1
ஜெ கொரி (jquery) என்றால் என்ன?
இது ஒரு ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி ஃபைல் ஆகும். குறைவான கோடிங்கில் நிறைய செயல்கள் நிகழ்த்திட இது உதவுகின்றது.
இது மிகவும் வேகமானது.
இது ஒரு வெப் டெவெலப்பர் வேலையை எளிதாக்குகின்றது.
இது நிறைய லைப்ரரி ஃபைல்களை கொண்டுள்ளது.
இதன் அம்சங்கள்:
DOM SELECTION:
இது ஒரு ஃபார்ம் எலெமெண்டை அதன் பெயர்,டைப், கிளாஸ், பண்புகள் முதலியன கொண்டு செலெக்ட் செய்ய உதவுகின்றது.
DOM MANIPULATION:
இது ஒரு ஃபார்ம் எலிமென்டை மேனிபுலேட் செய்கின்றது. புதிதாக ஒரு எலிமெண்டை சேர்த்தல், விலக்குதல் முதலிய செயல்களை செய்யலாம்.
SPECIAL EFFECTS
ஃபேடிங்க், ஸ்லைட் டவுன் போன்ற அனிமேசன் எஃபக்ட் புரிய உதவுகின்றது.
EVENTS:
கிளிக், டபுள் கிளிக், மவுஸ் எண்டர், மவுஸ் லீவ் போன்ற ஈவண்டுகளை எளிதாக கையாளுகின்றது.
AJAX:
இது முழு பக்கத்தையும் ரிலோட் செய்யாமல் அஜாக்ஸ் மூலம் டேட்டா லோட் செய்கின்றது.
CROSS BROWSER SUPPORT:
ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒவ்வொரு கோடிங்க் எழுத வேண்டியதில்லை.


JQUERY ADVANTAGES:
கற்றல் எளிது.
குறைவான கோடிங்க்
அருமையான டாக்குமெண்டேசன்.

Leave a comment