1
வேர்டு டாக்குமெண்டுக்கு பாஸ்வேர்டு கொடுத்து சேவ் செய்யும் முறை.

நம் கணனியில் பிறர் பார்வையிடக் கூடாத் அல்லது பார்க்கலாம் ஆனால் அதில் திருத்தங்கள் செய்ய்க் கூடாது போன்ற தேவைகள் இருக்கலாம்.
அதற்கு நம் கணினில் உள்ள டாக்குமெண்டுக்கு பாஸ்வேர்டு கொடுத்து சேவ் செய்ய வேண்டும் அது எவ்வாறு என்று இந்த கட்டுரையில் காண்போம்.
முதலில் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டிய டாக்குமெண்டை ஓபன் செய்து கொள்ளவும்.
பிறகு f12 கீயை அழுத்தவும் . அல்லது ஃபைல் மெனு சென்று சேவ் அஸ் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
இப்பொழுது ஒரு டயலாக் பாக்ஸ் ஒன்று வெளிப்படும்.
அதில் கீழ்புறம் உள்ள tools என்ற பட்டனின் அருகே உள்ள சிறிய ஆரோ மார்க்கை கிளிக் செய்யவும்.
தொடர்ந்து வரும் மெனுவில் General options என்பதை செலெக்ட் செய்யவும்.
இப்பொழுது General options என்று ஒரு விண்டோ வரும்.
அதில் password to open, password to modify என்ற இரண்டிற்கும் பாஸ்வேர்ட் கொடுக்கவும். இரண்டிற்கும் ஒரே பாஸ்வேர்டு கூட கொடுக்கலாம்.
இப்பொழுது ok பட்டனை கிளிக் செய்யவும்.
இப்பொழுது Reenter password to open என்று ஒரு டயலாக் பாக்ஸ் வரும். அதில் ஒபன் செய்யக் கொடுத்த பாஸ்வேர்டை மீண்டும் கொடுக்கவும்.
அடுத்து Reenter password to modify என்று ஒரு டயலாக்பாக்ஸ் வரும் . இப்பொழுது modify செய்யக் கொடுத்த பாஸ்வேர்டை மீண்டும் கொடுத்து ok பட்டனை கிளிக் செய்யவும்.
இப்பொழுது சேவ் பட்டனை கிளிக் செய்யவும்.
இப்பொழுது ஃபைலை ஓபன் செய்தால் பாஸ் வேர்டு கேட்கும். ஓபன் செய்த பிறகு மாடிஃபை செய்ய வேண்டிய பாஸ்வேர்டை கேட்கும். இரண்டும் சரியாக கொடுத்தால்  டாக்குமெண்டை ஒபன் மற்றும் எடிட் செய்யலாம்.
இந்த பாஸ்வேர்டை நீக்குவதற்கு மீண்டும் f12 பிரஸ் செய்து டூல்ஸ் என்ற ஆப்சனின் அருகேயுள்ள ஆரோ மார்க்கை கிளிக் செய்து general options என்பதற்குள் சென்று
எல்லா பாஸ்வேர்டுகளையும் நீக்கிவிட்டு ok பட்டனை கிளிக் செய்யவும் பிறகு மீண்டும் சேவ் கொடுக்கவும்.
இப்பொழுது பாஸ்வேர்டு கொடுக்காமலேயே உள்ளே செல்லலாம்.
நன்றி.
முத்துகார்த்திகேயன்,மதுரை.Leave a comment