1
உளி : ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்

ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்

image

மோடி ராஜ்ஜியத்தில் இந்தக் கதியென்றால்
தவமிருந்த காரணத்துக்காய் தலை கொய்த
ராமனின் ராஜ்யத்தில்
தமிழிசை கூட தப்புமா? - இல்லை 
வானதியும்  தான் வாழமுடியுமா?

இந்துக்களாய்  சேர்வோம்
ராமராஜ்யம் அமைப்போம் - என்று
வீரியம் பேசினவன்
தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கெதிராக
துப்பாக்கி கொண்டு துரத்தினான்
வீதி வீதியாய் !

சுத்தமில்லை நீ சூத்திரன் என்றான்
சுத்தமில்லாமல் ஒரு சத்தமுமில்லாமல்
கடவுளென்று நீ கருதும் 
கருவறையை பள்ளியறையாய் மாற்றி
கயமைத்தனம் செய்தான் !!

காக்க வேண்டும் கலாச்சாரம் 
காவி தான் ஒரே தேசத்தின் ஆச்சாரம் 
காவல் தெய்வம் என்றான், 
கற்பழிக்கப்பட்டவள் தந்தையை
காவல் நிலையத்தில் கொன்றான் !!!

இத்தனை நடந்தும் வாய் திறக்கவில்லை இதுவரை
பத்து லட்ச ரூபாய் கோட்டு  கட்ட  துரை 
இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லி 
இல்லாதவன் பணத்தையெடுத்து 
இருப்பவனிடத்தில் கொடுத்தான் அள்ளி !!!

விழித்துக்கொள் தமிழா இந்துவல்ல நீ 
சூத்திரன் என்று குனியும் நேரம் இதுவல்ல.
வினை செய்,  விளையச் செய்
அழித்து விடும் அதிகாரம் 
எனக்கென்ன என்றிருந்தால்  !!

Who Voted

Leave a comment