1
மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்

(பகுதி 1)

மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது

ஆதிகாலத்துமனிதனுக்கு அன்றாட தேவைகள் மிகவும்குறைவாகவே இருந்தன. அவற்றுள் முக்கியமானவை உணவு தேடி உண்பதும், ஆண்பெண் உறவுமாகும். இவைகளோடு அவனது வாழ்நாட்கள் கழிந்தன.
அன்றாடத்தேவைகளை வெற்றிகரமாகக் கையாளுகிறோம் என்று அவன் திருப்தியடைந்திருந்தான்.
வேறு தேவைகள் ஏற்படாதவரையும் அவன்வேறெதையும்பற்றிச் சிந்திக்கவில்லை.
ஆனால், காலப்போக்கில், தனது அன்றாட தேவைகள்உணவோடும் உறவோடும் நின்றுவிடவில்லை என்பதையும், மேலும் பல தேவைகளும்ஆசைகளும் மனிதகுலத்துக்கு உண்டு என்பதையும் அனுபவரீதியாகஉணரத்தொடங்கினான். அதனால், படிப்படியாக அவனுடைய தேவைகளும்ஆசைகளும் விரிவடைந்த அவனுடைய முயற்சிகளும் பலதரப்பட்டவையாகப்  பரிணமித்தன.

உணவு தேடும் முயற்சிகளில் அவனுக்குவேட்டைக்கருவிகள், வேளாண்மை செய்வதற்கு வேண்டிய  நிலபுலம், தண்ணீர் வசதி, விதைகள் எனஅன்றாட  தேவைகள்பல புதிதாக முளைத்தன. அத்துடன், தங்கியிருப்பதற்கு உறைவிடம், குளிரையும் வெயிலையும் தாங்கிக்   கொள்வதற்குமேலுடைகள், உணவு தயாரிப்பதற்குத் தேவையானபண்டங்கள், பாத்திரங்கள், உபகரணங்கள் முதலியன அவனுடைய தேவைகளைப்பன்மடங்கு அதிகரிக்கச்  செய்தன.

இடையிடையேசமூகப் பிரச்சினைகளும் உருவெடுத்து பிரச்சினை கொடுத்தன.

இவ்வாறு, மேன்மேலும் ஏற்பட்ட தேவைகளும் அவற்றைப்பெற்றுக்கொள்ளும் ஆசையும் அவனுடைய வலிமையைச்சோதிக்கத் தொடங்கின.

சில சில அலுவல்கள் மனிதனுடையமுயற்சியினால் முற்றுப்பெறாதோ என்ற சந்தேகம் அவனதுமனதில் இடம்பிடிக்கத் தொடங்கிற்று.
ஆகவே, மனிதனது முயற்சிகளுக்குள் அடங்காததும்,, அவனது வலிமைக்கு அப்பாற்பட்டதுமான ஏதோ ஒரு சக்திஇருக்கிறது என்பதை அனுபவ வாயிலாகஅவன் உணர்ந்தான்.

தனது வல்லமையால் சாதிக்கமுடியாதவற்றை தமக்கு மேலான ஒருசக்தி அருளக்கூடிய உதவியுடன் சாதிக்கலாம் என்னும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டான்.

மனித வலுவுக்கும் மேலான அந்த சக்தியைக்கற்பனைபண்ணி, அதற்குப் பணிந்து நடப்பதைத்தவிர வேறுவழியில்லைஎன்ற உண்மையை உணர்ந்துகொண்டதும், அந்தசக்திக்கு தன் சொந்தக் கற்பனைக்கேற்றவாறுஉருவம்கொடுத்து அதை வழிபடத்தொடங்கினான்.
இன்றும்உலகமக்களிடையே இப்படியான முயற்சிகள் இருப்பதை நாம் காண்கிறோம்.

காலத்துக்குக்காலம் புதுப்புதுத் தெய்வங்களை உருவாக்கி மக்கள் வழிபடுகிறார்கள். 

தெய்வ நம்பிக்கை

மனிதனுக்குதன் கருமங்களை ஆற்றுவதற்கு தன் வலிமையில் நம்பிக்கையில்லை.

அதனால்ஏதாவது தன்னைவிட உயர்ந்த ஒரு சக்தியைத்தெய்வமாக ஆராதிக்கிறான்.

அத்தெய்வம்தனது ஸ்டங்களைக் களையவேணும் என்றும், தன்னால் முடியாததை  தனக்குப் புறத்தியிலிருந்து வரக்கூடிய தெய்வம்தான் - அதாவது ஒரு சக்திதான்- முடித்துத் தரமுடியும், முடித்துத் தரவேணும் என்றும் எண்ணுகிறான். அதற்காக,  வெவ்வேறுநாடுகளிலுள்ளோர் தாங்களே தங்கள் கற்பனைக்குஏற்றவாறு  தெய்வங்களைச்சிருட்டித்து அவற்றை ஆராதித்து பூஜைகள்பண்ணுகிறார்கள்.

ஓரோர் நாடுகளில் உற்பத்தியாகும் தெய்வவழிபாடு மற்றைய நாடுகளுக்கும் பரவி அங்குள்ளவர்களையும்அவ்வாழிபாட்டில் ஈடுபடச்செய்கின்றது.
உதாரணமாக, யேசுநாதர் அவதரித்தார், அவரின் புத்திமதிகளைச் சிரமேற்கொண்டுபன்னாட்டிலும் மக்கள் கிறிஸ்துவ சமயத்தைத்தழுவி தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறார்கள்.

புத்தபிரான்சொல்லிப்போன போதனைகளை உண்மையாகப் பின்பற்றும் புத்தசமயிகள் அதற்கேற்ப தமது வாழ்க்கைநெறிகளைச் செம்மைப்படுத்துகிறார்கள்.

இந்துமதத்தின்சைவப்பிரிவை எடுத்துக்கொண்டால், சிவபெருமானையும், அதற்கு அடுத்தபடியாக பற்பல தெய்வங்களையும் பக்தர்கள்தங்கள் இஸ்டப்படி சிருட்டித்து வழிபடுகிறார்கள்.

ஆகவே, மனிதனானவன் தனது வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்குதெய்வ வழிபாட்டை  நாடினான். 

இங்கு நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால்இந்தத் தெய்வங்கள் எல்லாம்  மனிதனின்நம்பிக்கையிலும் கற்பனையிலும் எழுந்த சிந்தனையிலிருந்தே உருவெடுத்தவையாகும். அது தலைமுறை தலைமுறையாகதெய்வ வழிபாடுஎன்னும் அகன்ற தலைப்பின்கீழ்  மக்களின்வாழ்க்கையை ஆட்சிசெய்து வந்திருக்கிறது.
இன்றும்அதுவே நடக்கிறது.

காலங்காலமாகமனிதர்கள் பல்வேறு தெய்வங்களை அவரவர்நம்பிக்கைக்கேற்ப உருவகப்படுத்தி வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
ஆதிகாலத்தில்அவர்கள் தம்முடைய வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதற்கு இன்றியமையாதிருந்த இயற்கை வளங்களைப் பாவித்தும், அத்துடன் மனுக்குலத்துக்கு மிகவும் உபயோகமாயிருந்ததும் வலிமைமிகுந்ததுமானஎருது, பசு, யானை முதலியவிலங்கினங்களை ஆதரித்ததுடன், தத்தமக்குப் பரிச்சியமான சிறு தெய்வங்களை வழிபட்டுஅவற்றிற்கு நன்றிக்கடன் செலுத்தியும் வந்தார்கள். அக்காலத்து ஆன்றோர்கள் மக்களை உளவளரீதியாக ஒழுங்கமைக்கும்நோக்கோடு தங்கள் கற்பனையில் உதித்தவாறுசில தெய்வங்களைச் சிருட்டித்தார்கள்.  தெய்வவழிபாட்டை நெறிப்படுத்துவதற்காக சில ஒழுங்கு முறைகளையும்கட்டுப்பாடுகளையும் அவர்கள் வகுத்தார்கள்.  அத்தெய்வங்களைக் கும்பிடும்போது அவர்கள் மனதில் பக்தியையும்அத்துடன் ஒருவிதபயத்தையும் தாங்கள் வகுத்த ஒழுங்குமுறைகளுக்குள்புகுத்தினார்கள். கட்டாக்காலி மாடுகளை ஒழுங்காகப் போய்மேய்வதற்குச் சாய்த்துவிடுவதுபோல மனிதர்களையும் தாம் வகுத்த வழிபாட்டுமுறைகளைக்கடைப்பிடித்து வாழும்வண்ணம் பணித்தார்கள்.

கடவுள்அன்பே உருவாயுள்ளவர் என்னும் உண்மையைப் புறந்தள்ளி, அவருக்கும் மனிதனைப் போலவே கை, கால், மூளை, வயிறு, முதலிய உறுப்புகளும், இரக்கம், பரிவு, கோபம், கடமை, நன்;றி, முதலிய குணாதிசயங்களும்இருக்கும் என்றும், அவரும் மனிதனைப்போலவே செயற்படுவார்என்ற ந%2
Be the first to vote for this post!

Leave a comment