1
VeraCrypt ஒரு அறிமுகம்





VeraCrypt என்பது விண்டோஸ், மேக் ஓஎஸ்எக்ஸ் , லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்டடும் திறன்கொண்ட ஒரு கட்டணமற்ற கட்டற்ற வட்டுகளின் குறியாக்க பயன்பாடகும்.





இது TrueCrypt தொகுதிகளில் பதிவேற்றம் செய்திட முடியும். இது அவை VeraCrypt வடிவத்திற்கு மாற்றிடுகின்றது. இதுIDRIX (https://www.idrix.fr) மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது மேலும் இது TrueCrypt 7.1a ஐ அடிப்படையாகக் கொண்டதாகும்.
கணினி கோப்புகளுடைய பகிர்வுகளின் குறியாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகளுக்கு இது மேம்பட்ட பாதுகாப்பைச் சேர்க்கிறது, இது கணினியின்மீது நடத்தப்படுகின்ற மிக முரட்டுத்தனமான தாக்குதல்களிலிருந்து தடுத்து நம்முடைய கணினியை காத்திடுகின்றது. இது TrueCrypt இல் காணப்படும் பல்வேறு பாதிப்புகளையும் பாதுகாப்பு சிக்கல்களையும் முழுமையாக தீர்வுசெய்கின்றது.
இந்த மிகமேம்பட்ட பாதுகாப்பு, பயன்பாட்டு கட்டத்திற்கு எந்த செயல்திறனின் தாக்கமும் இல்லாமல் மறைகுறியாக்கப்பட்ட பகிர்வுகளைத் திறக்க ஒருசில நேரங்களில் தாமதம் மட்டுமே கொண்டது, ஆயினும் மறைகுறியாக்கப்பட்ட தரவை அணுகுவதையும் தாக்குதலையும் மிகவும் கடினமாக பாதுகாக்கின்றது.
இதனுடைய t முக்கிய வசதி வாய்ப்பகள்பின்வருமாறு
ஒரு கோப்பிற்குள் ஒரு மெய்நிகர் மறைகுறியாக்கப்பட்ட வட்டினை உருவாக்கி அதை உண்மையான வட்டாக பதிவற்றம்செய்திட அனுமதிக்கின்றது.
யூ.எஸ்.பி ஃபிளாஷ் டிரைவ் அல்லது ஹார்ட் டிரைவ் போன்ற முழு பகிர்வு அல்லது சேமிப்பக சாதனத்தையும் மறைகுறியாக்கம் செய்து பாதுகாக்கின்றது.
விண்டோஸ் நிறுவப்பட்ட கணினியின் பகிர்வு அல்லது இயக்ககத்தை மறைகுறியாக்கம் செய்து பாதுகாக்கின்றது.
மறைகுறியாக்க செயலானது தானியங்கி, செயல்படவும் அவ்வாறான நிகழ்வு நேரத்திலும் மிகவும்பாதுகாப்பானதாக இருக்கின்றது
இணைப்படுத்தல் பைப்லைனிங் ஆகியவற்றை இயக்கி குறியாக்கம் செய்யப்படாதது போல தரவைப் படிக்கவும் எழுதவும் அனுமதிக்கின்றது.
நவீன செயலிகளில் குறியாக்கத்தை வன்பொருள்-துரிதப்படுத்தமுடியும்.
இதில் வெளியிடப்பட்ட அனைத்து கோப்புகளும் முக்கிய ஐடி = 0x680D16DE உடன் கையொப்பமிடப்பட்டு முக்கிய சேவையகங்களில் கிடைக்கின்றன





கடவுச்சொல்லை வெளிப்படுத்துமாறு நம்முடைய எதிரி யாராவது ஒருவர் நம்மை கட்டாயப்படுத்தினால், நம்பத்தகுந்த நம்பகத்தன்மையை இதுவழங்குகிறது: இதுமறைக்கப்பட்ட தொகுதி (steganography) , மறைக்கப்பட்ட இயக்க முறைமை ஆகியவற்றை கொண்டது.
மேலும் விவரங்களுக்கு https://www.veracrypt.fr/en/Home.html எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a comment