1
லினக்ஸ் இயக்கமுறைமையில் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டளைவரிகள்

விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்தியபிறகு லினக்ஸுக்கு மாறுவது கொஞ்சம் அச்சுறுத்தலாக இருக்கும் இருந்தபோதிலும் இதுஒரு கட்டற்ற இயக்கமுறைமைஎன்பதால் இதனை பெரும்பாலானநிறுவனங்கள் பயன்படுத்தி கொள்கின்றன

லினக்ஸின் உள்ளீடு வெளயீடுகளைக் கற்றுக்கொள்ளத் துவங்குவதற்கு முன், அதனுடைய முனையம் என்பதை தெரிந்து கொள்வது நல்லது . முனையம் என்பது கட்டளை வரிகளை செயற்படுத்திடும் ஒரு கணினியின்முகப்புதிரைப்பகுதியாகும் . துவக்ககாலத்தில் லினக்ஸானது டாஸ் இயக்கமுறைமை போன்று ஒரு கட்டளை-வரி இயக்க முறைமையாக உருவாக்கப்பட்டது, அதனைதொடர்ந்து வரைகலைபயனாளர் இடைமுகம் பிரபலமடைந்து வருவதால் எளிதில் பயன்படுத்த அந்த வரைகலை பயனாளர் இடைமுகத்தை சேர்த்து வெளியிடபட்டுவருகின்றது. இருந்தபோதிலும் லினக்ஸ் இயக்க முறைமையானது , அதன் முந்தைய , முனையத்தைப் பயன்படுத்திடும் வழிமுறையிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டு கிடைக்கின்றது. இந்த முனைய பயன்பாட்டிற்குள் முடிவுகள் உடனடியாக செயல்படுத்தப்படுவதால் அவை புதிய சாளரத்தை உருவாக்க வாய்ப்பில்லை. முனைய கட்டளைகள் பெரும்பாலான பயன்பாடுகளைப் போலல்லாமல் மிகவும் பழக்கப்பட்டதாக விளங்குகின்றன. . இந்த முனை ய கட்டளைகளுக்கு கூடுதல் விருப்பங்கள் இருக்கலாம், அவை “சுவிட்சுகள்” என்று அழைக்கப்படுகின்றன. கோரப்பட்ட கட்டளை வரி செயல்பாட்டில் செயல்பாட்டைச் சேர்க்க இந்தசுவிட்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. லினக்ஸ் இயக்கமுறைமைக்கு மாறும்போது இதில் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டளைவரிகளை இப்போது காண்போம்

1. man எனும் லினக்ஸின் கட்டளைவரியானது புதியவர்களுக்கு பயன்படும் மிகமுக்கியமான கட்டளைவரியாகும் இது manual என்பதின் சுருக்குபெயரால் ஆன கட்டளைவரியாகும் man என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தினால் உடனடியாக லினக்ஸ் இயக்கமுறைமைய பயன்படுத்த உதவிடும் உதவி குறிப்புகளை திரையில்தோன்றிட செய்திடும்

2. ls எனும் கட்டளைவரியானது நடப்பு பயன்பாட்டில் உள்ள கோப்புகள் கோப்பகங்கள் கோப்பு வகைகள் ஆகிய விவரங்களை காண்பிக்கஉதவிடும் மிகச்சிறந்த கருவியாக பயன்படுகின்றது ls -l எனும் கட்டளைவரியானது நடப்பு கோப்பகத்தில் உள்ள கோப்புகளை அதன் கொள்ளளவிற்கு ஏற்ப பட்டியலிடுகின்றது

3. cd என்பது மற்றொரு மிகவும் பயனுள்ள கட்டளைவரியாகும் இது தற்போது பயன்படுத்திடும் கோப்பகத்திலிருந்து நாம் விரும்பும் கோப்பகத்திற்கு மாறி செல்வதற்கு பயன்படுகின்றது

4. ifconfig எனும் கட்டளைவரியானது தற்போது விண்டோ இயக்கமுறைமையில் பயன்படுத்தபடும் அதே செயலை லினக்ஸ் இயக்கமுறைமையில் செயற்படுத்திடுவதற்காக பயன்படுகின்றது குறிப்பிட்ட இடைமுகம் கொண்ட வலைபின்னல் குறித்த தகவலை இது வழங்குகின்றது

5.find எனும் கட்டளைவரியானது நாம் விரும்பும் கோப்பு அல்லது குறிப்பிட்ட பெயருடையவை எங்கிருக்கின்றன என காணபேருதவியாய் விளங்குகின்றது

find example.txt என்ற கட்டளைவரியை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசைய அழுத்தினால் உடன் அந்த கோப்பு எங்குள்ளது என தேடிபிடித்து காண்பிக்கின்றது

6. clear எனும் கட்டளைவரியானது முனையத்தில் திரைமுழுவதும் உரையால் நிறைத்து கொண்டிருக்கும்போது திரையை சுத்தமாக்கஉதவுகின்றது

Leave a comment