1
எளிதாக விற்பணைசெய் (Sellatease )எனும் இணையத்தின்நேரடி சந்தை ஒரு அறிமுகம்

இந்த Sellatease.com எனும் இணையதள முகவரியில் செயல்படுகின்ற இணையத்தின் நேரடி சந்தையை நைஜீரிய வலை உருவாக்குநரும் வலைபூஎழுத்தாளருமான ஆல்பா டொனால்ட் என்பவர் உருவாக்கி யுள்ளார். தன்னாலும் ஒரு இணையதளத்தை உருவாக்க முடியும் என்பதற்காக இவரால் இவ்வலைத்தளம் உருவாக்கப்படவில்லை. உற்பத்தி செய்த பொருட்களை சந்தை படுத்துதலின்போது மக்களுக்கு உருவாகின்ற பல்வேறு துன்பங்களை களைதல், தற்போதைய சந்தை படுத்துதலின்போது உருவாகின்ற வாங்குபவருக்கும்விற்பனை- யாளருக்கும் இடையிலான நீண்ட இடைவெளியை குறைத்திடுதல், பொதுமக்கள் சந்தை படுத்துதலின் போது மோசடி செய்பவர்களால் ஏமாற்றப் படுவோம் என்ற பயத்தினால் நல்ல மனநிலையில் வியாபாரத்தை பரிவர்த்தனை செய்ய முடியாத அவல நிலையைதீர்வுசெய்தல் தற்போதைய சந்தைபடுத்துதலின் போது வாங்குபவர்களின் விற்பனையாளர்களின் மனத்தில் உள்ள பயத்தைஅறவே போக்குதல் ஆகிய காரணங்களின் அடிப்படையில் இவர் புதிய எளிதாக விற்பணைசெய்( Sellatease)எனும் இணையத்தின் நேரடி சந்தையை உருவாக்கி யுள்ளார்.
அதாவது தற்போதைய நடைமுறையில் சந்தைபடுத்துதலின்போது வாங்குபவரையும் விற்பனையாளரையும் ஒரே மேடையில் மிக நெருக்கமாகக் கொண்டுவந்து பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் உருவாகின்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்வுசெய்திடும் நோக்கில் இந்த புதிய எளிதாக விற்பணை செய் (Sellatease ) எனும் இணையதளம் உருவாக்கப்பட்டது. . இந்த 21ஆம் நூற்றாண்டில், அனைத்து செயல்களும் இப்போது இணையத்தின் வாயிலாக செய்யப்படுகிறது, அதனடிப்படையில் பொருட்களை வாங்குவதும் விற்பதும் மட்டும் விதிவிலக்கன்று. அதனால்தான் சந்தை படுத்துதலுக்காக உருவாக்கப்பட்ட இந்த அற்புதமானஇணையதளத்தினை அனைவருக்கும் இலவசமாக மாற்றுவது பொருத்தமானது என்று கருதப்பட்டது.
விற்பனையாளர்களும் தொழில்முனைவோர்களும் இணையத்தில் நேரடியாக விற்பணை செய்வதற்காக இது ஒரு சிறந்த சந்தையாகஅமைந்திடுமாறு இந்த எளிதாக விற்பணைசெய்(Sellatease )எனும் வலைத்தளம் உருவாக்கப்பட்டது, இதில் உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களையும் சேவைகளையும் விற்பணைசெய்வதற்காக இதனுடைய சேவைகளை இலவசமாக பயன்படுத்தி உண்மையான சாத்தியமான வாங்குபவர்களைப் பெற முடியும். நாம் நம்முடைய தொழிலகத்தில் பொருட்களை உருவாக்கியபின்னர் விற்பணைசெய்யாமல் வைத்துகொண்டு இருந்தால்,அதனால் பயனில்லை, அதனால் நமக்கு போதுமான நடைமுறைமூலதனம் கிடைக்காமல் நம்முடைய நிறுவனம் விரைவில் திவாலாகிவிடும் நிலைஉருவாகும், அத்தகைய சூழ்நிலையை கண்டால் யாரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அவ்வாறான சூழலை போக்குவதற்காக உதவவருவதுதான் இந்த இணையத்தின் நேரடி சந்தையான எளிதாக விற்பணைசெய்(Sellatease ) எனும் புதிய இணையதளம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், நாம் இங்கே பார்க்கும் எந்தவொரு பொருளின்மீதும் வாங்குபவரின் மனதில் நல்ல நம்பிக்கையை வழங்குவதற்காக . வாங்குபவர்களுக்கு மன அழுத்தமின்றி அவர்கள் விரும்புவதை வாங்க உதவும் பொருட்டு அனைத்து பொருட்களையும் சேவைகளையும் ஒரே தளத்திற்கு கொண்டு வருவதுதான் இந்த தளம் உருவாக்குவதன் அடிப்படை நோக்கமாகும் மேலும் எளிதில் விற்பணைசெய்(Sellatease ) என்ற இதனுடைய பெயரில் குறிப்பிடுவது போல, பொதுமக்கள் பயம் இல்லாமல், பொருட்களை வாங்குவதற்கும் உற்பத்தியாளர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எளிதாக விற்பதற்கும் இந்த இணையதளமேடை கட்டப்பட்டுள்ளது.
இதனுடைய சேவைய பயன்படுத்தி கொள்வதற்காக முதலில், நம்முடைய மின்னஞ்சல் முகவரியுடன் ஒரு கணக்கை இதில் உருவாக்க வேண்டும்.தொடர்ந்து இந்த வலைத்தளத்திலிருந்து நமக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலைக் சொடுக்குவதன் வாயிலாக நமக்கான சேவையை இதில் பெற துவங்கமுடியும் மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://Sellatease.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a comment