1
பைதான் எனும் கணினிமொழியை கட்டணமில்லாமல்கற்க உதவிடும் இணையதளங்கள்

பைதான் எனும் கணினிமொழியைகட்டணத்துடன் கற்பதற்காக ஏராளமான இணையதளங்களும் வழிகாட்டிநூல்களும் உள்ளன ஆயினும் கட்டணமில்லாமல் இந்த கணினிமொழியை கற்பதற்காக உதவிடும் சிறந்த வழிகாட்டிநூல்களை மட்டும் இப்போது காண்போம்அதிலும் பைதானை பற்றி அறியாத தெரியாத புதியவர்கள்கூட இவைகளின் உதவியுடன் மிக எளிதாக இந்த பைதான் எனும் கணினிமொழியை கற்று வல்லுனராக மிளிரமுடியும் என்பதுதிண்ணம்.

1. Think Python என்பது பைதான் எனும் கணினிமொழியை படிப்படியாக கற்று சிறந்த கணினி வல்லுனராக வளர உதவிடும் மிகச்சிறந்த வழிகாட்டிநூலாகும் .இதில் slangs குறைத்து, ஒரு வரையறையுடன் தொடங்குதல்.,மிகவும் கடினமான தலைப்புகளை அவற்றை சிறிய படிவரிசைகளாக பிரித்துவழங்குதல்.,நிரலாக்க மொழிக்குபதிலாக, நிரலாக்கத்தில் கவனம் செலுத்துதல் ஆகியவைஇதன் முதன்மைகுறிக்கோளாகும். நேரடியாக இணையத்தில் பைதான் மொழியை கற்றுகொள்ளலாம்அல்லது தேவையெனில் பதிவிறக்கம் செய்து பயிலமுடியும்2.Byte of Python என்பது மற்றொரு மிகச்சிறந்த கட்டணமற்ற வழிகாட்டி நூலாகும் இது புதியவர்களுக்கு ம் துவக்க நிலையாளர்களுக்கு ம்மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றது ஒரு உரைவடிவ கோப்பினை எவ்வாறு நம்முடைய கணினியில் சேமிக்கின்றனர் என்பன போன்ற அடிப்படைவிவரங்களைகூட இந்த வழிகாட்டிநூலின் உதவியால் எளிதாக கற்று வல்லுனராக முடியும் எனும் எளிய அடிப்படையில்இந்த வழிகாட்டிநூல் உதவுகின்றது3.Learn Python the Hard Way பைதான் எனும் கணினிமொழியின் கற்க துவங்கிடும் துவக்க நிலையாளர்களுக்கு எழும் எந்தவொரு சந்தேகத்தினையும் தீர்வுசெய்வதற்காக இணையத்தின் வாயிலாக நேரடியாக கைகொடுக்க உதவுவதுதான் இந்த வழிகாட்டிநூலாகும் இந்த வழிகாட்டி நூலை முழுவதும் கற்றுமுடித்தால் நிகழ்வுநேரத்தில் பைதான் மொழியில் பணிபுரிகின்ற வல்லமை கிடைக்கபெறும் .பைதான் மொழியின் நுட்பங்களைப் இந்த வழிகாட்டியில் வழங்கியுள்ள பயிற்சியை பயன்படுத்தி. கடினமான சிக்கல்களைத் தீர்வுசெய்வதற்காக தேர்ந்தெடுத்து மெதுவாக படிப்படியாக திறன்களை வளர்த்து கொள்க4.Dive Into Pythonஎன்பது பைதானை கற்கதுவங்கிடும் துவக்கநிலையாளர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி நூலாகும் இது நிராலாகக்கத்தை கற்றுகொடுப்பதற்கு பதிலாக பல்வேறு வகையான வடிவமைப்புகளை இணையத்தில் மேற்கோளாக காட்டுகின்றது அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி தெளிவுபெறலாம் நம்முடைய கணினியில் பைதானின் எந்த பதிப்பை நிறுவுகை செய்திருந்தாலும் அதனைகொண்டு கற்க இது உதவுகின்றது5.Google’s Python Book இது கூகுள் நிறுவனத்தாரின் இணையத்தின் வாயிலாக நேரடியாக கானொளி காட்சிகள் குறிமுறைவரிகள் ஆகியவற்றை கொண்ட பயிற்சிகளுடன் துவக்க நிலையாளர்கள் எளிதாககற்க உதவகின்றது மேலும்விவரங்களுக்கு https://developers.google.com/edu/python எனும் இணையதளபக்கத்திற்கு செல்க

6.Python Practice Bookஇதுதுவக்கநிலையாளர்களுக்கானபல்வேறு பயிற்சி குறிப்புகளை கொண்டுள்ளது அதனோடு பைதான் மொழிபற்றிய முக்கிய குறிப்புகளையும் ஆலோசனை குறிப்புகளையும்கொண்டுள்ளது அவற்றை கொண்டு யாரும் மிக எளிதாக பைதான் மொழியை கற்றுகொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு https://anandology.com/python-practice-book/ எனும் இணையதளபக்கத்திற்கு செல்க7.Automate the Boring Stuffஎன்பதை கொண்டுஇணையத்தின் வாயிலானவழிகாட்டிநூலில், கைமுறையாகச் செய்தால் பலமணிநேரம் செலவழிக்கும் பணிகளை தானியக்கமாக ஆக்குவதற்கு பைதான் மொழியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளமுடியும். நிரலாக்கத்தின் அடிப்படைகளை புரிந்துகொண்டவுடன், நிரல்களை சிரமமின்றி எழுதமுடியும். இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் படிப்படியான வழிமுறைகளைகாணலாம். அந்த திட்டங்களை மேம்படுத்த தேர்வு செய்யலாம் இதுபோன்ற கூடுதல் பணிகளை தானியக்கமாக்குவதற்கு புதிய திறனைப் பயன் படுத்தலாம்.மேலும்விவரங்களுக்கு https://automatetheboringstuff.comஎனும் இணையதளபக்கத்திற்கு செல்க

Leave a comment