1
ஜாவா எனும் கணினிமொழியின் நிரலாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு

அனைவருக்கும் வணக்கம்! நாளொன்றுக்கு ஒரு கட்டுரைவீதம் தினமும் கணினி தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரைகளை என்னுடைய "இனிய, எளிய கணினி தகவல்" எனும் வலைபூவில் பதிவேற்றி வருகின்றபோது இடையில் சிறிது இளைப்பாறுமாறு அவ்வப்போதுசிரிப்பு கொத்துகளையும் இன்றுமுதல் பதிவேற்றவிருக்கின்றேன் என்றும் உங்கள் அனைவருடைய ஆதரவும் இருக்கும் என நம்பிக்கையுடன்

நேர்முகத்தேர்வு நடத்துபவர்:. ஜாவாஎனும் கணினிமொழியில் ஒரு சுருக்கஇனம்( Abstract class) இடைமுகம் ( Interface) ஆகிய இரண்டிற்கும் இடையில் என்ன வித்தியாசம்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர் : அவைகளுக்கு இடையில் விதிமுறைகள்மட்டுமே வேறுபடும் ஐயா! அதற்கு மேல் கூறுவதற்கு வேறு எதுவும் இல்லை ஐயா!

நேர்முகத்தேர்வு நடத்துபவர்:. அதுசரி! ஜாவாஎனும் கணினிமொழியில் JFC என்றால் என்ன?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர் : அது வேறு ஒன்றுமில்லை ஐயா! J என்றால் ஜிலேபி, Fஎன்றால் ஃபேண்டா & Cஎன்றால் காபி அ்வ்வளவுதான் ஐயா!

நேர்முகத்தேர்வு நடத்துபவர்:. மிகவும் சரி! ஜாவாஎனும் கணினிமொழியில் 2 அடுக்கு( 2- tier) கட்டமைப்பு, 3-அடுக்கு(3- tier) கட்டமைப்பு (Architecture )ஆகிய இரண்டை பற்றி விளக்கமாக கூறுங்களேன்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர் : ஸ்கூட்டர்கள் போன்றவைகளில் 2 டயர்கள் இருப்பதனால் அவைகளை இரு சக்கர வாகன கட்டமைப்பு என்றகின்றோம் ஐயா!, ஆட்டோரிக்ஷாக்களில் 3 டயர்கள் இருப்பதனால்அதனை மூன்றுசக்கர வாகன கட்டமைப்பு என்றகின்றோம் ஐயா!.

நேர்முகத்தேர்வு நடத்துபவர்:. எல்லாம் சரி!ஜாவாஎனும் கணினிமொழியிலில் உருவாக்கப்பட்ட தொலைநிலை சேவையகத்தில்( remote server) 5இற்கும் மேற்பட்ட பொருட்களை( objects) ஒரு நிறுவனம் சேமிக்க விரும்புகின்றது? எந்தவழி முறையை பின்பற்றப்படவேண்டும்?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர் : அவ்வாறான பணியை மிகஎளிதாக செய்வதற்காக விரைவு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பினால்போதும் ஐயா! மிகவிரைவாகவும் மிககுறைந்த செலவில் போய்சேர்ந்துவிடும் ஐயா!.

நேர்முகத்தேர்வு நடத்துபவர்:. ரொம்ப சரி! ஜாவாவின் CORBAஇல் ஒரு பொருளை (object) மாற்றியமைத்திட முடியுமா?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர் : அவ்வாறு மாற்றுவதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.ஐயா!நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பியபடி மாற்றிகொள்ளலாம் ஐயா!,

நேர்முகத்தேர்வு நடத்துபவர்:. அனைத்தும் சரி! ஜாவாஎனும் கணினிமொழியிலில் 2 நூல்களை( 2 threads) ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்ளச்செய்வது?
நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர் : ஐயா! என்னை மன்னிக்கவும், உயிரினங்கள் மட்டுமே ஒன்று கொன்று தொடர்பு கொள்ள முடியுமேதவிர உயிரற்றஇரண்டு நூல்களால் அவ்வாறு கொள்ளமுடியாது என அறுதியிட்டு கூறுகின்றேன் ஐயா! .

நேர்முகத்தேர்வு நடத்துபவர்:. அனைத்து ஜாவா எனும் கணினிமொழி தொடர்பான கேள்விகளுக்கும் எங்களுக்கே தோன்றாத பதில்களை கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி! உங்களுடையஇந்த அசாத்திய திறனிற்கு நீங்கள் தனியாக ஜாவா தொடர்பான ஒரு நிறுவனத்தினையை துவங்கி நடத்தமுடியும்அவ்வாறு நடத்தி னால் எங்களை உங்களுடைய நிறுவனத்தில் சேர்த்து கொள்ளுங்களேன். .

என விடைகொடுத்து அனுப்பினார்

Leave a comment