1
ஜாவா ,பைதான் ஆகிய இரண்டு திறன்மிக்க பயன்பாடுகளுக் கிடையேயான வேறுபாடுகள்

ஜாவா ,பைதான் ஆகிய இரண்டும் மிகவும் பிரபலமான திறன்மிக்க பயன்பாடுகளாகும் . நாம் விரும்பும் எந்தவொரு புதிய பயன்பாட்டினையும் இவைகளை கொண்டு எளிதாக உருவாக்கி பயன்படுத்தி கொள்ளமுடியும் இருந்த போதிலும் இவைகளுக்கிடையே பல்வேறு வேறுபாடுகள்உள்ளன அவை பின்வருமாறு

ஜாவா என்பது தற்போது நாமனைவரும் பயன்படுத்தி கொண்டுவரும் கைபேசி , இணையம், ஆகியவற்றிற்கான பொருள்நோக்கு பயன்பாட்டு மென்பொரு ளை உருவாக்குவதற்காக பயன்படும் ஒரு கணினிமொழியாகும் பைதான் என்பது இணையம் செயற்கைநினைவகம் இயந்திரகற்றல் தானியிங்கி செயல்கள் தரவுதள அறிவியல் ஆகியவற்றிற்கான மேல்நிலைபொருள்நோக்கு பயன்பாடுகளை உருவாக்க உதவிடும் ஒரு கணினிமொழியாகும்

ஜாவாவானது பெரும்பாலும் நிறுவனங்களைத்தவிரமிகுதி அனைத்து பயனாளர்களுக்கும் கட்டற்ற கட்டண மற்றதாகும்

பைதானானது அனைத்துபயனாளர்களுக்கும் கட்டற்ற கட்டணமற்றதாகும்

ஜாவானது நிரலாக்கத்திற்கான குறிமுறைவரிகளைஒருமுறை மட்டும்எழுதியபின் எங்கு வேண்டுமானாலும் எந்த தளத்தில் வேண்டுமானாலும் அதனை இயந்திர மொழிக்கு மொழிமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

பைதானானது குறிப்பிட்ட தளத்தில் எழுதிய நிரலாக்கத்திற்கான குறிமுறை வரிகளை அந்த குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

ஜாவாவில்பயன்பாட்டு நிரலாக்கத்திற்கான குறிமுறைவரிகளைஅதனை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம் செய்தபின்னரே பயன்படுத்தி கொள்ளமுடியும் அதனால் இதனை compiled language என அழைப்பார்கள்

பைதானில் இயக்கநேரத்திலேயே இயந்திரமொழிக்கு மொழிமாற்றும் பணி தானாகவே நடைபெற்று பயன்பாடு இயங்கதுவங்கிடும் அதனால் இதனை interpreted languageஎன அழைப்பார்கள்

நிரலாக்கத்தினை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம்செய்தபின்னர் ஜாவாவில் .classஎன்றவாறு இதற்கானகோப்பு உருவாகிடும்

பைதானில் .pycஎன்றவாறு இதற்கானகோப்பு உருவாகிடும்

நிரலாக்கத்தினை இயந்திரமொழிக்கு மொழிமாற்றம்செய்திடும்போது ஜாவாவில்compile errors, runtime errors ஆகிய இருவகைகளானபிழைகள் உருவாகிடும் அதற்குமறுதலையாக பைதானில் traceback (or runtime) error எனும் ஒருவகை பிழைமட்டுமே உருவாகிடும்

ஜாவாவில் கட்டளைவரிகள்ஒவ்வொன்றும் ( ; ),என்ற முக்கால் புள்ளியுடன்முடிவடையும் அவ்வாறே ஒரு தொகுப்பு செயலியானது ( {} ) எனும் இருதலைஅடைப்புக்குள் துவங்கி முடியும்

பைதானில் கட்டளைவரிகள் உள்தள்ளல் கொள்கைமட்டுமேபின்பற்றபடுகின்றது ஜாவாவின் குறிமுறைவரிகளில் ஒருகுறிமுறைவரியில் ஒரேயொரு மிகமேம்பட்ட இனம் மட்டும் இருக்கும் அதற்குபதிலாக பைதானில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகமேம்பட்டஇனங்கள் ஒரே யொரு குறிமுறைவரியில் இருக்கும்

ஜாவாவில் குறிப்பிட்ட பணியை செயற்படுத்திடுவதற்கான கட்டளைகளை நூற்றுகணக்கான வரிகளில் எழுதவேண்டியுள்ளது அதற்குபதிலாக பைதானில் குறிப்பிட்ட பணிக்கான கட்டளைகளை ஒருசிலவரி குறிமுறைவரிகள்எழுதினால் போதுமானதாகும்

ஜாவாவில் இயக்கநேரத்தில் ஒரே நேரத்தில் multi-threading ஐஆதரிக்ககூடியது பைதானில் இயக்கநேரத்தில் ஒருநேரத்தில் single thread ஐ மட்டுமேஆதரிக்கும்

ஜாவாவானது மிகவிரைவாக செயல்படும் திறன்கொண்டதாகும் பைதானானது மிகமெதுவாகசெயல்படும் திறன்கொண்டதாகும்

ஜாவாவில்ந ம்முடைய முதன்முதலான நிரலாக்க குறிமுறைவரிகளானவை பின்வருமாறு இருக்கும்

public static void main(String[] args) {

System.out.println(“அனைவருக்கம் வணக்கம்!”);

}

}

அதற்குபதிலாக பைதாதனில் ந ம்முடைய முதன்முதலான நிரலாக்க குறிமுறைவரியானது பின்வருமாறு இருக்கும்

print(“அனைவருக்கம் வணக்கம்!”)

ஜாவாவில் நிரலாக்கத்தினை இயந்திரமொழி்க்குமொழிமாற்றம்செய்தால் “அனைவருக்கம் வணக்கம்.class ” என்றவாறு இருக்கும்

பைதானில் நிரலாக்கத்தினை இயந்திரமொழி்க்குமொழிமாற்றம்செய்தால் “python3 அனைவருக்கம் வணக்கம்.py” என்றவாறு இருக்கும்

Leave a comment