1
ஜாவாவில் JVMஅல்லது JRE அல்லது JDK ஆகிய மூன்றுவகைகளில் எதனைதேர்வு செய்வது

கணினியில் ஜாவாவை தழுவிய பயன்பாடுகளே பெரும்பாலும் உள்ளனஅதிலும் தற்போது நாம் பயன்படுத்திவருகின்ற பல்வேறு பயன்பாடுகளுக்கும் பின்புலமாக ஜாவா விளங்குகின்றது அதனால் நாம் பயன்படுத்திடும் எந்தவொரு இயக்க முறைமையிலும் இந்த ஜாவா பயன்பாடுகள் நன்கு செயல்படுகின்றன அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கிடுகின்ற நிரலாக்க சூழல்களில் ஜாவாவும் ஒன்றாகும் .ஒரு பயன்பாட்டு மேம்படுத்துநர் அல்லது பயனாளராக இருந்தாலும் குறி ப்பிட்ட பயன்பாடு நம்முடைய இயக்கமுறைமையில் செயல்படுமோ செயல்படாது நின்றுவிடுமோ என்ற பதட்டம் எதுவும் இன்றி ஜாவாவில் உருவாக்கப்பட்ட பயன்பாடு எனில் கண்டிப்பாக எந்தவொரு இயக்கமுறைமையிலும் செயல்படும் என நம்பிக்கையாக இருக்கமுடியும் வழக்கமாக ஒரு பயன்பாட்டை கணினியில் நிறுவ பல வழிகள் உள்ளன. app storeஇலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்வது அல்லது ஒரு தொகுப்பு நிர்வாகியுடன் அதை நிறுவுகை செய்துகொள்வது அல்லது இணையத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்வது. ஜாவா ஆனது ஒரு கட்டற்ற கணினிமொழியாகும் அதனால் பெரும்பாலானவர்கள் இதனை தம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளவிரும்புவார்கள்

ஆயினும் இதில் JVMஅல்லது JRE அல்லது JDK ஆகிய மூன்றுவகைகள் உள்ளன இவற்றுள் எதனை பயன்படுத்திகொள்வது என்ற கேள்வி நம்மனைவரின் மனதிலும் எழும் இவைகளில

ஜாவா மெய்நிகர் கணினி Java Virtual Machine (JVM)என்பது் நம்முடைய கணினியில் ஒரு இயந்திரம்போன்று ஜாவா பயன்பாடுகளை நம்முடைய கணினியில் நிறுவுகைசெய்து இயங்க உதவுகின்றது இது ஜாவா இயக்கநேரசூழலையும் Java Runtime Environment (JRE)சேர்த்து பயனாளருக்கு உதவிடுகின்றது .அடுத்து ஜாவா பயன்பாட்டினை பயன்படுத்த விரும்புவோர்களுக்கு ஜாவா இயக்கநேரசூழல் Java Runtime Environment (JRE).உதவுகின்றது

ஜாவா பயன்பாட்டினை உருவாக்கி JRE இன் நூலகத்தை பயன்படுத்தி பயன்பாடுகளை இயக்கி பயன்படுத்தவிரும்புவோர்களுக்கு ஜாவா மேம்படுத்திடும் கருவிJava Development Kit (JDK) உதவுகின்றது அதிலும் இதனை கட்டற்றதாக விரும்புவோர்களுக்கு இதனுடைய OpenJDK பேருதவியாய் விளங்குகின்றது ஆரக்கிள் நிறுவனத்தின் உடைமையாக ஜாவா இருந்தபோது OracleJDK ஆக இருந்தது சன்மைக்ரோசிஸ்டம் ஜாவாவை விற்பணைசெய்தபிறகு JDK ஆனது கட்டற்றதாக இருந்ததால் OpenJDK ஆக பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது அதனால் ஜாவா பயன்படுத்தவிரும்புவோர் ஜாவா 8 அல்லது ஜாவா 12 ஆகிய பதிப்புகளில் தமக்குதேவையானதை பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

Leave a comment