1
85. நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒரு அறிமுகம்

ஆழ்வார்கள் திருமாலின் பெருமை குறித்துப் பாடிய பாசுரங்கள் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன.

திவ்யப் பிரபந்தங்கள் மொத்தம் 24.  

 1. திருப்பல்லாண்டு
 2. பெரியாழ்வார் திருமொழி
 3. திருப்பாவை
 4. நாச்சியார் திருமொழி
 5. பெருமாள் திருமொழி
 6. திருச்சந்த விருத்தம்
 7. திருமாலை
 8. திருப்பள்ளி எழுச்சி
 9. அமலனாதிபிரான்
 10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
 11. பெரிய திருமொழி
 12. திருக்குறுந்தாண்டகம்
 13. திருநெடுந்தாண்டகம்
 14. முதல் திருவந்தாதி
 15. இரண்டாம் திருவந்தாதி
 16. மூன்றாம் திருவந்தாதி
 17. நான்முகன் திருவந்தாதி
 18. திருவிருத்தம்
 19. திருவாசிரியம்
 20. பெரிய திருவந்தாதி
 21. திருஎழுகூற்றிருக்கை
 22. சிறிய திருமடல்
 23. பெரிய திருமடல்
 24. இராமானுச நூற்றந்தாதி

நாலாயிர திவ்ய பிரபந்தம் நான்கு ஆயிரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

1. முதலாயிரம் - 947 பாடல்கள்
 1. திருப்பல்லாண்டு - பெரியாழ்வார் -12 பாடல்கள் 
 2. பெரியாழ்வார் திருமொழி - பெரியாழ்வார் - 461 பாடல்கள் 
 3. திருப்பாவை - ஆண்டாள் - 30 பாடல்கள் 
 4. நாச்சியார் திருமொழி - ஆண்டாள் - 143 பாடல்கள் 
 5. பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார் - 105 பாடல்கள் 
 6. திருச்சந்த விருத்தம் - திருமழிசை ஆழ்வார் - 120 பாடல்கள் 
 7. திருமாலை - தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 45 பாடல்கள் 
 8. திருப்பள்ளி எழுச்சி - தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 10 பாடல்கள் 
 9. அமலனாதிபிரான் - திருப்பாணாழ்வார் - 10 பாடல்கள் 
 10. கண்ணிநுண்சிறுத்தாம்பு - மதுரகவி ஆழ்வார் - 11 பாடல்கள் 
2. பெரிய திருமொழி - 1134 பாடல்கள்
 1. பெரிய திருமொழி - திருமங்கை ஆழ்வார் - 1084 
 2. திருக்குறுந்தாண்டகம் - திருமங்கை ஆழ்வார் - 20 பாடல்கள் 
 3. திருநெடுந்தாண்டகம் - திருமங்கை ஆழ்வார் - 30 பாடல்கள் 
3.  இயற்பா - 817 பாடல்கள்
 1. முதல் திருவந்தாதி - பொய்கையை ஆழ்வார் - 100 பாடல்கள் 
 2. இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார் - 100 பாடல்கள் 
 3. மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார் - 100 பாடல்கள் 
 4. நான்முகன் திருவந்தாதி - திருமழிசை ஆழ்வார் - 96 பாடல்கள் 
 5. திருவிருத்தம் - நம்மாழ்வார் - 100 பாடல்கள் 
 6. திருவாசிரியம் - நம்மாழ்வார் - 7 பாடல்கள்
 7. பெரிய திருவந்தாதி - நம்மாழ்வார் - 87 பாடல்கள்
 8. திருஎழுகூற்றிருக்கை - திருமங்கை ஆழ்வார் - 1 பாடல் 
 9. சிறிய திருமடல் - திருமங்கை ஆழ்வார் - 40 பாடல்கள்  
 10. பெரிய திருமடல் - திருமங்கை ஆழ்வார் - 78 பாடல்கள்  
 11. இராமானுச நூற்றந்தாதி -  திருவரங்கத்தமுதனார் - 108 பாடல்கள் 
4. திருவாய்மொழி - நம்மாழ்வார் - 1102 பாடல்கள்

மொத்தம் - 4027 பாடல்கள்

இவ்வாறு பிரபந்தங்கள் வகுக்கப்பட்டிருப்பதில் இரண்டு சிறப்புகளைக் குறிப்பிட வேண்டும்.

1) மதுரகவி ஆழ்வார் பாடிய கண்ணிநுண் சிறுத்தான்பு என்ற 11 பாடல்களும் நம்மாழ்வார் பற்றிப் பாடப்பட்டவை.

2) ராமானுஜ நூற்றந்தாதி ராமானுஜருடன் சம காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்தமுதனார் என்ற அவருடைய சீடரால் ராமாநுஜரின் பெருமை  குறித்துப் பாடப்பட்டது.

இந்த இரண்டு பாடல் தொகுப்புகளும் திருமால் மீது பாடப்பட்டவை அல்ல. அதிலும் திருவரங்கத்தமுதனார் ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெறுபவர் இல்லை.

என்ற போதிலும், இவை இரண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவைணவத்தில் நம்மாழ்வாரும், ராமானுஜரும் எவ்வளவு உயர்ந்த இடத்தில், திருமாலுக்கு நிகராகவே நினைத்துப் போர்ரப் படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

பாசுரங்களை விரிவாக்கப் பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

| ஒம் நமோ நாராயணாய |


Who Voted

Leave a comment