1
நிரலாக்கங்களின் பிழைகண்டு பிடிப்பான் (Programming Mistake Detector) ஒரு அறிமும்

PMDஎன சுருக்கமாக அழைக்கபெரும் நிரலாக்கங்களின் பிழைகண்டுபிடிப்பான் (Programming Mistake Detector) என்பது புதியதாக உருவாக்கப்படும் பயன்பாடுகளின் நிரலாக்கங்களில் மூல குறிமுறைவரிகளை பகுப்பாய்வு செய்வதற்காக உதவிடும் ஒரு . கட்டற்ற கருவியாகும் .இதனை கொண்டு புதியதாக உருவாக்கப்படும் எந்தவொரு நிரலாக்கங்களிலும் பயன்படுத்தப்படாத மாறிகள், வெற்று பிடிப்பு தொகுப்புகள்(empty catch blocks) , தேவையற்ற பொருள் (object) உருவாக்கம் என்பன போன்ற பொதுவான நிரலாக்க குறைபாடுகளை கண்டுபிடித்திட முடியும் இது Java, JavaScript, Apex , Visualforce, PLSQL, Apache Velocity, XML, XSL, C, C++, Fortran, PHP, , C# ஆகிய கணினி மொழிகளிள் எழுதபட்டபயன்பாடுகளின் நிரலாக்கமூலக் குறிமுறைவரிகளை பகுப்பாய்வு செய்வதை ஆதரிக்கின்றது கூடுதலாக இது மூலக்குறி முறைவரிகளில் நகலெடுத்து ஒட்டுவத (copy-paste) கண்டு பிடிப்பதன் வாயிலாக போலியான நிரலாக்கங்களை தவிர்த்திட உதவுகின்றது

இந்த PMD ஆனது உள்ளமைக்கப்பட்ட பல்வேறு அடிப்படையான விதி தொகுப்புகளை உள்ளடக்கியதாகும் மேலும் இது தனிப்பயன் விதிகளை எழுதும் திறனை ஆதரிக்கின்றது. இருந்தபோதிலும் பயன்பாட்டின் நிரலாக்க மூலக்குறிமுறைவரிகளை கணினியின் இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்யும்போது உருவாகிடும் தொகுப்பு பிழைகளை (compilation errors) கண்டுபிடித்திட இது உதவாது , ஏனெனில் இது நன்கு உருவாக்கப்பட்ட மூல குறிமுறைவரிகளை மட்டுமே பகுப்பாய்வு செய்கின்றது இது திறனற்ற மூலக்குறிமுறைவரிகளை அல்லது மோசமான நிரலாக்க பழக்க வழக்கங்களை மட்டும் சுட்டிகாட்டிடும் , அவை மூலக்குறிமுறைவரிகளில் அதிகமாககுவிந்தால் நிரலாக்கத்தின் செயல்திறன் குறைந்து அதனை பராமரிப்பு செய்வதற்கான தடங்கலும் உருவாவதற்கு ஏதுவாகிவிடும்.நம்முடைய புதிய நிரலாக்கங்களின் உருவாக்க செயல்பாட்டில் ஒருங்கிணைத்து செயல்படுவதற்கு இந்த PMD ஆனது மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது மேலும் நம்முடைய அடிப்படை குறிமுறைவரிகளின் தரத்தை செயல்படுத்த, இதனை ஒரு தரமான வாயிலாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.இது நிரலாக்கங்களில் உள்ள Possible bugs,Dead code ,Empty if/while statements.,Suboptimal code,Duplicate codeஎன்பன போன்ற பல்வேறு குறைபாடுகளை கண்டுபிடித்திட உதவுகின்றது , இதனுடைய பெயர் அதிகார பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை ஆயினும் இது பல்வேறு அதிகாரபூரவமற்ற பெயர்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க கிடைக்கின்றது இருந்தபோதிலும் இது Apache License 2.0 , the LGPL.[1] ஆகிய அனுமதியின் கீழான BSDishஎனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது இதனை கட்டளை வரியிலிருந்து ஒரு Maven goal ஆக ஒரு Gradle task ஆக ஒரு Ant task ஆக இயக்கி பயன்பெறலாம் மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும https://pmd.github.io/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

Leave a comment