1
திறமூல இணைய சேவையகங்கள் ஒரு அறிமுகம்

பொதுவாக ஒருஇணையசேவையகம் என்பது வன்பொருளை அல்லது மென்பொருளைக் குறிக்கலாம் அல்லது இரண்டும் ஒன்றாகச் சேர்ந்ததையும் குறிக்கலாம்.
வன்பொருள் எனில் இணையசேவையகத்தின் மென்பொருளையும் இணைய தளத்தின் கூறுகளின் கோப்புகளான HTML ஆவணங்கள், படங்கள், CSS நடை தாட்கள் ஜாவாஸ்கிரிப்ட் கோப்புகள் ஆகியவற்றை சேமித்திடுகின்ற ஒரு கணினி ஆகும். இந்த கணினியானது இணையத்துடன் இணைக்கப்பட்டது மேலும், இது இணையத்துடன் இணைக்கப்பட்ட பிற சாதனங்களுடன் தரவு களின் பரிமாற்றத்தை ஆதரிக்கின்றது.
மென்பொருள் எனில், இணைய சேவையகத்தினை நிறுவுகை செய்த கோப்புகளை இணைய பயனாளர்கள் எவ்வாறு அணுகலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாகும் ; குறைந்தபட்சம், இது ஒரு HTTP சேவையகமாக கருதப்படும். HTTP சேவையகம் என்பது இணைய முகவரிகள் (URL ) இணைய பக்கங்களைக் காண இணைய உலாவி பயன்படுத்தும் நெறிமுறை (HTTP ) ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் மென்பொருளாகும். இது சேமித்து வைக்கும் இணையதளங்களின் தளப் பெயர்களின் (mozilla.org போன்றவை) மூலம் அணுகலாம், மேலும் இது அவைகளின் உள்ளடக்கத்தை இறுதி பயனாளரின் சாதனத்திற்கு வழங்குகிறது.
மிக அடிப்படையான மட்டத்தில், ஒரு இணையஉலாவிக்கு ஒரு இணைய சேவையகத்தில் நிறுவுகை செய்யப்பட்ட கோப்பு தேவைப்படும்போது, அந்த இணையஉலாவியானது அந்த கோப்பினை HTTP வழியாகக் கோருகிறது. அந்த கோரிக்கை மிகச்சரியான இணைய சேவையகத்தை (வன்பொருள்) அடையும் போது, HTTP சேவையகம் (மென்பொருள்) கோரிக்கையை ஏற்று, கோரப்பட்ட ஆவணத்தைக் கண்டறிந்து (அவ்வாறு இல்லையென்றால், 404 எனும் பதில் திரும்பப் பெறப்படுகிறது), அதை இணையஉலாவிக்கு திருப்பி அனுப்புகிறது..
இவ்வாறான சூழலில்இணையதளத்தை வெளியிடுவதற்காக நிலையான அல்லது மாறும் இணைய சேவையகம் ஒன்று தேவைப்படுகிறது.
ஒரு நிலையான இணைய சேவையகமானது அல்லது அடுக்கானது ஒரு HTTP சேவையகத்துடன் (மென்பொருள்) ஒரு கணினியை (வன்பொருள்) கொண்டுள்ளது. அந்த சேவையகமானது அதில் நிறுவுகை செய்யப்பட்ட கோப்புகளை நம்முடைய இணைய உலாவிக்கு அனுப்புவதால் அதை நிலையானதாக அழைக்கிறோம்.
ஒரு இயக்கநேர இணையசேவையகமானது நிலையான இணைய சேவையகத்தையும் கூடுதல் மென்பொருளையும் கொண்டுள்ளது, பொதுவாக பயன்பாட்டு சேவையகமும் தரவுத்தளமும் . HTTP சேவையகம் வழியாக நம்முடைய இணைய உலாவிக்கு அனுப்புவதற்கு முன்பு நிறுவுகை செய்யப்பட்ட கோப்புகளை பயன்பாட்டு சேவையகமானது புதுப்பித்து கொள்வதால் நாம் அதை இயக்கநேரசேவையகம் என்று அழைக்கின்றோம்.
இவ்வாறான ஒரு இணைய சேவையகத்தில் கிடைக்கும் முக்கிய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணையதளங்களை உருவாக்குகின்றது.
பதிவு செய்யப்படும் கோப்புகள் எங்கு சேமிக்கப்படுகின்றன, அப்பதிவு கோப்புகளில் என்னவகையான தரவுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைகொண்டு பதிவு கோப்பின் அமைப்புகளை உள்ளமைக்கிறது.
இணையதளம் / அடைவு பாதுகாப்பை உள்ளமைக்கிறது. எடுத்துக்காட்டாக, தேவைகள் அடுத்தடுத்த உள்ளமைவின் அடிப்படையில், இணைய சேவையகம் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை காண்பதை அனுமதிக்கிறது அல்லது தடுக்கிறது, அதே போன்று எந்தெந்த IP முகவரிகளின் இணையதளத்தைப் பார்க்க அனுமதிக்கலாம் /அனுமதிக்கப்படவேன்டாம் என முடிவுசெய்கின்றது.
இது ஒரு FTP தளத்தை உருவாக்குகின்றது.
மெய்நிகர் கோப்பகங்களை உருவாக்கி, அவற்றை இயல்புநிலை கோப்பகங்களுக்கு வரைபடமாக்குகிறது.
தனிப்பயன் பிழை பக்கங்களை உள்ளமைக்கிறது / பரிந்துரைக்கிறது. இது பயனாளர்கள் இணையதளத்தில் பயனாளர் நட்பு ,பிழை செய்திகளை உருவாக்கவும் காண்பிக்கவும் அனுமதிக்கிறது.
இயல்புநிலை ஆவணங்களைக் குறிப்பிடுகிறது, அவை கோப்பின் பெயர் கொடுக்கப்படாதபோது காட்டப்படும். எடுத்துக்காட்டாக, பயனாளர் http: // localhost ஐத் திறந்தால் எந்தெந்தக் கோப்புகளைக் காட்ட வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது. பொதுவாக index.html அல்லது அதேபோன்ற ஒத்த ஒன்றாகும், ஆனால் அது இருக்க தேவையில்லை.
முதன்முதலில் இணைய உலாவியில் விளைந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 1990 ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்களால் CERN http என்பது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை இணைய சேவையகங்கள் வெகுதூரம் சென்றுள்ளன. இணைய சேவையகங்களின் முன்னணி வழங்குநர்களில் ஒருசிலர் நிறுவனங்களுக்கு மூடிய மூல வாய்ப்பங்களை வழங்குகிறார்கள், ஆனால் பல இன்னும் திறமூலமாக இருக்கின்றன (லினக்ஸ் அடிப்படையில்). ஒருசில இணைய சேவையகங்கள் சிறப்புத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, வேறு சில புதுப்பிப்புகளை அடிக்கடி பெறுகின்றன, இன்னும்சில குறிப்பிட்ட தொழில்நுட்பங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் சில சமீபத்திய புதுப்பிப்புகளின் காரணமாக அவற்றின் நிலைத்தன்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அறியப்படுகின்றன.இவ்வாறான மிகவும் பிரபலமாக உள்ள அதிலும் திறமூல இணைய சேவையகங்களில் ஒருசில பின்வருமாறு

1. அப்பாச்சி HTTP:இது ஒருதிறமூல, குறுக்கு-தள இணைய சேவையகமாகும்இது அப்பாச்சி உரிமம் 2.0 இன் விதிமுறைகளின் கீழ் வெளியிடப்பட்டதாகும். அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளையின் கீழ் மேம்படுத்துநர்களின் திறமூல சமூகத்தால் இது உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. இது தற்போது நாம் பயன்படுத்திகொண்டுவருகின்ற இணையதளங்களில் 46 சதவீதத்தை இயக்குகின்றது. இது Linux, FreeBSD, Solaris, Windows, MacOS X, Novell Netware, OS/2 போன்ற பல்வேறு இயக்க முறைமைகளிலும் ( அநேகமாக யுனிக்ஸ் போன்ற எந்த அமைப்பும்) நன்கு இயங்குகின்றது .
இது பல்வேறு வசதிவாய்ப்புகளை ஆதரிக்கின்றது, பல தொகுக்கப்பட்ட தொகுதிகளாக( modules) செயல்படுத்தப்படுகின்றன, அவை முக்கிய செயல்பாட்டை நீட்டிக்கின்றன. இவை அங்கீகாரசெயல் திட்டங்களிலில் Perl, Python, Tcl , PHP போன்ற சேவையக நிரலாக்க மொழிகளை ஆதரிக்கின்றன. பிரபலமான அங்கீகார தொகுதிகளில் mod_dccess, mod_auth, mod_digest , mod_auth_digest ஆகியவை அடங்கும். மற்ற வசதிவாய்ப்புகளான மாதிரியில் பாதுகாப்பான சாக்கெட்டுகளின் அடுக்கு , போக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு ஆதரவு (mod_ssl), ஒரு ப்ராக்ஸி தொகுதி (mod_proxy), ஒரு URL மாற்றியமைத்தல் தொகுதி (mod_rewrite), தனிப்பயன் பதிவு கோப்புகள் (mod_log_config) வடிகட்டுதல் ஆதரவு (mod_include, mod_ext_filter) ஆகியவை அடங்கும். இதில் பிரபலமான சுருக்க முறைகளில் வெளிப்புற நீட்டிப்பு தொகுதி, mod_gzip, HTTP வழியாக வழங்கப்படும் இணையகங்களின் அளவை (எடை) குறைக்க உதவும் வகையில் செயல்படுத்தப்படுகின்றது. ModSecurity என்பது இணையபயன்பாடுகளுக்கான ஊடுருவல் கண்டறிதலிற்கும் தடுப்பதற்குமான திறமூல இயந்திரமாகும். இதனுடையபதிவுகளை AWStats / W3Perl அல்லது Visitors போன்ற இலவச ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்தி இணைய உலாவி மூலம் பகுப்பாய்வு செய்யலாம்.
மெய்நிகர் நிறுவுகையை ஒரு அப்பாச்சி நிறுவுகையில் பல்வேறு இணைய தளங்களுக்கு சேவை செய்ய அனுமதிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு அப்பாச்சி நிறுவுகையுடன் ஒரு கணினியில் ஒரே நேரத்தில் example.com, example.org, test47.test-server.example.edu போன்றவற்றிற்கு சேவை செய்ய முடியும்.
இதன் வசதி வாய்ப்புகள்:இயக்கநேர தொகுப்புகளை பதிவேற்றமுடியும், நிலையான கோப்புகளை கையாளமுடியும், குறியீட்டு கோப்புகள், தானியங்கு அட்டவணைப்படுத்தல் உள்ளடக்க விவாதம்.IPv6 , HTTP / 2 ஆகியவற்றின் ஆதரிக்கின்றது. தனிப்பயன் பதிவு சுழற்சி, IP முக&%2

Leave a comment