1
தகவல் தொடர்பு துறையில் பணிபுரியும் நிரலாளர் ஒருவரின் குடும்பத்தின் கணவன் மனைவி இடையேயான ஒருநாள் உரையாடல

கணவன்: ( பணிமுடித்து தன்னுடைய வீட்டிற்கு தாமதமாகத் திரும்புகிறார்) அன்பே, இப்போது நான் வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளேன்(logged in ).
மனைவி : என்ன??? இப்போதுதான் வருகின்றீர்களா? மளிகை பொருட்கள்வாங்கிகொண்டு வந்தீர்களா?
கணவன்: தவறான கட்டளை( Bad command) அல்லது கோப்பின் பெயரை( filename) கூறவும்.
மனைவி : என்ன???ஆனால் நான் காலையில் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போன்று திரும்பு திரும்ப சொன்னேனே!
கணவன்: பிழையான தொடர்(Erroneous syntax ). அதோடு நிறுத்து(Abort)?
மனைவி : என்ன???. பரவாயில்லை நம்முடைய வீட்டிற்கு புதிய தொலைகாட்சி எப்போது வரப்போகின்றது?
கணவன்: மாறி( Variable) எதுவும் காணப்படவில்லை( not found)
மனைவி :என்ன??? எப்படியாவது போகட்டும் குறைந்த பட்சம், உங்களுடைய கடனட்டையையாவது என்கையில் கொடுங்கள், நானாவது கடைக்கு போய் எனக்கு பிடித்தவைகளை வாங்கி வருகிறேன்.
கணவன்:பகிர்வு மீறல்(Sharing Violation ). கோரிக்கை அனுகல்மறுக்கப்பட்டது( Access denied)
மனைவி :என்ன??? நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டீர்களா அல்லது கணினிகளை திருமணம் செய்து கொண்டீர்ர்களா ?
கணவன்: பல அளவுருக்கள் (Too many parameters )என்முன் வருகின்றன..
மனைவி :என்ன??? உங்களைப் போன்ற ஒரு முட்டாளை நான் திருமணம் செய்து கொண்டு மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் .இப்போதே நான் எங்களுடைய தாய்வீட்டீற்கு புறப்படுகின்றேன்
கணவன்: தரவு வகைகள் எதுவும்பொருந்தவில்லை(Data type mismatch ).
மனைவி :என்ன??? நீங்கள் எதுக்கும் பயனற்றவர் ஒன்றுக்கும் உதவாதவர்.
கணவன்: அதுவே இயல்புநிலையாகும்(It is by Default ).
மனைவி :என்ன??? என்னுடைய தலைஎழுத்து அது சரி உங்கள் சம்பளம்தான் எவ்வளவு?
கணவன்: கோப்பு பயன்பாட்டில் உள்ளது ( File in use) … பின்னர் முயற்சிக்கவும்.
மனைவி :என்ன??? நம்முடைய குடும்பத்தில் எனக்கு என்னதான் மதிப்பு?
கணவன்: இதுவரை மருந்து கண்டுபிடிக்கமுடியாத கோரானா போன்று பெயர்தெரியாத வைரஸ்( Unknown Virus)
எச்சரிக்கை : தகவல்தொழில்நுட்பத்துறையில் நிரலாளராக இருக்கும் மணமகனுடன் திருமணம் நடந்தால் வாழ்க்கையில் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்

Leave a comment