1
மரையாம் மொக்கு - எனக்குப் பிடித்த சிறுகதை

 

மருதூர்க்கொத்தன்

சுமக்க முடியாமல் சுமந்து வந்த கயிற்று வலைப்பந்தை கீழே போட்ட காத்துமுத்துவின் உடலெல்லாம் சொர்க்க சுகம் பரவியது.

வருஷக்கணக்காய் கடல் நீரில் குளித்து ஆனமட்டுக்கும் உப்பை உறுஞ்சிய கொண்டடி வலைக்காலொன்றின் தும்புக்கயிற்று வலையைச் சுற்றிய பெரும்பந்து அதைத் தோளில் சுமந்து தொத்தல் உடம்பு இறால் கருவாடாய் வளைய, கடற்கரைக் கொதிமணலில் கால்கள் புதைய, காய்ச்சிய இரும்புக் கோல்களாய்ச் சூரியக் கதிர்கள் சுட்டெரிக்கத் தூக்கி வந்தார்.


கீழே போட்ட கயிற்று வலைப்பந்தை ஆசனமாக்கி அமர்ந்ததும் எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் நெஞ்சுக்கூடு விரிய சட்டியிலிருந்து தூக்கியதும் உலைமூடியில் படிந்து கொட்டும் நீராவித் துளிகளாக அந்த நோஞ்சான் உடம்பெங்கும் பீச்சிக் கிடந்தது. வெண்மை பெயர்ந்து சாம்பல் நிறம் பூத்த இனிக்கிழிய இடமில்லை என்றாங்கு கிழிந்து தோளில் சும்மாடாய்ச் சேவகம் செய்த துண்டை எடுத்து முகத்தையும் உடம்பு முழுவதையும் ஓரவஞ்சனை இன்றித் துடைத்தெடுத்தார். அந்தத் தென்னங்காலை தந்த குளிர்நிழலும் உப்புக்கலந்த கடற்காற்றின் தழுவலும் சற்று இதமளிக்க பாரச்சுமையைச் சுமந்த உடல்நோவு சிறிது மறைந்த மாதிரி இருந்தது.

தென்னங்காலையின் மத்தியில் பக்கிசுப்பலகை மேசையில் கிளாஸ் சாதியும், கல்லடுப்பில் சூடேறிய அலுமினியப் பானையும், மட்டைத்தாள் பெட்டிகள் இரண்டொன்றுமாக உசனாரின் நடமாடும் தேநீர்க்கடை சோம்பி வழிந்தது. கொண்டடி வலைத் தொழிலாளர்கள் தோணிவலைச் சொந்தக்காரர்கள், மீன் வியாபாரிகள், கறிமீனெடுக்க வருபவர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட கடை. காலையில் விரியும் மதியத்திலோ அல்லது மாலையிலோ சந்தடி ஓய்ந்ததும் கடைகட்டும்.


கிளாஸ்களில் தேனீர் ஊற்றிக் கொண்டிருந்த உசனாரும், மணலில் அமர்ந்தும், நின்றும், தென்னை மரங்களில் சாய்ந்தும், தேனீர் பருகியும், புகையின்பம் நுகர்ந்தும், சும்மாவும் காட்சி கொடுத்த அனைவரும் காத்தமுத்துவைப் பார்த்த பார்வை ஆச்சரியம், அனுதாபம், மலைப்பு போன்ற உணர்வுகளை விநியோகம் பண்ணியது. காத்தமுத்தண்ணே! உனக்கென்னகா விசர் புடிச்சிற்றா? இந்தப் பெரிய சுமையைத் தூக்கி வந்த ஒண்ட ஓர்மதான் ஓர்ம! பொடறி முறிஞ்சி நடக்கக்கூடாதது நடந்திற்றா வருமா? உசனாரின் கரிசனமான வார்த்தைகளுக்குப் பதிலாக காத்தமுத்துவின் சுருங்கிய இதழ்க்கடைகளில் ஒரு குறுஞ்சிரிப்புப் பதிலாக விரிந்தது. பஞ்சம், பசி, அவலங்கள் என்னதான் பிரயத்தனப்பட்டாலும் கைகூடாத, வாழ்வதற்கான போராட்டங்கள் என்று எத்தனையோ செய்திகளை அது சொல்ல முனைந்தது.


”உசன் தம்பி… என்னகா சொன்னாய்? நம்மட நாட்டில மலிவான சங்கதி நொளும்புஞ்சாவுந்தான் எண்டது தெரியாதா உனக்கு. சாவு வந்தா வந்திற்றுப் போகுது.”


”காத்தமுத்தண்ணே நீ சொல்லுறது சரிதாங்கா. சாவுமலிஞ்ச நாட்டில இருந்துக்கிட்டு சாவப்பத்தி கவலைப்படலாமா? வாழ வேண்டிய வயசில் இளசுகளெல்லாம் வங்கொலயிலே சாகுதுகள். எங்கேயோ பொதச்ச சவங்களைத் தோண்டியெடுத்து லொறியில் ஏத்திக்கிட்டு முந்தனாத்து கொண்டு போகக்குள்ள நானும் மெயின் றோட்டில நிண்டன். மனிதப் பொண நாத்தத்தயும் அறிஞ்சிக்கிட்டேன்.மீன் வியாபாரி இஸ்மாலெப்பை மேற்கண்டவாறு சூறி, சிகரெட் குறையை இழுத்து ஊதிவிட்டார்.


போனகிழமை முப்பது வயசும் நிரம்பா முகம்மதுதம்பி மாஷ்டர் திடீரெண்டாப்பபோல மெளத்தாப்போனார். அழகான வாகான இளந்தாரி. என்னமோ மாரடைப்பாம். வகுத்துக்கொடும தாங்காம இந்த எழுபது வயசிலையும் கரக்கடக்கி வந்து வலை இழுத்து மாயிறன். மகுத்து நமக்கிட்ட வர என்ன பயத்தபயப்பிடுது. காத்தமுத்துக்கும் என்ர வயசுதானே இருக்கும்?”


தென்னை அடியில் சாய்ந்தவாறு இருந்து கூலிக்கு வலையிழுக்கும் ஆதம்பாவாவின் கேள்வியை அடுத்து, காத்தமுத்து பேச்சைத் தொடங்கினார்.


”இல்லையா பின்னே! மீசை மொளக்காத காலத்தில இருந்து நாம இந்தக் கடக்கரயில வலயிழுக்கிறம். ஆதங்காக்கா இன்னொரு சங்கதி தெரியுமா? எல்லாரும் கேட்டுக்கங்க. உடம்பில ஒரு வருத்தம் இருந்தாத்தான் கெதியாச் சாவு வரும். எனக்குள்ள ஏழெட்டு வருத்தம். கொல்லுற வேலய ஆரு செய்யிறது எண்டதில அவியளுக்கள்ள இழுபறி. அவய போராடி ஒரு முடிவெடுக்க மட்டும் அலாறுப்பட வேண்டிக்கிடக்கு.”


அங்கு எழுந்த கொல்லென்ற சிரிப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது.


“அப்ப ஒனக்குள்ள நோய்கள் நம்மட பொடியனுகள் மாதிரி என்ன? அவியளுக்குள்ள சண்டை முடியிற எப்ப? நாடு புடிக்கிற எப்ப?”


சற்றுத் தள்ளியிருந்த மிஸ்கின் பாவாவின் பேச்சைக் கேட்டு உசனார் கடுப்பானார்.


“மிஸ்கின் பாவாக்கு மொக்குத்தனம் போகாது. இவபோய் பொடியனுகளுக்குப் பொறந்தா மகுறுவந்தான்.”


”நான் சொன்னதில் என்னகா பொழ இருக்கு? பொடியனுகளுக்கு இது புத்தியா அமயட்டன்.”


“சரி, சரி…. பேச்சு எங்கபோகுது. உசனார் எனக்கொரு றோஸ்பாணும் பிளேண்டியும் பீடியுந்தா. சின்னக் கொடலப் பெரியகொடல் தின்னுது.”


காத்தமுத்து உரயாடலைத் திசை திருப்பினார்.


“பழய பாக்கி அம்பது உருவாக்கு மேலே கிடக்கு. எப்ப இந்தக் கடல்ல மீன் படுற? எப்ப நீ எனக்கு காசு தாற?”


“பயப்படாதகா உசனார். உப்புத்தண்ணி ஆத்துல நாணல் பக்கமாகக் கொடுவா சுளிக்குது. இண்டைக்குச் சில்லி வலைகட்டி மரையாம் மொக்கால இடிச்சிப் பாக்கப்போறன். தெய்வம் முகம் பாத்தா நாளக்கே பாக்கியில்லாம காசொண்ட கைக்கு வரும்.”


உசனார் மறு பேச்சில்லாமல் கிளாஸ் வழியத் தேநீரை நிரப்பி இரண்டு றோஸ் பாண்களையும் கொடுத்தார்.


“என்னப்பா ஒரு றோஸ்பாணத்தானே கேட்டன்.”


“நீ களைச்சிப்போய்க் கிடக்குற களைப்புக்கு ஒரு றோஸ்பாண் என்னத்துக்கு காணும். ரெண்டையுந்தின்னு காணாட்டி கேளு இன்னமும் தாறன்.”


”ஏழைக்கு ஏழை துண. ஓண்ட மனசு கடல் போல.”


கயிற்றுப்பந்தை விட்டிறங்கி மணலில் சம்மாணம் போட்டமர்ந்து றோஸ்பாணை உடைத்துத் தேனீரில் ஊறவைத்துச் சாப்பிடும் கடமை ஆரம்பமானது. மிஞ்சியிருக்கும் பற்கள் றோஸ்பாணை மொறு மொறென நறுக்கி உண்ணும் வக்கற்றவை. காலை உணவு கிடைக்கப் பெறாத வயிறு. வலை இழுத்தும் கயிறு சுமந்தும் அலுத்த உடம்பு. பதினொன்றைத் தாண்டிய பகல். இத்தகைய தகுதி உள்ளவர்களைக் கேட்கவேண்டும். றோஸ்பாண் பிளேண்டியின் சுவை மகாத்மியத்தை விளங்கிக் கொள்ள. கட்டித் தயிரும் தேனும், கோழிக்கூட்டு வாழைப்பழமும் சேர்ந்த கூட்டுத்தரும் சுவையின்பத்தையும் மிஞ்சிய சுகானுபவம் முகத்தில் படரப் பாணருந்தித் தேனீர் பருகி முடித்தார். பீடியையும் வாங்கி நெருப்புக் கொள்ளியில் பற்ற வைத்து இழுத்துப் புகை வளையத்தை ஊதித் தள்ளியபோது, தளர்ந்த தசைகள் முறுக்கையும், அடைந்த முதுமை இளமையையும் மீளப் பெற்றது போன்ற உணர்வில் மனிதர் மிதந்தார்.


ஆள் தேறும
Be the first to vote for this post!

Leave a comment