1
தகவல் தொழில் நுட்பத்துறை பணியாளர் நிறுவன முதலாளியிடம் ஊதிய உயர்வு கோருதல்

தகவல் தொழில்நுட்பத்துறைபணியாளர்: வணக்கம் ஐயா!,

தகவல் தொழில்நுட்பத்துறைநிறுவன முதலாளி: வணக்கம்! , உள்ளே வாருங்கள்!. இருக்கையில் அமருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?

பணியாளர்: மிக்க நன்றி! ஐயா!, மதிப்புமிக்க நமது நிறுவனத்தில் நான் கடந்த பத்துஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றேன் என்பது உங்களுக்கேத் தெரியும்.

முதலாளி: ரொம்ப சரி.

பணியாளர்: நான்சுற்றி வளைத்து எல்லாம் பேசவிரும்பவில்லை ஐயா! நான் கடந்த பத்துஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதால் என்னுடைய சம்பளத்தை மட்டும் உயர்த்தி வழங்குமாறு கோருகின்றேன் ஐயா! அதுமட்டும் தான் என்னுடைய ஒரேயொரு கோரிக்கையாகும் ஐயா! மேலும் . நான் தற்போது வாங்கும் சம்பளத்தை உயர்த்தி எனக்கு பணி வழங்க நான்கு நிறுவனங்கள் தயாராக உள்ளன ஐயா! இருந்தாலும் நான் முதலில் உங்களுடன் பேசியபின் முடிவு செய்யலாம் என விரும்புகின்றேன் ஐயா!

முதலாளி: ஊதிய உயர்வா ! ஆம். உங்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும்தான். ஆனால் கோரான பாதித்த தற்போதைய சூழல் சரியானதாக தோன்றவில்லையே! என்ன செய்வது?

பணியாளர்:: தற்போதை நிலையை நான் புரிந்து கொள்கிறேன் ஐயா!, தற்போதைய பொருளாதார வீழ்ச்சி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன்ஐயா!, ஆனாலும் நான் கடந்த பத்தாண்டிற்கும் மேலாக இந்த நிறுவனத்திற்கு அளித்த எனது கடின உழைப்பையும், என்னுடைய விசுவாசத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் ஐயா!

முதலாளி: இந்த காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கின்றேன், அதனால் உங்களை போன்ற அனுபவமிக்கவர்களை நான் இழக்க விரும்பவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் உங்களுக்கு பத்து சதவிகித உயர்வுடன் நீங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நாட்களுடன் கூடுதலாக பத்து நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ள அனுமதிக்கின்றேன். சென்று வாருங்கள்

பணியாளர்:: மிக்க நன்றி ஐயா!

முதலாளி: நீங்கள் செல்வதற்கு முன், உங்களை எந்தெந்த நிறுவனங்கள் தற்போது வாங்குவதை விட கூடுதலாக சம்பளத்துடன் உங்களை பணிக்கு அழைக்கின்றன?

பணியாளர்: ஓ! அவைகளா ஐயா! , வேறு ஒன்றுமில்லை கோரானாவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் நான் வீட்டிலேயே இருந்து பணிபுரிவதால் அதிக ஓய்வு கிடைக்கின்றது ஐயா அதை வீணாக்குவதா என மின்சார வாரியம், , குடிநீர்வடிகால் வாரியம் , தமிழ்நாடு காவல்துறைஆகியவற்றில் அவ்வப்போது அவர்கள் கோரும் சிறுசிறு பணிகளை செய்து தருகின்றேன் ஐயா !

முதலாளி:என்ன! உங்களை அதிக சம்பளத்தில் வேறு தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிக்கு அழைக்கவில்லையா!

Leave a comment