1
துவக்கநிலையாளர்கள் எளிதாக ஜாவாவை கற்பதற்கு உதவிடும் BlueJ

துவக்கநிலையாளர்கள் ஜாவா எனும் நிரலாக்க மொழியை கற்பதற்கு துவங்கிடுவதற்காக BlueJ ஆனது ஒரு எளிய IDE சூழலை வழங்குகின்றது
பொதுவாக எந்தவொரு புதியநபரும் ஒரு புதிய நிரலாக்க மொழியைக் கற்பதற்காக துவங்கிடும் போதெல்லாம், அனைத்து உரைகளையும் மனப்பாடம் செய்கின்ற செயலை விமர்சிப்பது எளிதான பணியாகும். ஒரு செயல் திட்டத்தைத் துவங்குவதற்கு வசதியாக இருப்பதற்கு முன், கோட்பாட்டில், அவை பொதுவாக ஒப்பீட்டளவில் குறுகியதாகவும் திரும்பத் திரும்ப செயல்படுவதாகவும் இருப்பதால் நினைவில் கொள்வது எளிது. நடைமுறையில்,உரைகளை மனப்பாடம் செய்தபின்னர் எளிதான பழக்கமாக மாற மிகவும் தெளிவற்று தடுமாறு வேண்டியுள்ளது, ஆனாலும் ஒரு நிரலை இயக்குவது அத்தியாவசிய தேவையாகும்.
ஒருசில நேரங்களில் அவ்வாறான உரையானது ஒரேயொர வரி மட்டுமே இருக்கும். எடுத்துக்காட்டாக, ஷெல் ஸ்கிரிப்ட்யில் “shebang” என்பதுடன் திறப்பது எளிய செயலாகும்:
#!/bin/sh
மற்ற நேரங்களில், அறிமுக உரை மிகவும் சிக்கலானது. உதாரணமாக, ஜாவா இனமானது பெரும்பாலும் பின்வருவதைபோன்றதாக அமைந்திருக்கும்:
mport java.io.Foo;

public class Main {

public static void main(String[] args) {}

// some code here

}
கென்ட் பல்கலைக்கழகமானது துவக்கநிலையாளர்களினஅ இந்த துவக்க நிலை போராட்டத்தினை ஆய்வின் வாயிலாக நன்றாக உணர்ந்து கொண்டது, எனவே துவக்கநிலையாளர்கள் எளிதாக ஜாவா கற்பதற்கு ஒரு திறமூல ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலான (IDE) BlueJ எனும் சூழலை உருவாக்கி பராமரிக்கிறது.
அதாவது இந்த பல்கலைகழகமானது ளிதாக ஜாவா கற்பதற்கு ஏதுவாக பல்வேறு BlueJ வார்ப்புருக்களை உருவாக்கி பயன்டுத்தி கொள்வதற்கு தயாராக வைத்துள்ளது
இந்த BlueJ இன்ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழலான (IDE) இடைமுகம் சுத்தமாகவும் எளிமையாகவும் உள்ளது, அதன் முதன்மையான செயல்களின் பட்டியில் நான்கு உருப்படிகள் உள்ளன. நாம் ஏதேனும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கும்போது, நம்முடைய ஜாவா கோப்புகள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதற்கான “மன வரைபடம்(mind map) ” அல்லது பாய்வு விளக்கப்படத்தைக் (flowchart) இதில் காணலாம்.
நாம் ஒரு புதிய இனத்தை உருவாக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளைக் கொண்ட ஒரு சுத்தமான ஆனால் வலுவான வார்ப்புருவை இந்தBlueJ எனும்சூழல் உருவாக்குகின்றது. வெவ்வேறு குறிமுறைவரிகளின் கூறுகளை ஒன்றோடொன்று தனித்தனியாக வைத்திருக்க இது ஒரு கையடக்கமான வண்ணத் திட்டத்தைப் பயன்படுத்துகிறது, எனவே ஒரு முறை அல்லதுஒரு கருத்திலிருந்து ஒரு இனத்தைச் சொல்வது எளிது.
நாம் நிரலாக்கத்திற்கு புதியவர் அல்லது ஜாவாவுக்கு புதியவர் என்றால், மாறிகள், scoping, சுழல்கள் (loops) , நிபந்தனைகள் (conditionals) போன்ற மேம்பட்ட கருத்துகளைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகும். நாம் நிரலாக்கமொழியினை கற்றுக் கொள்ளும்போது, நாம் தட்டச்சு செய்யும் பெரும்பாலான குறிமுறைவரிகள் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கின்றன: மேலும் இவை அனைத்தும் தெளிவற்ற அர்த்தமுள்ள, இன்னும் வித்தியாசமாக ஒத்ததாக இருக்கின்றன, அவற்றை நாம் பின்தங்கிய அல்லது முன்னோக்கிய நிலையில் படிக்கின்றோமா என்பதைப் புரிந்துகொள்வதற்காக சொல்வது என்பது . நிரலாக்க மொழியின் ஒரு பகுதியான ஒரு முக்கிய திறவுகோளுடன் மேலும் உள்தள்ளல் பிறையடைப்புகள் அரைப்புள்ளிகளின் உதவி தவிர ஒரு மாறியைக் கூறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும், , இவை அனைத்தும் ஒன்றாக நம்முடைய நினைவிலிருந்து மங்கத் தொடங்குகின்றன.
இந்த குழப்பத்தை நீக்குவதற்காகவே BlueJ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய வண்ண பின்னணியைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் எழுதும் குறிமுறைவரிகளின் கட்டமைப்பைக் காட்சிப்படுத்த BlueJ உதவுகின்றது. ஜாவா நிரலாக்க மொழியின் வழிமுறையில் ஒருகுறிப்பிட்ட இனம் உள் வருவதைக் காண நாம் உள்தள்ளலை நம்ப வேண்டியதில்லை, ஏனெனில் நாம் குறிமுறைவரிகளின் தொகுதிகளை(modules)இதில் காணலாம்.
மிக முக்கியமாக, பிழைகள் அவற்றின் காரணத்தை அறிய BlueJ நமக்கு உதவுகிறது.
உதாரணமாக, ஒரு if அறிக்கையின் உள்ளே foo எனப்படும் மாறியை நாம் வரையறுத்தபின்னர் அந்த அறிக்கைக்கு வெளியே foo ஐக் குறிப்பிட்டால், பிழை இருப்பதாக BlueJ சரியாக எச்சரிக்கிறது. பிழையை எவ்வாறு சரிசெய்வது என்று இது நமக்குச் சொல்லவில்லை, அதை நமக்காக சரிசெய்ய இது முன்வருவதில்லை, ஆனால் பிழை ஏன் இருக்கிறது என்று இது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
காட்சி தளவமைப்பில் ஏராளமான குறிப்புகள் உள்ளன, மேலும் ஆராய்ச்சி அல்லது திடீரென உத்வேகம் அளிப்பதன் மூலம், நம் foo மாறியின் கன்னியின் நோக்கத்திற்குள் “சிக்கியுள்ளது(trapped) ” என்பதை நாம் உணர வேண்டுமானால், நாம் தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
BlueJ அனைத்து நோக்கங்களையும் கொண்ட IDEசூழல் அன்று. இது மிகவும் சிறந்த கற்றல் கருவியாகும், மேலும் இது Eclipse அல்லது NetBeans போன்ற முழு IDEசூழலைக் காட்டிலும் குறைவான உதவியாக இருக்கும். இது வேகமான அல்லது திறமையாக தட்டச்சு செய்யாமல், நிரலாக்க மொழியைக் கற்க உதவும் கருவியாகும்.
BlueJ ஐ நிறுவுகை செய்தல்
இந்த BlueJ ஆனது ஜாவாஎனும்நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது, எனவே இதை இயக்க, நாம் முதலில் ஜாவாவை நிறுவுகைசெய்திட வேண்டும். எப்படியும் நிரலாக்கம் செய்ய நமக்கு ஜாவா எனும் கணினிமொழி நமக்கு தேவை, என்பதாலும் நாம் ஏற்கனவே ஜாவாவை நிறுவியிருக்கலாம். என்றாலும் BlueJ ஐ பயன்படுத்திகொள்கின்ற ஜாவாவின் அதே பதிப்பை நாம் கொண்டிருக்க வேண்டும், எனவே BlueJ ஐ ஆதரிக்கின்ற ஜாவா பதிப்பு நம்மிடம் உள்ளதாவெனச் சரிபார்த்திடுக. BlueJ ஐக்கு JavaFX, எனும் பதிப்பு தேவைப்படுகிறது (தனி பதிவிறக்கமாக), எனவே BlueJ தளத்தில் கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்து Java, JavaFX ஆகியவற்றை நிறுவுகை செய்தபின், BlueJ ஐ நிறுவுகை செய்யத் துவங்குக.
BlueJ ஆனது உபுண்டு லினக்ஸ், விண்டோ மேக் ஆகியவற்றிற்கான தரவிறக்கம் செய்யக்கூடிய நிறுவிகளைக் கொண்டுள்ளது. இது ஒரு பொதுவான நிறுவியையும் வழங்குகிறது, இது JAR கோப்பாக வழங்கப்படுகிறது (வழக்கமான ஜாவா வடிவம்). நாம் பொதுவான நிறுவியைப் பயன்படுத்துகின்றோம் என்றால், அதை ஒரு முனைமத்திலிருந்து ஜாவாவுடன் துவங்குக:
$ java -jar ./BlueJ*jar
இது துவங்கப்பட்டதும், அதை நிறுவுகைசெய்திட நாம் பயன்படுத்த விரும்பும் கோப்பகத்தில் சுட்டிக்காட்டிடுக. பொதுவாக $ HOME / .local / bin எனும் கோப்பகத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றது, அது இருந்தால், பொதுவாக இந்த பாதையில் தான் இருக்கும்.
இது நிறுவப்பட்டதும், அதை ஒரு முனைமத்திலிருந்து துவங்கலாம்:
$ bluej
அல்லது நாம் ஒரு .desktop கோப்பை உருவாக்கலாம், எனவே இது நம்முடைய பயன்பாடுகளின் பட்டியில் காண்பிக்கப்படும். இந்த .desktop எனும் கோப்பிற்கு நமக்குத் தேவையானவை:
[Desktop Entry]

Encoding=UTF-8

Version=1.0

Name=BlueJ

Comment=A simple powerful Java IDE

Categories=Application;Development;

Exec=~/.local/bin/bluej/bluej

Icon=~/.local/bin/bluej/icons/bluej-icon-512-embossed.png

Terminal=false

Type=Application
இந்த கோப்பினை bluej.desktop ஆக ~ / .local / share / applications இல் சேமித்திடுக, விரைவில் நம்முடைய பயன்பாட்டு பட்டியில் BlueJ காண்பிக்கப்படும்.
நாம் ஒரு அனுபவமிக்க நிரலாளராஅல்லது புதிய துவக்கநிலையாளரா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜாவாவைக் கற்றுக்கொள்வதை BlueJ நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்றே அதனை நிறுவி ஒரு அற்புதமான குறுக்கு-தள நிரலாக்க சாகசத்தைத் துவங்கிடுக!எனபரிந்துரைக்கப்படுகின்றது

மேலும் விவரங்களுக்கு https://www.bluej.org/ எனும் இணையதளத்திற்கு செல்க

Leave a comment