1
சொல் வரிசை - 255


சொல் வரிசை - 255 புதிருக்காக, கீழே  ஏழு (7)    திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   கடல் மீன்கள்(---  ---  ---  ---  ---  ---
 மணி முத்தென வந்தவன் நீயே)  

2.   செந்தூரப் பாண்டி(---  ---  ---  ---  ---  --- மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே)

3.   காவேரியின் கணவன்(---  ---  ---  ---  ---  --- பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே)

4.   மலைக்கள்ளன்(---  ---  --- நாடி வாராய் ஆசை ராஜா)

5.   அம்பிகை நேரில் வந்தாள்(---  ---  --- உனது யோகம் ஆனந்தம்)
   
6.   பாத பூஜை(---  ---  ---  ---  ---  --- தேன் பழம் பழம் இது என் பசியை வளர்ப்பது)

7.   நினைத்ததை முடிப்பவன்(---  ---  ---  --- தானே உன் மேனி தள்ளாடலாமா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Who Voted

Leave a comment