1
இணையத்தைஇயக்குபவர்(Netrunner)- நீல அமைப்புகளாலான ஒரு குனு / லினக்ஸ் விநியோகம்

இணையத்தைஇயக்குபவர்(Netrunner)என்பது கணினிகள், மடிக்கணினிகள் / இணையபுத்தகங்கள் ARM மீச்சிறு கணினிகளுக்கான முழுமையான லினக்ஸ் இயக்க முறைமையாகும், இது நிலையான டெபியன் கேடிஇ பிளாஸ்மா மேஜைக்கணினி சூழலைக் கொண்டுள்ளது. இது KDE ஐ பிரத்தியேகமாக பயன்படுத்திகொள்கின்றது. இது மேஜைக்கணினிபதிப்பு கோர் பதிப்பு ஆகிய இரண்டுவகைகளில்கிடைக்கின்றது.
மேஜைக்கணினி பதிப்பு: இது ஒரு நிலையான பதிப்பாக அன்றாட பயன்பாட்டிற்காக முன்பே நிறுவப்பட்ட முழு மென்பொருளுடன் கிடைக்கன்றது.
கோர் பதிப்பு: இது ஒருமிகமெலிதான சிறிய.கொள்ளளவிலான பதிப்பாக நம்முடைய சொந்த கணினியை உருவாக்க அல்லது கை பலகைகள் போன்ற குறைந்த-ஸ்பெக் வன்பொருளில் இயக்க அனுமதிக்கிறது.
நிலையான டெபியன் என்றால் நெட்ரன்னரின் தொடர்ச்சியான தொகுப்பு , பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறுகிறது.

இதனுடைய வசதி வாய்ப்புகள்
சிறந்த பொருந்தக்கூடிய தன்மை: டெபியன் மிகப்பெரிய சுதந்திரமான FOSS சமூகத்தில் ஒன்றாக அமைந்துள்ளது , இதன் விளைவாக நம்க்கு பயன்பாடு , மென்பொருள் ஆகியவற்றின் மிகப்பெரிய நூலகம் கிடைக்கிறது. அதிக மெருகூட்டப்பட்டவை: கே.டி.இ பிளாஸ்மா , பயன்பாடுகள் எளிதான உள்ளுணர்வு பயன்பாட்டிற்காக கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஒரு இலவச சுதந்திரமான தளம்: நெட்ரன்னர் இயக்க முறைமை என்பது FOSS கொள்கைகளின் அடிப்படையில் ஒரு குழு முயற்சியின் விளைவாகும். பயனுள்ள துணை நிரல்கள், கோடெக்குகள், தனிப்பயனாக்கங்கள் ஆகியவை இதில்அடங்கும்
இது செயல்படுவதற்காக குறைந்தபட்ச தேவைகள்
• CPU 1.6-GHz Intel Atom , • 1 ஜிபி கொள்ளளவுரேம் , • வன்தட்டின் நினைவக அளவு 15 ஜிபி , • Intel GMA 945 எனும் வரைகலை அட்டை , 128MB கானொளி நினைவகம் , மெய்நிகர் பெட்டியில் இதனை இயக்குவதற்கு முயற்சிக்க விரும்பினால், குறைந்தபட்சம் 1.5 ஜிபி ரேம் ஒதுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துக.
மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.netrunner.com/download/எனும் இணையதள முகவரிக்கு செல்க

Leave a comment