1
தொண்ணூற்றி ஒன்பது வயது இளைஞனின் சுறுசுறுப்பான இலக்கியப் பயணம் நிறைவு பெற்றது.


அஞ்சலிக் குறிப்பு

‘சக்கடத்தார்நாடகம் பார்த்திருக்கின்றீர்களா?


ஒருகாலத்தில் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறிய அந்த நாடகத்தில், அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து கேட்கக்கூடாத பல கேள்விகள் கேட்டபடியே ஒருவர் வருவார். அந்த ஆசிரியர் பாத்திரத்தில் வருபவர்தான் இங்கே கீழுள்ள மூன்று சம்பவங்களிலும் பாத்திரமாகியுள்ளார். அவர் கலைவளன் திரு. சிசு நாகேந்திரன்.


இந்த 'சிசு'வில் ஒரு விஷேசம் இருக்கின்றது. தாய் பெயர் சின்னம்மாள்; தந்தை பெயர் சுந்தரம்பிள்ளை. இருவரினதும் முதலெழுத்துக்கள்தான் சிசு. எம்மத்தியில் வாழ்ந்து வந்த கலை, இலக்கிய 'முதுசொம்' ஆன இவர் 2020 மாசி மாதம் 10 ஆம் திகதி சிட்னியில் காலமானார்.


அவர் பற்றிய சில சுவாரஸ்யமான சம்பவங்கள்.


சம்பவம் ஒன்று (2010)
ஆடி, ஆவணி மாதங்களில் மெல்பேர்ண்ணில் கடும் குளிராக இருக்கும். மாலை நேரம் 6 மணி. வெளியே கடும்குளிர், காற்று.


போர்வையை இழுத்து மூடிக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தேன். உறக்கத்திற்காக அல்ல. ஒன்றும் செய்யமுடியாத நிலை. யாருடனாவது கதைக்க வேண்டும் போல இருந்த்து. சிசு ஐயா ஞாபகத்திற்கு வந்தார். கைத்தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன். இணைப்புக் கிடைத்தது. அவரது குரலில் சற்றே களைப்புத் தென்பட்டது.


"என்ன கதைப்பதற்கு கஸ்டப்படுகின்றீர்கள் போல கிடக்கு? ஏதாவது சுகம் இல்லையா" என்று கேட்டேன்.


"இல்லைத் தம்பி... உதிலை நடை ஒண்டு போட்டு வாறன். கிட்டத்திலைதான். தெரிஞ்ச ஆக்கள் வீடு. அதுதான் களைக்குது. ஒரே காத்தும் மழையுமாக் கிடக்கு. அதுதான்  ஒரு மரத்துக்குக் கீழை நிக்கிறன்."


"அப்ப நான் ரெலிபோனைக் 'கட்' பண்ணிப் போட்டு பிறகு கொஞ்சத்தாலை எடுக்கிறன்"


"இல்லை... இல்லை. கதைக்கலாம்"


அதன் பிறகு என்னுடன் கதைத்து முடித்து விட்டுத்தான் அவர் தனது வீட்டிற்குச் சென்றார்.


உடற்பயிற்சி - அதுவே அவரது இளமையின் இரகசியம். இன்னுமொன்று சொல்லுவார் தேவைப்பட்டால் மட்டுமே சாப்பிடுவேன்.சம்பவம் இரண்டு (2010)

ஒருமுறை எனது வீட்டில் இலக்கியக் கலைச்சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் முடிவுற இரவு ஏழு மணியாகிவிட்டது. குளிர்காலம் ஆதலால் இருட்டிவிட்டது. சிசு ஐயா என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார்.


ஐயா... நீங்கள் கதைச்சு முடிச்சிட்டு வாசலடிக்கு வாருங்கோ. நான் தூரத்திலை காரை விட்டிருக்கிறன். எடுத்து வாறன்சொல்லிவிட்டு சந்திரன் தனது காரை எடுப்பதற்காகப் போய்விட்டார்.


நான் புத்தகம் ஒன்றை எடுப்பதற்காக அறைக்குப் போய்விட்டேன். அந்த நேரம் பார்த்து சந்திரனின் கார் ஹோன்சத்தம் கேட்டது. நான் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தபோது சிசு ஐயாவைக் காணவில்லை.


பின்னாலை போங்கோ. சிசு ஐயா விழுந்துவிடப் போகின்றார்மனைவி என்னைத் துரிதப்படுத்தினார்.


வாசலை நோக்கி அசுரகதியில் காலடிகளை எடுத்து வைத்தேன். வாசலைத் தாண்டியதும் வெளியே இருந்த சீமெந்துக்கட்டின்மீது தடுக்கி விழப் பார்த்தேன். சுதாரித்து எழுந்து சந்திரனின் காரை நோக்கினேன்.

இருட்டிற்குள்ளிருந்து பளிச்சென ஒரு பல்வரிசை நீண்டு விரிந்து தெரிந்தது. கண்ணாடிச்சட்டத்தைப் பதித்து அதனூடாக என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார் சிசு ஐயா.சம்பவம் மூன்று (2014)

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இது நடந்திருக்கும். இருவரும் கணினிக்கு முன்னால் இருந்து கூகிளில் தேடிக் கொண்டிருந்தோம். நான் எனது வலது சுண்டுவிரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடிப் பிடித்து தட்டிக் கொண்டிருந்தேன்.


“இஞ்சை விடும். என்ன நோண்டிக் கொண்டு நிக்கிறீர்?கீ போர்டைப் பறித்து கடுகதி வேகத்தில் தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டார்.


அன்று மாலை நகரத்துக்குச் செல்லும் புகையிரதத்தில் அவரை ஏற்றி விடுவதற்காக அருகில் இருக்கும் ‘சண்சைன் புகையிரத் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றேன்.


புகையிரத மேடையில் நிற்கின்றோம். இன்னும் ஐந்து நிமிடங்களில் புகையிரதம் வந்துவிடும்.


“ஐயா! போனகிழமை பள்ளிக்கூடத்திலை படிக்கிற பிள்ளையொண்டு காதுக்குள்ளை கொழுவிக்கொண்டு பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தைக் கடக்கேக்கை ரெலியிலை அடிபட்டுச் செத்துப் போச்சுது.


நல்ல காலமடா! ஞாபகப்படுத்தினாய். 3CR றேடியோ ஆறு மணிக்கு இருக்குசொல்லிய்படியே தனது கைப்பையினுள் இருந்த றேடியோவை எடுத்து முறுக்கினார். ‘ஹெட் போனைகாதிற்குள் மாட்டினார்.


புகையிரதம் வந்தது.


“ஐயா... றெயின் வெளிக்கிடப் போகுது.


“தெரியும்.


தொடர்ந்தும் கதைத்தபடி நின்றுவிட்டு, றெயின் நகரத் தொடங்கியதும் அதனுடன் கொஞ்சத் தூரம் ஓடி பாய்ந்து ஏறினார். தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டபின் அங்கிருந்த படியே கை காட்டினார். பல் வரிசை பிரகாசித்தது.


சம்பவம் நான்கு (2019)

2019 மார்கழி மாதம் 2ஆம் திகதி சிட்னியில் இருக்கும் Beecroft Nursing Home இல் அவரைப் பார்ப்பதற்காக நானும் மனைவியும் சென்றோம். மாலை 3 மணி இருக்கும். போனபோது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

“சிசு ஐயா” என்று கூப்பிட்டபொழுது, திடீரென்று படுக்கையைவிட்டு எழுந்து கொண்டார்.

“என்னைத் தெரிகின்றதா?” எனக் கேட்டேன்.

“சூரியன்ரை பக்கம் நிண்டா எப்பிடித் தெரியும். வந்து எனக்குப் பக்கத்திலை இரும்” என்றார். பக்கத்திலே போய் அமர்ந்தபோது அவர் சிரித்த சிரிப்பிற்கு அளவில்லை. இரண்டொரு பற்களில் வெள்ளி முழைத்திருந்தன.

“நீங்கள் உந்த மூலையில் இருக்கும் கதிரையில் அமருங்கள்” என்று மனைவியைப் பார்த்துக் கூறினார். அங்கே கதிரை இருக்கவில்லை. அங்கே வேலை செய்யும் ஒருவர் வந்து எட்டிப் பார்த்தபோது, “எங்கே என்னுடைய கதிரை. அது எப்பவும் இங்கே இருக்க வேண்டும்.” அவருக்குப் பேச்சு விழுந்தது.


காது கேட்பது கொஞ்சம் குறைவாக இருந்தது. ரெலிவிஷன் பார்க்கின்றார். ஒரு பெரிய தாளில், அப்போது நடக்கும் சர்வதேச கிரிக்கெற் பற்றிய நேர அட்டவணையை பெரிய கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்தார்.


லாச்சிக்குள் இருந்து தலைக்குப் போடும் கவசம் போல் ஒன்றை எடுத்துக் காட்டினார். “மெல்பேர்ணில் இருக்கும் டொக்ரர் கணபதிப்பிள்ளை இதை எனக்குத் தந்தார். எழுத்துக்களை%
Be the first to vote for this post!

Leave a comment