1
குழந்தைகள் நிரலாக்கம் கற்பதற்கான சிறந்த குறிமுறைவரி பயன்பாடுகள்

நம்முடைய குழந்தைகள் நாம் பேசுகின்ற மொழிகளை கற்பதை போன்றே கணினி மொழியையும் மிகச்சிறப்பாகக் கற்றுக்கொள்ளமுடியும். தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு நிரலாக்கத்தைக் கற்பிக்க பல்வேறு வசதி வாய்ப்புகளை வழங்குகின்ற குறிமுறைவரிகளுக்கான பயன்பாடுகள் ஏராளமான அளவில்உள்ளன. , குழுந்தைகளை நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்வதற்காக . குறிமுறைவரிகளின் கட்டுப்படுத்தப்பட்ட துவக்க முகாம்களான சூழலிற்குள் குழந்தைகளை அனுப்புவதற்கு பதிலாக, ஒரு வேடிக்கையான சிறந்த குறிமுறைவரி பயன்பாடுகள் மிகசிறப்பாக பயன்படுகின்றன.
1. Daisy the Dinosaur-Fact: என்பது ஒரு அருமையான. சிறந்த குழந்தைகளுக்கான குறிமுறைவரி பயன்பாடுகளில் ஒன்றாகும், குழந்தைகளுக்கு நிரலாக்க அடிப்படைகளை கற்பிக்க இதில் சிறியவிளையாட்டுகள் பலஉள்ளன. உதாரணமாக, இதனுடைய Daisyஎன்பதில் loop-deloop என்பதுடன் பல்வேறு நகர்வுகளைச் செய்ய கட்டளைகளைப் பயன்படுத்த குழந்தைகளை ஊக்குவிக்கிறது. இந்த டெய்ஸி டைனோசர் குழந்தைகளுக்கு நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த குறிமுறைவரி பயன்பாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது, அதமட்டுமல்லாமல் இதிலுள்ள Dinosaur எனும் கதாநாயகனை கொண்டு எளிய சொல் விளையாட்டு, புதிர் விளையாட்டுஆகியவற்றுடன் நிரலாக்கத்தை கற்க உதவுகின்றது கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துபயன்படுத்தி கொள்ள https://apps.apple.com/us/app/daisy-the-dinosaur/id490514278 எனும் இணையதளமுகவரிக்கு செல்க
2. Think and Learn Code-a-Pillar:என்பது மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்டது. தொழில்நுட்பநிரலாக்க திருத்தங்களுடன் குழந்தைகள் இதில் விளையாட தொடங்குவது ஒரு சிறந்த செயலாகும் இந்த பயன்பாடு அதனுடன் தொடர்புடைய பொம்மை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இந்தபயன்பாட்டின் மூலம் குழந்தைகள் புதிர்களைத் தீர்க்கமுடியும் – அடிப்படை கணினி நிரலாக்கம் குறிமுறைவரிகள். இருப்பினும், ஒருசில குழந்தைகளுக்கு சற்று சவாலானதாக இருக்கலாம், எனவே வயது வந்தோர் மேற்பார்வை செய்தால் நல்லது. . கூடுதலாக, கவனச்சிதறல் இல்லாத அனுபவத்திற்காக இசை விளைவுகளை முடக்குக கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள https://play.google.com/store/apps/details?id=air.fisherprice.com.codeapillarGoogle எனும் இணையதள முகவரிக்கு செல்க

3. Tynker-Tynker:என்பது குழந்தைகளுக்கான நிரலாக்கத்துடன் கைகோர்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. குழந்தைகள் நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்வதற்கான பல பயன்பாடுகளைப் போலவே, உற்சாகத்துடன் குறிமுறைவரிகளை ஊக்குவிக்கிறது. இதில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) ஆகியவற்றை ஆராயவும் ஒரு தெளிவான கற்றல் பாதையாகவும் இது உள்ளது. அதிகரிக்கும் முன்னேற்றத்தின் அளவைக் கொண்ட ஒரு விரிவான சூழல், குழந்தைகள் நிரலாக்கத்தைக் கற்க சிறந்த ஊடகங்களில் ஒன்றாகஇருக்கின்றது. இதனை கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள https://play.google.com/store/apps/details?id=air.fisherprice.com.codeapillarGoogle எனும் இணையதள முகவரிக்கு செல்க

4. Nancy Drew :தொழில்நுட்ப கண்காட்சி தீர்வு மர்மம் பற்றிய கதை ஒன்று இதில் உள்ளது. , குழந்தைகள் காட்சி குறிமுறைவரி தொகுப்புகளை சரியான இடங்களுக்கு கொண்டுசெல்கின்றது. இது STEM மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த நுழைவு-நிலை குறிமுறைவரி பயன்பாட்டைக் கண்டுபிடிக்கும். அதன் சீரான விளையாட்டு காரணமாக, குழந்தைகள் நிரலாக்கத்தைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த குறிமுறைவரி பயன்பாடுகளில் ஒன்றாகும் உங்கள் குழந்தைகள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான பாராட்டுக்களைப் பெற இது மிகச்சிறந்ததாக விளங்குகின்றது இதனை கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள https://www.amazon.com/Nancy-Codes-Clues-Mystery-Coding/dp/B01F9UC4E0 எனும் இணையதள முகவரிக்கு செல்க

5. Algorithm City: அடிப்படை குறிமுறைவரிகளை கற்பிக்க கட்டளை வரிசைமுறை, செயல்பாடுகள் சுழல்கள் ஆகியவை இதில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதில் ஏறத்தாழ51 நிலைகளை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது, . எளிமையான இடைமுகம், எளிதான கட்டுப்பாடுகள் கதாபாத்திரத்தின் தேர்வு மூலம், குழந்தைகளுக்கு நடைமுறை நிரலாக்கத்தைக் கற்பிக்கிறது..இதனை கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள https://play.google.com/store/apps/details?id=air.MusterenGames.ElHarezmiCoding எனும் இணையதள முகவரிக்கு செல்க
6. ScratchJr: இறுதியாக, குழந்தைகளுக்கான சிறந்த குறிமுறைவரி பயன்பாடான இது ஐந்து முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது. எடிட்டிங் கருவிகளுடன் ஒரு மேடை, நிரலாக்க பகுதி ,தொகுதிகள் தட்டு ஆகியவற்றைச் சுற்றி ஒரு எளிய பயனாளர் இடைமுகம் அமைந்துள்ளது. .இதனுடைய இணையபக்கத்தில் ஏராளமான பயிற்சிகளைக் காணலாம். இதனை கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளhttps://www.scratchjr.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

Leave a comment