1
2020-ல் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய டாப்-10 புரோகிராமிங்க் மொழிகள்.


இன்று எல்லாத் துறையிலும் கம்ப்யூட்டர் புகுந்து விட்டது. பேப்பர் பேனா காலம் முடிந்து விட்டது. தகவல்களை சேமிக்கவும் பெறவும் கம்ப்யூட்டர் பயன்படுகின்றது. தானியங்கி முறையில் இயங்கும் கார்கள் கணினி துறை உதவியுடன் வந்து விட்டது.எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு என்பது தெரிந்து போய் விட்டது.எனினும் இவற்றை உருவாக்க நிறைய நிரலாக்க மொழிகள் வந்து விட்டன. இந்த 2020-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய டாப்-10 நிரலாக்க மொழிகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
1.      பைத்தான்.
 பைத்தான் சந்தேகமின்றி முதல் இடத்தை வகிக்கின்றது.புதிதாய் கற்றுக் கொள்வர்களும் எளிதாக கற்றுக் கொள்ளும் வண்ணம் அமைகின்றது.வேகமான, உபயோகிப்பதற்கு எளிதான மேம்பட்ட மென்பொருட்களை உருவாக்க பைத்தான் பயன்படுகின்றது. YouTube, Instagram, Pinterest, SurveyMonkey என்று எல்லாமே பைத்தான் கொண்டு உருவாக்கப்பட்டவை.உங்களுக்கு தேவைப்படும் ஒரு புரோகிராமர் வேலைக்கு இன்று பைத்தான் அறிவு மிகவும் முக்கியம்.oops கருத்துகளை ஆதரிக்கின்றது. பெரிய லைப்ரரி ஃபைல்களை கொண்டுள்ளது.டேட்டா சைன்ஸ், மெசின் லியர்னிங்க் என்று எல்லாத் துறையுலும் பைத்தான் பயன்படுகின்றது.
2.ஜாவா.
ஜாவாவானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நிரலாக்க மொழியாய் இருக்கின்றது.இது மேம்பட்ட வெப் எண்டர்பிரைஸ் பயன்பாடுகளை உருவாக்க ஜாவா பயன்படுகின்றது.உங்களுக்கு ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் வேலை தேவை என்றால் ஜாவாஸ்கிரிப்ட் அறிவு அவசியம். மேலும் ஆன்ட் ராய்டு ஸ்டுடியோ  மூலம் ஆண்ட் ராய்டு பயன்பாடுகளை உருவாக்க ஜாவா பயன்படுகின்றது.
3.      சி, சி++
இது சிஸ்டம் லெவல் புரோகிராமிங்க் செய்வதற்கு உதவும் இரண்டு நிரலாக்க மொழிகளாகும்.நீங்கள் சிஸ்டம் நிரல் தேவையென்றால் சந்தேகமின்றி சி, சி++ கற்றுக் கொள்ளலாம்.சி ++ அனது மிகவும் வேகமான அதே நேரத்தில் நிலையான மொழியாக விளங்குகின்றது.
மேலுன் இது STL எனப்படும் ஸ்டாண்டர்டு டெம்ப்லேட் டைப்ரரியைக் கொண்டுள

Leave a comment