1
SNMPஎனும் ஒரு பயன்பாட்டுஅடுக்கு நெறிமுறை

.





SNMPஎன சுருக்கமான ப்பெயரில்அழைக்கப்பெறும் எளிய வலை பின்னல் ஒழுங்கு முறை நிருவாகம் (Simple Network Management Protocol ) என்பது வலைபின்னலிலுள்ள சாதனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் நிருவகிக்கவும் கண்காணிக்கவும் பயன்படும் ஒரு பயன்பாட்டுஅடுக்கு நெறிமுறையாகும். வலைபின்னல் சாதனங்களுக்கு ஒரு உள்ளூர் பகுதி வலைபின்னல் (LAN ) அல்லது பரந்த பகுதி வலைபின்னல் (WAN) இல் மேலாண்மை தகவல்களை மறு ஒலிபரப்பு செய்வதற்காக இந்த SNMPஆனது ஒரு பொதுவான வழிமுறையை வழங்குகிறது.
வலைபின்னல் மேலாண்மை அமைப்புடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கு அவ்வாறான பொதுவான வழிமுறையுடன் வழிசெலுத்திகள், சேவையகங்கள் அச்சுப்பொறிகள் போன்ற பிணைய சாதனங்களை வழங்குவதே இந்தSNMP இன் நோக்கமாகும்.





இந்தநெறிமுறையின் பல பதிப்புகள் உள்ளன, மேலும் இதுமிகவும் பிரபலமானது, பெரும்பாலான பிணைய சாதனங்கள் இதனுடைய முகவர்களுடன் முன் தொகுக்கப்பட்டவைகளாக உள்ளன . இருப்பினும், நெறிமுறையைப் பயன்படுத்த, பிணைய நிருவாகிகள் முதலில் தங்களுடைய பிணைய சாதனங்களின் இயல்புநிலை உள்ளமைவு அமைப்புகளை மாற்றியமைத்திட வேண்டும், எனவே எஸ்.என்.எம்.பி முகவர்களானவை வலைபின்னலின் மேலாண்மை அமைப்புகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.
இணைய பொறியியல் பணிக்குழு (IETF) வரையறுக்கப்பட்டுள்ளபடி அசல் இணைய நெறிமுறை தொகுப்பின் ஒரு பகுதியாக எஸ்.என்.எம்.பி. நெறிமுறையின் மிக சமீபத்திய பதிப்பான SNMPv3,ஆனது அங்கீகாரம், குறியாக்கம் அணுகல் கட்டுப்பாட்டுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை உள்ளடக்கியதாகும்.
மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நெறிமுறைகளில் ஒன்றான, இது வழக்கமான வலைபின்னல் கருவிகளான வழிசெலுத்திகள், பொத்தான்கள் கம்பியில்லா அணுகல் புள்ளிகள் முதல் அச்சுப்பொறிகள், வருடிகள் பொருட்களுக்கான இணைய (IOT) சாதனங்கள் போன்ற இறுதிப் புள்ளிகள் வரையுள்ள விரிவான வன்பொருட்களால் ஆதரிக்கப்படுகின்றது – . வன்பொருளுக்கு கூடுதலாக, இயக்கநேர இணைப்பு உள்ளமைவு நெறிமுறை (DHCP) போன்ற சேவைகளை கண்காணிக்க SNMP ஐப் பயன்படுத்தலாம். இந்த சாதனங்களிலும் சேவைகளிலும் உள்ள SNMP மென்பொருள் முகவர்களானவை ஒரு பிணைய மேலாண்மை அமைப்புடன் (NMS) தொடர்பு கொள்கிறார்கள், பொதுவாக இவைகளை எஸ்.என்.எம்.பி மேலாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, நிலை தகவலையும் உள்ளமைவு மாற்றங்களையும் மறு ஒளிபரப்பு செய்யஇவை பயன்படுகின்றன
ஒரு NMSயுடன் SNMP ஐப் பயன்படுத்துவது ஒரு பிணைய நிர்வாகியை ஒரு இடைமுகத்திலிருந்து வலைபின்னல் சாதனங்களை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் உதவுகின்றது, இது பொதுவாக தொகுப்பு கட்டளைகளையும் தானியங்கி விழிப்பூட்டல்களை யும்ஆதரிக்கின்றது. இணைய பொறியியல் செயல்குழு (IETF) கருத்துக்கான கோரிக்கை (RFC1157) யானது பல தொடர்புடைய RFC களில் விவரிக்கப்பட்டுள்ளது. SNMP, பதிப்பு 3 இன் மிகச் சமீபத்திய மறு செய்கை, SNMP செய்திகளை அங்கீகரிக்கும் மற்றும் குறியாக்கம் செய்யும் பாதுகாப்பு மேம்பாடுகளையும், போக்குவரத்தின் போது பாக்கெட்டுகளைப் பாதுகாக்கின்றது.
SNMP இன் கூறுகள்
நெறிமுறையின் வாடிக்கையாளர் / சேவையாளர் கட்டமைப்பில் மூன்று கூறுகள் உள்ளன: ஒன்று SNMP மேலாளர், மற்றொன்று SNMP முகவர் மூன்றாவது மேலாண்மை தகவல் தளம் (MIB)ஆகியவைகளாகும். SNMP மேலாளர் ஆனது வாடிக்கையாளராகவும், SNMP முகவரானது சேவையகமாகவும், மேலாண்மை தகவல் தளமானது சேவையகத்தின் தரவுத்தளமாகவும் செயல்படுகின்றன. SNMP மேலாளரானது முகவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, உடன் முகவர் அதற்கான பதிலை வழங்குவதற்காக தகவல்தளத்தினை MIB ப் பயன்படுத்துகின்றார்.
இந்த எஸ்.என்.எம்.பி எவ்வாறு செயல்படுகிறது
வலைபின்னல் சாதனங்களுக்கும் மேலாண்மை அமைப்புக்களுக்கும் இடையில் தள்ளுதல் இழுத்தல் ஆகிய தகவல்தொடர்புகளின் கலவையைப் பயன்படுத்தி கடவுச்சொல்லை மீட்டமைப்பது அல்லது உள்ளமைவுகளின் அமைப்பை மாற்றுவது போன்ற கட்டளைகளைப் படிக்க அல்லது எழுத என்பன போன்ற பல்வேறு செயல்பாடுகளைச் SNMP ஆல் செய்ய முடியும். ஒரு சில SNMP மேலாளர்கள் ஒரு முன் வரையறுக்கப்பட்ட வரம்பை மீறினால் தானாகவே நிர்வாகிக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது உரை செய்தி எச்சரிக்கையை அனுப்புவதன் மூலம், எவ்வளவு அலைவரிசை, நினைவகம் பயன்பாட்டில் உள்ளன என்பதையும் இது புகாராக அளிக்கின்றது.
பெரும்பாலான நேரங்களில், SNMPஆனது ஒரு ஒத்திசைவான மாதிரியில் செயல்படுகிறது, SNMP மேலாளரும் முகவரும் ஒரு பதிலை அனுப்பும் தகவல்தொடர்புடன். இந்த கட்டளைகளும் செய்திகளும், பொதுவாக பயனாளர் தரவுகளின் நெறிமுறை அல்லது பரிமாற்ற கட்டுப்பாட்டு நெறிமுறை / இணையநெறிமுறை வழியாக அனுப்பப்படுகின்றன, அவை நெறிமுறை தரவு அலகுகள் என அழைக்கப்படுகின்றன

Leave a comment