1
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தில் நம்முடைய கணக்கினை எவ்வாறு அறவேநீக்குவது

சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து நம்முடைய தனியுரிமையை மீட்டெடுக்கவும், அல்லது இவைகளில் இனி அதிகஆர்வம் காட்டவில்லை என்றும் நம்முடைய சமூக ஊடக கணக்குகளை நீக்குவதற்கு நம்மிடம் பல்வேறு காரணங்கள் உள்ளன. . காரணங்கள் எதுவாக இருந்தாலும், சமூக ஊடகங்களில் நம்முடைய கணக்குகளை நீக்க பாரம்பரிய வழிகளிலிருந்து பயனுள்ள கருவிகள் வரை பல்வேறு வழிகள் உள்ளன. , பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகஊடகங்களில் நம்முடைய கணக்குகளை எவ்வாறு நீக்குவது என்பது இப்போது காண்போம்.பொதுவாக மேலேகூறிய முக்கிய சமூக ஊடகங்கள் அனைத்தும் நம்முடைய கணக்குகளை செயலிழக்கம் செய்வதற்கு அல்லது நீக்குவதற்கு நம்மை அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த செயல்முறையை செய்து முடிப்பது எவ்வளவு எளிதானது என்பது அந்தந்த தளத்தைப் பொறுத்தது.
1.ஃபேஸ்புக்கில் கணக்கினை நீக்குவது எப்படி? கணக்கினை செயலிழக்கச் செய்வது அல்லது நம்முடைய கணக்கை முழுவதுமாக நீக்குவது ஆகிய இரண்டு விருப்பங்களை பேஸ்புக் ஆனது வழங்குகிறது .முதல் விருப்பத்தில் கணக்கு செயலிழக்கப்படுகின்றதே தவிர தொழில்நுட்ப ரீதியாக நீக்கப்படுவதில்லை. பிற்காலத்தில் தேவையெனில் நம்முடைய கணக்கை மீட்டெடுப்பதற்கான விருப்பத்தை இது விட்டுச்செல்கிறது, அதாவது நம்மை பற்றிய தரவு இன்னும் எங்காவது சேமித்து வைக்கப்பட்டிருக்கும். பேஸ்புக் கணக்கை செயலிழக்கம் செய்வதற்காக, Settings -> Your Facebook Information-> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்திடுக உடன் விரியும் திரையில். Deactivation and Deletion என்பதை தேர்வுசெய்துகொண்டு Deactivate Account.எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Continue to Account Deactivation எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இது நம்முடைய சுயவிவரத்தை மட்டும் முடக்குகிறது மேலும் நாம் பகிர்ந்த இடுகைகளி லிருந்து நம்முடைய பெயரையும் புகைப்படங்களையும் மட்டும் நீக்குகிறது. இதனை தொடர்ந்து மற்றவர்கள் நம்முடைய கணக்கை பேஸ்புக்கில் தேடும்போது நம்மை கண்டுபிடிக்க முடியாது. இருப்பினும், மற்றவர்களின் இடுகைகளில் நம்முடைய பெயர் இன்னும் தோன்றக்கூடும். மற்றவர்களுடனான நம்முடைய செய்திகளும் தொடர்ந்து இருக்கும். மேலும், நம்முடைய செய்தியாளர் கணக்கும் செயலில் இருக்கும் – ஆனால் நாம் விரும்பினால் நம்முடைய பேஸ்புக் மெசஞ்சரை தனியாக செயலிழக்க செய்யலாம். இரண்டாவது விருப்பத்தில் நம்முடைய பேஸ்புக் கணக்கானது நிரந்தரமாக நீக்குகிறது. இதன்பின்னர் நம்முடைய கணக்கை மீட்டெடுக்க முடியாது . இதற்காக, Settings -> Your Facebook Information ->என்றவாறு கட்டளைகளை செயல்படுத்திடுக உடன் விரியும் திரையில் Deactivation and Deletion என்பதை தேர்வுசெய்துகொண்டு Delete Account.எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Continue to account deletionஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த செயலை தொடர்ந்து செயல்படுத்திடுக இதனை தொடர்ந்து நம்முடைய தரவுகதளை நீக்குவதற்கான செயல்முறை 90 நாட்கள் ஆகும். இது கணக்கை செயலிழக்கச் செய்து நிரந்தரமாக நீக்குகிறது. இனி பேஸ்புக் மெசஞ்சரைப் பயன்படுத்த முடியாது. இருப்பினும், மற்றவர்களின் இன்பாக்ஸில் உள்ள செய்திகள் போன்ற சில தரவுகளை நீக்க முடியாது.
2.ட்விட்டரில் நீக்குவது எப்படி? முதலில் நம்முடைய கணக்கினை செயலிழக்கச் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து 30 நாட்களுக்குப் பிறகு, நம்முடைய கணக்கு முற்றிலும் நீக்கப்பட்டுவிடும். நம்முடைய ட்விட்டர் கணக்கை அறவேநீக்கம் செய்திடுவதற்காக, இதனுடைய திரையின் முகப்புப்பக்கத்தின் இடதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கொண்ட பட்டியலிற்கான உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக தொடர்ந்து விரியும் பட்டியிலில் Settings and privacy எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையி்ன் கீழ்பகுதியில் Deactivate your account எனும் வாய்ப்பு இருப்பதை காணலாம் தொடர்ந்து இந்த திரையானது நம்மை இதனை உறுதிபடுத்திடு வதற்கான confirmation பட்டியலிற்கு நம்மை அழைத்து செல்லும் நம்முடைய ட்விட்டர் கணக்கை நீக்க அல்லது செயலிழக்க விரும்புகிறோம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக Deactivate என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. இதில் நம்முடைய தரவுகள் 30 நாட்களுக்கு மட்டுமே சேமிக்கப்படும். இந்த நேரத்தில் விரும்பினால் நம்முடைய கணக்கை மீண்டும் செயல்படுத்தவும் மீட்டெடுக்கவும் முடியும். 30 நாள் முடிந்ததும், நம்முடைய தரவுகளும் கணக்கும் நிரந்தரமாக நீக்கப்படும்.
3.Instagram ஐ நீக்குவது எப்படி?நம்முடைய கணக்கை தற்காலிகமாக முடக்க அல்லது நிரந்தரமாக நீக்க Instagram நம்மை அனுமதிக்கிறது. இதற்காகஇதனுடைய திரையில் Settingsஎனும் பட்டியலிற்கு செல்க அதில் Edit Profileஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். உடன் விரியும் திரையின் கீழ்பகுதியில் Temporarily disable my account எனும் இணைப்பை காணலாம் .இது அடிப்படையில் நம்முடைய கணக்கை மறைத்து, பின்னர் குறிப்பிட்ட தேதியில் அதை மீண்டும் இயக்க அனுமதிக்கிறது.இன்ஸ்டாகிராம் கணக்கை முழுமையாகவும் நிரந்தரமாகவும் நீக்க, இணைய உலாவி மூலம் Instagram இல் உள்நுழைந்து Delete Your Account request link எனும் இணைப்பை பயன்படுத்த வேண்டும். நம்முடைய கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட வேண்டும். இறுதியாக, Permanently delete my account என்பதைதெரிவுசெய்து சொடுக்குக. இந்த விருப்பம் நம்முடைய கணக்கை நிரந்தரமாக நீக்குகின்றது

Leave a comment