1
நேரத்தை மிச்சப்படுத்த லிபர் ஆஃபிஸ் வார்ப்புருக்களை எவ்வாறு உருவாக்குவது

.

ஆண்டுசெயல்திட்டங்கள், கடிதங்களின்படிவங்கள், படவில்லை விளக்கக்காட்சிகள் போன்ற நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஆவணங்களின் காலியான நகல்களைத் திறப்பதன் மூலம் லிபர் ஆஃபிஸ் மாதிரிபலகங்கள் நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. இது மீண்டும் மீண்டும் செய்கின்ற நம்முடைய பணியை விரைவாகவும் எளிதான துவக்க புள்ளியாகவும் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், குழுக்களிலோ அல்லது ஒரு பெரிய நிறுவனத்தில் நாம் பணிபுரியும் போது அதனுடைய நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும். ஏற்கனவே ஒருசில மாதிரிபலகங்களை லிபர் ஆஃபிஸானது பதிவேற்றம் செய்துவைத்துள்ளது, ஆனால் நாம் நம்முடைய சொந்த மாதிரிபலகங்களையும் இதன் வாயிலாக உருவாக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
லிபர் ஆஃபிஸில் மாதிரிபலக கோப்பை உருவாக்குதல்
இதற்காக முதலில், நமக்கு ஒரு மாதிரி பலகமாக பணியாற்ற விரும்பும் கோப்பு தேவையாகும். இது ஒருஆண்டு செயல்திட்டம், செய்திமடல் அல்லது ஃப்ளையருக்கான தளவமைப்பு அல்லது சில லெட்டர்ஹெட் என இருந்தாலும், நாம் உருவாக்க விரும்பும் ஏதனுமொரு மாதிரி பலகஆவணத்தை உருவாக்கிடுக. தொடர்ந்து , File > Templates > Save as Template> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்வதன் மூலம் அதை ஒரு மாதிரிபலகமாக சேமித்திடுக.
உடன் தோன்றும் Save As Template எனும் உரையாடல் பெட்டியில், இந்த மாதிரி பலகத்திற்கு ஒரு பெயரை உள்ளிடுக. மேலும் பட்டியலிலிருந்து ஒரு மாதிரிபலகத்தின் வகையைத் தேர்ந்தெடுத்துகொண்டு, Saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நாம் சேமித்திடவிரும்பும் மாதிரி பலககோப்பின் பதிப்பை ஒரு .ots வகை கோப்பாக LibreOffice மாதிரிபலக கோப்பகத்தில் சேமிக்கிறது
மாதிரிபலகத்தை பயன்படுத்துதல்
ஒரு மாதிரிபலகத்தினை திறந்திடும்போது எப்போதும் மாதிரிபலக கோப்பின் நகலை மட்டுமே உருவாக்குகின்றது, அசல் மாதிரிபலகத்தினை பாதிக்காமல் இந்த நகலை நாம் தேவையானவாறு மாற்றியமைத்திடலாம். ஒரு மாதிரிபலகத்தினைப் பயன்படுத்த, File > New > Templates> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. தொடர்ந்து விரியும் திரையில் நாம் விரும்பிய நமக்கு த் தேவையான மாதிரிபலகத்தினைத் தேர்ந்தெடுத்து கொண்டு Open எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
மாதிரிபலகத்தினை மாற்றியமைத்தல்
. ஒரு சில நேரங்களில் நாம் ஏற்கனவே கைவசம் வைத்திருக்கும் மாதிரிபலகத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்புவோம். அதற்காக, File > Templates > Open Templates > என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. தொடர்ந்து விரியும் திரையில் நாம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கின்ற .ots வகை மாதிரிபலகங்க கோப்புகளை பட்டியலாக காட்டும் அவற்றுள் நாம் மாற்றியமைத்திட விரும்பும் ஒரு மாதிரிபலகத்தினைத் தேர்ந்தெடுத்து கொண்டு Open எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன்விரியும் அந்த மாதிரி பலகத்தில் விரும்பிய மாற்றங்களை செய்துகொள்க, அதன் பின்னர் save எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக அசல் மாதிரிபலகத்தினை புதுப்பித்துசேமித்திடுக.
வார்ப்புருக்கள் மீண்டும் மீண்டும் செய்திடும் பணிகளைக் தவிர்ப்பது மட்டுமல்லாமல், பயனாளர்களின் பிழையைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக அமைகின்றது. நாம் ஏதேனும் ஒரு வழியில் லெட்டர்ஹெட், ஸ்லைடு டெக் தீம் அல்லது சிக்கலான விரிதாள் என பெறுவதாக இருந்தாலும், அந்த வெற்றியை நமக்காக மீண்டும் செய்ய நம்முடைய கணினியின் திறனைப் பயன்படுத்திக் கொள்க. இவ்வாறு திற மூலபயன்பாடுகளின் பின்புலத்தில் உள்ள ஆலோசனைகளில் ஒன்று, கடினமாக உழைப்பதற்கு பதிலாக மிகவும் திறமையாக செயல்படுவதாகும். லிபர் ஆபிஸ் அதை சாத்தியமாக்குவதில் ஒரு பெரிய பணியை செய்கிறது, எனவே நம்மால் முடிந்த போதெல்லாம் அதைப் பயன்படுத்திக் கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது.

Leave a comment