1
நம்முடையவிரல் நுனியில் எழுத்து தொகுப்பினை வைத்திருப்பதற்கான Glyphfinder எனும் பயன்பாடு

Glyphfinder என்பது கணினியின் நிரலாக்க வடிவமைப்பாளர்களும், மேம்படுத்துநர்களும், எழுத்தாளர்களும் தங்களுடைய நிரலாக்கங்களிலும் பயன்பாடுகளிலும் தொலைந்துபோன. எழுத்துருக்களை தேடிக்கண்டுபிடித்திட உதவ தயாராக இருக்கும் பயன்பாடாகும்
ஒருங்குகுறி எனும் வைக்கோல்போரில் எழுத்துருக்கள் எனும் தொலைந்துபோன ஊசியைத் தேடுவதை இது எளிதாக்குகின்றது. அாதவது சொற்கள், அதன் பிரிவுகள், அதன்தோற்றம் அல்லது வண்ணங்களைத் தேடினால் இது நமக்கு மிகச்சரியானதை தேடிகொண்டுவந்து வழ ங்கிடும் திறன்மிக்கது
அனைத்தையும் நினைவில் கொள்வதற்கு பதிலாக ஒரு விரல் நுனியைமட்டும் நம்முடைய நினைவில் வைத்திருப்பது எளிதானது, அதேபோன்று எழுத்துரு வங்களின் தோற்றத்தை வைத்தும் தொடர்புடைய எழுத்துருக்களை தேடுவதை எளிதாக்கிடுகின்றது. அதாவது நாம் நினைவில் வைத்துள்ள எந்தவொன்றையும் தட்டச்சு செய்து தொடர்புடைய மிகச்சரியான எழுத்துருவை இதன்உதவியால் விரைவாகக் கண்டறிய முடியும். அதுமட்டுமல்லாமல் இதில் ஒவ்வொரு ஈமோஜியையும் கைமுறையாகச் சேர்த்து தொகுத்து வைத்துள்ளதால் இதில் எந்தவொருஈமோஜியையும் எளிதாக தேடி அடையலாம்.
மேலும் சுட்டியில்லாமல் தேடிடவிரும்பினாலும் நமக்கு பிடித்த இதனுடைய விசைப்பலகையின் குறுக்குவழிகளை இப்போதே கற்றுக்கொண்டு எளிதாக தேடிடமுடியும்

. எந்தவொரு மகத்தான தரவுத்தளத்துடனும் தொடர்பில்லாமல் நம்முடைய விரல் நுனியில் 30.000 க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை எளிதாக கொண்டுவரமுடியும் அவை, ஒவ்வொன்றும் கைமுறையாக குறிக்கப்பட்டு இதில்தொகுக்கப்பட்டுள்ளன.
எழுத்துருக்களைஅடிக்கடி பல முறை பார்ப்பதற்கு வெட்கப்பட வேண்டாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் எழுத்துருக்களை விரைவாக கொண்டுவந்து திரையில் மேலே எளிதாக பொருத்துவதற்காக இது உதவுகின்றது இணைய இணைப்பு அல்லது அருகலை இணைப்பு எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு பழமையான விமானத்தில் உள்ளதைப் போன்ற இது சீராக செயல்படுகின்றது. நூறாயிரக்கணக்கான குறிச்சொற்களைப் பார்க்கும்போது கூட உடனடியாக விரைவாக தேடி அடைவதற்குஇது உதவுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. இயல்பாக இருண்ட அறைக்குள் சிறந்த ஒளிக்கீற்றாக ஒரே நோக்கத்தோடுஇது நமக்கு உதவகாத்திருக்கின்றது இது நமக்கு பிடித்த macOS ,Windows போன்ற எந்தவொரு இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது ஆயினும் இந்த பயன்பாடானது நிரந்தர உரிமத்துடன் ஒருமுறைமட்டுமான ஐந்து டாலர் மட்டும் செலவழிக்கவேண்டியுள்ளதுமேலும் விவரங்களுக்கு https://www.glyphfinder.com/எனும் இணையதளமுகவரிக்குசெல்க

Leave a comment