத்தாற்போல முகத்தை ஒரு மாதிரியாகத் தூக்கி வைத்துக்கொண்டு – கொந்தரப்பு காசும் கொழுந்து காசுமாக ‘முதல் நம்பர் சம்பளம்’ வாங்குபவளை எரிச்சலொடு பார்க்கும் பிள்ளைக்காரி மாதிரி – ஓரப் பார்வை பார்ப்பதைக் கண்டதும் அவளுக்கு எரிச்சலாக்கூட வந்தது.


“என்னடி ஆத்தா உங்களுக்கு வந்த வாழ்வு?” என்று ஒரு வெட்டு வெட்டிவிட்டுக் கடைசித் தொங்கலில் நிரை போட்டுக் கொண்டிருந்த கங்காணிக் கிழவனிடம் போனாள்.


“கங்காணி அப்பச்சி எனக்…”


வழக்கமாக அவளைக் கண்டதும், இருக்கும் இரண்டு முன்பற்களும் தெரியச் சிரித்தவாறு “என்ன ஆயி! இப்பத்தான் வாறியா? போ… போ… முப்பத்திரண்டாவது நிரை ஒனக்கு. அய்யா வர்றத்துக்குள்ளே ஓடு” என்று கனியும்… கிழவன்கூட இன்றைக்கென்று சடசடத்தான். “வாறாக, தொரைச்சாணி அம்மா! வங்க இப்பத்தான் விடிஞ்சுதோ? மொகறையைப் பாரு! நேரம் என்ன ஆவுது? சுணங்கி வாற ஆளுக்கு ஏன் வேலை கொடுத்தேன்னு ‘ஙொப்பன்’ குதிப்பதே! நீயா ‘வதிலு’ சொல்லுவே?”


விடியற்காலை வேளையிலே இப்படி வாங்கிக்கட்ட வேண்டி இருக்கின்றதே என்று அவளுக்கு அங்கலாய்ப்பாக இருந்ததுதான். ஆனால் கணக்கப்பிள்ளை ஐயாவிடமும் கங்காணியிடமும் அதைக் காட்டிக்கொள்ள முடியுமா? அப்புறம் தப்புவதாவது!


“சரி… சரி அப்பச்சி! காலங்காத்தாலே பேசாதீங்க. என்னமோ, என்னைக்கும்போல மத்தக் குட்டிக நெரை புடிச்சிருப்பாளு கன்னு நெனச்சேன். அவுகளுக்கெல்லாம் இன்னைக்கு என்னமோ வந்திருச்சி!”


”நீங்க பண்ணுற காரியங்களுக்கு நெரை வேறே புடிச்சித் தருவாகளோ: - கங்காணிக்கிழவன் எரிந்து விழுந்தான். “தொலைஞ்சுப்போ! கடேசித் தொங்கலுக்கு!”


கீழே இறகி வைக்கப்பட்ட வெற்றுக்கூடை மீண்டும் முதுகுக்குத் தாவியது. கடைசி நிரைக்குப் போய்க் கொண்டிருந்த லெட்சுமியின் பருவத்துப் பின்னழகை அந்தக் கூடையோ, சேலை மேல் கட்டியிருந்த முரட்டுப் படங்குச் சாக்கோ மறைக்கவில்லை.


வழக்கமாகச் கொஞ்சம்  அதிகமாகவே றாத்தல் போட விரும்பும் எடுவைக்காரிகள் முதல் தொங்கல், கடைசித் தொங்கலுக்குப் போவதே இல்லை.


முதல் தொங்கலென்றால் ஒழுங்கான நிறை கிடையாது. எல்லாம் குறை நிறைகளாக ஆயிரம் தடவை ஏறி இறங்க வேண்டும். கடைசித் தொங்கலென்றால் பிள்ளைக்காரிகளோடை ‘மாரடிக்க’ முடியாது. ஆடி அசைந்து அம்மன் பவனி வருவதுபோல் எட்டுமணிக்குத்தான் வருவார்கள். ஒருமணிநேரம் ஏதோ பெயருக்கு நாலைந்து றாத்தலை எடுத்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் ‘அடியே ஏங்கொழுந்தையும் நிறுத்துர்றீ….’ என்று பல்லைக்காட்டிவிட்டு லயத்துக்கோ பிள்ளைக் காம்பிராவுக்கோ போய்விடுவார்கள். அவர்களுடைய கொழுந்தையும் நிறுத்துக்கொள்ள வேண்டும், கூடையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். போதா குறைக்கு அவர்களுடைய நிறையையும் சேர்த்து எடுத்துப் போக வேண்டும். இந்தத் தொல்லைகளுக்காகத்தான் அவள் அங்குமிங்கும் போவதில்லை. அவளுடைய கலகலத்த சுபாவமும் எளிமையான அழகும் மற்றப் பெண்களுக்கு மத்தியில் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆகவே அவளை மற்றப் பெண்களும் போகவிடுவதில்லை. ஆனால் இன்றோ?


”ஆமா! இந்தப் ‘பொட்டைச்சி’களுக்கு இன்னைக்கு என்ன வந்தது?” கடை நிரைக்கு வந்து நின்றாள். அந்த மலையிலேயே கடை நிரை, எல்லோரும் சேர்ந்து ஏதோ அவளை மட்டும் ஒதுக்கிவிட்டது போன்ற தனிமை உணர்வு அவளது மனதைப்பிழிய, கூடையை இறக்கி வைத்து இடையில் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்குமேலே தூக்கி – இல்லாவிடில் தேயிலைச்செடி கிழித்துவிடுமே! – மீண்டும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்புநிறக் கயிறு அரைஞான் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது. கூடைக்குள்ளிருந்த தலைத்துண்டை உதறி, நெற்றியில் பூசிய இரட்டைக்கோடு விபூதி அழியாமல் தலையில் போட்டுக்கொண்ட கூடைக் கயிற்றையும் தலையில் மாட்டிக்கொண்டாள். கடைசியாகப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த தலைத்துண்டின் பகுதிகளைக் கயிற்றை மறைப்பதுபோல் மடித்துக் கயிற்றுமேல் போட்டுக் கொண்டாள். ஆயிற்று. நிரைக்குத் தயார்!


அப்போதுதான் அவளைக் கவனித்த பக்கத்து நிரைக்கிழவி தன் பொக்கை வாயைப் பிளந்தாள்.


“என்னடி ஆயா அதிசயமா இருக்கு! என்ன இந்தப் பக்கமா காத்து வீசுது?”


கிழவியை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, சூழ்கொட்டிக் கொண்டாள்.


“என்னடி குட்டி கேக்குறேன் ச்சுங்குறே?”


”ஒண்ணுமில்லை அம்மாயி! சும்மாதான் வந்தேன்”


“ஆயாயே! பொல்லாதவதான். சும்மாகூடவர்ற ஆளு இல்லே நீ, என்னதான் நடந்தது?”


லெட்சுமிக்குக் கோபம் வந்துவிட்டது.


”ஒப்புராணை! ஒண்ணுமில்லேங்கிறேன்”


“சரி… சரி…. காலாங்காத்தாலே ஆணையிடாதே”


மெளனமாகத் தேயிலைச்செடியைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு, பனியில் நனைந்துநின்ற கொழுந்துகளைக் கிள்லத் துவங்கினாள் லெட்சுமி. இரண்டு வீச்சிலே இரண்டு கையும் நிறைந்துவிட்டது. காம்புப்பகுதியைத் திருப்பிப் பார்த்தாள். பரவாயில்லை. எல்லாம் பிஞ்சுக்காம்புதான்! ‘நார்க்குச்சி’ ஒன்றுகூட இல்லை. கிழவியைத் திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் கிழவி ஒவ்வொன்றாக மெல்லமெல்லக் கிள்லிக் கொண்டிருந்தாள். காலைப் பனிக்கும், குளிருக்கும் அவள் கரங்கள் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.


“அம்மாயி! பொலி சொல்றியா, கொழுந்தைப் போட்டுக்கிர்றேன்…” முதல்பிடிக்கொழுந்தை கூடைக்குள் போடும்போது ‘பொலி’ சொல்வது ஒரு மரபு. சகுனம் பார்ப்பது மாதிரி! கிழவி ‘பொலி’ சொன்னாள்.


“போடு அப்பனே, சம்முகா! பொலியே… பொலி – பொலி – பொலி” லெட்சுமிக்குக் கை வேகமாக விழத்துவங்கியது. பங்குனி மாதப்பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெறிகண்டவர்களுக்கோ, அது ஓர் இன்பப்போதைதரும் விளையாட்டு. இளந்தளிர்கள் ‘சடசட’வென ஒடிந்து கொண்டிருந்தன. ஆனால் இன்பப் போதையோடு அல்ல! மனதுக்குள்ளே சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவளுக்கு அந்திக்கொழுந்து நிறுக்கும்போத%2
Be the first to vote for this post!

Leave a comment