1
எக்செல் இல் பணித்தாள்களை எவ்வாறு குழுவாக ஒன்று சேர்ப்பது

மைக்ரோசாஃப்ட் எக்செல் இல் பல்வேறு பணித்தாட்களைத் ஒரேசமயத்தில் திருத்தவிரும்பினால், அவற்றை குழுவாக ஒன்றிணைக்கும்போது பல பணித்தாட்களில் ஒரே நிலையிலான கலண்களில் ஒரேசமயத்தில் மாற்றங்களைச் செய்ய நம்மை அனுமதிக்கிறது. அதை எவ்வாறு குழுவாக ஒன்றிணைப்பு செய்வது என இப்போது காண்போம்.
வெவ்வேறு தரவுகளைக் கொண்ட பல பணித்தாட்களைக் கொண்ட எக்செல் கோப்பில் அனைத்து தாட்களிலும் ஒரேஅமைப்பைப் பின்பற்றினால்,எக்செல்இல் அவ்வாறான பல பணித்தாட்களை குழுவாக ஒன்றிணைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக School Data,எனும் பெயரிடப்பட்ட பள்ளியின் செயல்பாடு தொடர்பான பல்வேறு பணித்தாட்கள் உள்ள எக்செல்கோப்பு ஒன்று இருப்பதாக கொள்க அதில் Class A,” “Class B,” “Class C.”ஆகிய மூன்று வெவ்வேறு வகுப்புகளுக்கான மாணவர்களுடைய பல்வேறு விவரங்களின் பட்டியல்களைக் கொண்ட பணித்தாட்களில் உள்ளன.இந்த பணித்தாட்களை ஒருங்கிணைத்து குழுவாக தொகுத்தால், இந்த பணித்தாட்களில் ஏதேனும் ஒன்றில் செய்திடும் மாற்றமானது அவை அனைத்திலும் செயல்படுத்தப்படும்.

அதாவது பள்ளியில்பயிலும் மாணவர்களில் 2008 அல்லது 2009 ஆம் ஆண்டுகளில் பிறந்த மாணவர்கள் எத்தனை மாணவர்கள் உள்ளனர் என கண்டு பிடித்திடுவதற்காக ஒவ்வொரு வகுப்பிற்குமான தனித்தனி பணித்தாளிலும் G நெடுவரிசையில் IF எனும் சூத்திரத்தை செருக விரும்புவதாக கொள்க . இதனை ஒவ்வொரு பணித்தாளிலும் G நெடுவரிசையில் கைமுறையாக உள்செருகுவதற்கு பதிலாக ஏதேனும் ஒருதாளில் செய்திடும்போது மிகுதி தாட்களிலும் அதேபணியை செயல்படுத்திடுவது நல்லது அதற்காக முதலில் இந்த பணித்தாட்களை ஒரே குழுவாக தொகுத்தால், நம்முடைய பணியானது மிகஎளிதாக முடியும்.
இதற்காக, விசைப்பலகையிலுள்ள Ctrl எனும் விசையை அழுத்திப் பிடித்து கொண்டு, எக்செல் சாளரத்தின் அடிப்பகுதியில் குழுவாக விரும்பும் ஒவ்வொரு பணித்தாளையும் தெரிவுசெய்து சொடுக்குக
உடன் ஒரே குழுவாக தொகுக்கப்பட்ட பணித்தாட்கள் வெள்ளை பின்னணியுடன் தோன்றும், அவ்வாறு தேர்வு செய்யப்படாத பணித்தாட்கள் சாம்பல் நிறத்தில் தோன்றும். என்ற செய்தியை மனதில் கொள்க

அல்லது அதற்குபதிலாக சாளரத்தின் கீழ்பகுதியில் ஏதேனும் ஒரு பணித்தாளை மட்டும் தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Select All Sheet எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

இதன் பின்னர் தேவையான நெடுவரிசைகளில் அல்லது கிடைவரிசைகளில் தேவையான சூத்திரத்தை ஏதேனும் ஒரு பணித்தாளில்உட்செருகினால் அதே செயல் அனைத்து பணித்தாட்களிலும் செயல்படுத்தப்படும்

பிறகு இவ்வாறு இந்த பணித்தாட்கள் ஒன்றிணைந்து ஒரே குழுவாக இருக்கவேண்டாம் தனித்தனியாக செயல்படுத்தினால் போதும் என விரும்பிடும் போது விசைப்பலகையிலுள்ள Ctrl எனும் விசையை அழுத்திப் பிடித்து கொண்டு, எக்செல் சாளரத்தின் அடிப்பகுதியில் குழுவிலிருந்து பிரித்திட விரும்பும் ஒவ்வொரு பணித்தாளையும் தெரிவுசெய்து சொடுக்குக அல்லது அதற்குபதிலாக சாளரத்தின் கீழ்பகுதியில் ஏதேனும் ஒரு பணித்தாளை மட்டும் தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Ungroup Sheets எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் எக்செல்லின் ஒவ்வொருதாளும் தனித்தனியாக செயல்படுவதை காணலாம்.

Leave a comment