1
லிபர் ஆஃபிஸின் எதிர்காலம்

எதிர்வருங்காலமானது மேககணினி கைபேசிஆகியஇரண்டிற்கும் சொந்தமானதாகும். எனவே லிபர் ஆஃபிஸின் மிக சமீபத்திய வெளியீடுகள் இணையத்தின் வாயிலாக நேரடியாக செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டு வெளியிடபடுகின்றன. இவ்வாறு கட்டமைத்து உருவாக்கிவெளியிடுவது நாம் நினைப்பதை விட மிகச்சவாலான செயலாகும். லிபர்ஆஃபிஸ் என்பது ஒரு மிகப்பெரிய சிக்கலான மென் பொருளாகும், மேலும் குறிமுறைவரிகளை மேகக்கணினியில் இயக்க கணிசமாகக் குறைக்க வேண்டும். ஒரு சேவையகத்தில் எளிதாக இயங்குவதற்கான குறிமுறைவரி தளத்தை குறைக்க அதன் அத்தியாவசிய அம்சங்களை குறைக்கத் துவகியுள்ளது. கூகிள் டாக்ஸ், ஆஃபிஸ் 365 ஆகிய இரண்டும் ஏற்கனவே மேகக்கணினி யிலும் இணையத்தில் நேரடியாக இயங்கும் வகையிலும் மாற்றியமைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்குகின்றன. இவைகளின் அடிப்படைகளில், லிபர் ஆஃபிஸ் நிறைய மாற்றங்களையும் மேம்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது. ஆவணங்களை நிர்வகிக்க ஒரு கோப்பு ஒத்திசைவிற்காகவும் சேமிப்பக தீர்விற்காகவும் லிபர் ஆஃபிஸ் தற்போது இணையத்தில் நேரடியாக செயல்படும் பதிப்பிற்காக Netcloud, Seafile, Pydio போன்ற பிற சேவைகளுடன் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. கைபேசி பதிப்பு என்பது மேககணினியில் செயல்படுவதைவிட சிக்கலானது. அதன் மின்கலன் நினைவக வளங்களை அபகரிக்காமல் கைபேசி சாதனங்களில் இயக்கக்கூடிய மிகச் சிறிய குறிமுறைவரி தளமாக அனைத்தையும் மேலும் குறைக்க வேண்டியுள்ளது. தற்போது கைபேசிகளில் ஆவணங்களைக் காட்சியாக காண மட்டும் தற்போது LibreOffice View எனும் வகையில் கிடைக்கிறது. முழு அளவிலான லிபர் ஆஃபிஸ் கைபேசி பயன்பாடு இன்னும் உற்பத்தி நிலையில் உள்ளது.ஆவணங்களுக்கான ஐஎஸ்ஓ தரமாக ODF (திறந்த ஆவண வடிவமைப்பு) உருவாக்கப்பட்ட போதிலும், மைக்ரோசாப்ட்ஆனது OOXML எனும் தரத்தில் பணியாற்றிடுகிறது, . தனிநபர்களைப் பொருத்தவரை, ஆவணங்களை உருவாக்கி அவற்றை ODF வடிவத்தில் சேமித்து வைப்பதே சிறந்த செயலாகும்.
சமீபத்தில், இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சகம் மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸிலிருந்து சுமார் 25,000 முதல் 30,000 மேஜைக்கணினிகளை லிபர் ஆஃபிஸுக்கு மாற்றியுள்ளது. அதன் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் (விமானப்படை, இராணுவம் கடற்படை) வேறுபட்ட திட்டத்தை அது செயல்படுத்திடுகின்றது. இப்போது,அதன் ஆவண மேலாண்மை மென்பொருள் லிபர் ஆஃபிஸ் மற்றும் எம்எஸ் ஆஃபிஸ் ஆகிய இரண்டிற்கும் இணக்கமானதாக உள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளில் லிபர் ஆஃபிஸ் நீண்ட தூரம் வந்துள்ளது. லிபர் ஆஃபிஸ் இப்போது மிகவும் முதிர்ந்த மற்றும் நிலையான திட்டமாகும். இந்த சக்திவாய்ந்த மற்றும் இலவச அலுவலகத் தொகுப்பை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். அதன் சுத்தமான இடைமுகமும் வசதிய நிறைந்த கருவிகளும் படைப்பாற்றலை கட்டவிழ்த்து விடவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.

Leave a comment