1
வெப் சைட் மற்றும் வெப் அப்ளிகேசன் என்ன வேறுபாடு?

வெப் சைட் என்பது என்ன?
வெப் சைட் என்பது globally accessible இணைய பக்கங்களின் தொகுப்பாகும். இது ஒற்றை domain name கொண்டுள்ளது.இது தனி நபர், பிஸினஸ் அல்லது நிறுவனம் ஆகிய வற்றால் டெவெலப் செய்யப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது. வெப் சைட் ஆனது வெவ்வேறு விதமான தேவைகளுக்கு பயன்படுகின்றது. சான்றாக பிளாக்.
வெப் சைட் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வெப் செர்வரில் ஹோஸ்ட் செய்யப்படுகின்றது. இதை இனைய உலாவி அல்லது பிரைவேட் மீடிய நெட்வொர்க்கில் ip முகவரி கொண்டு ஆக்சஸ் செய்யப்படுகின்றது.
வெப் அப்ளிகேசன் என்பது என்ன்?
வெப் அப்ளிகேசன் என்பது ஒரு மென்பொருள் இது பிரவுசர் கொண்டு அனுகப்படுகின்றது. இதன் ஃப்ரண்ட் எண்ட் ஆனது HTML,CSS, Javascript போன்ற வற்றால் உருவாக்கபடுகின்றது. பேக் எண்ட் என்பது LAMP, MEAN போன்ற புரோக்கிராமிங்க் ஸ்டேக் கொண்டு அனுகப்படுகின்றது. மொபைல் பயன்பாடுகள் போல் இதை டெவெலப் செய்வதற்கு குறிப்பிட்ட SDK ஆனது தேவையில்லை.
வெப் அப்ளிகேசன் என்பது சாஃப்ட்வேர் அஸ் ஏ சர்வீஸ்(Software as a service) என்பதை அடிப்படையாக கொண்டது.
வெப் சைட் ஏன் நமக்கு தேவைப்படுகின்றது
1.      நம்முடைய பொருட்கள் அல்லது சர்வீஸ்களை காட்சி படுத்துவதற்கு
2.      சமூக ஆதாரங்களை உருவாக்குவதற்கு உதவி செய்கின்றது.
3.      வியாபாரத்தை பிராண்ட் செய்வதற்கு
4.      பிஸினசை பிரமோட் செய்வதற்கு பயன்படுகின்றது.
5.      கஸ்டமர் சப்போர்ட்டை அதிகரிப்பதற்கு.
வெப் அப்ளிகேசன் ஏன் நமக்கு தேவைப்படுகின்றது?
வெப் அப்ளிகேசன் தானது பிரபலாக இருக்க காரணங்கள்>
டெஸ்க் டாப் அப்ளிகேசனுடன் ஒப்பிடுகையில் வெப் அப்ளிகேசன்கள் நிர்வாகிக்க எளிது. Compatibity பற்றிய பிரச்சனைகள் இல்லை.
எல்லா பிளாட்ஃபார்மிலும் இயங்குகின்றது.
மொபைல் ஆப் ஸ்டோர் ஒப்புதல் தேவை இல்லை.
எந்த நேரத்திலும் ரிலீஸ் செய்யலாம். பயனர்களை அப்டேட் செய்ய்ச் சொல்ல அவசியமில்லை.
நீங்கள் வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் எந்த கணினியில் இருந்தும் ஆக்சஸ் செய்யலாம்.
நீங்கள் கணினி உபயோகித்தோ அல்லது மொபைல் சாதனங்கள் உபயோகித்தோ ஆக்சஸ் செய்யலாம்.
இதை நீங்கள் உங்கள் கண்ணியில் நிறுவ தேவையில்லை.
வெப்சைட் தன்மைகள்.
தரமான பொருத்த மான வெப் அடக்கம் காண்பிக்கப்ப்டுகின்றது.
யூசர் ஃப்ரென்ட்லி நேவிகேசன் , மற்றும் வடிவமைப்பு
Google போன்ற சியர்ச் எஞ்சின் கொண்டு எளிதாக தேடலாம்.
வெப் அப்ளிகேசன் தன்மைகள்.
கிளவுட் –ஹோஸ்டட் மற்றும் மேம்பட்டதாகும்.
கிராஸ் பிளாட்ஃபார்ம்.
மாடுலர் மற்றும் லூஸ்லி கப்லிடு.
ஆட்டோமேடடு டெஸ்ட் கொண்டு எளிதாக பரிசோதிக்கலாம்.


வெப் அப்ளிகேசன், வெப் சைட் வித்தியாசங்கள்.

உருவாக்கப்பட்ட காரணங்கள்.
வெப் அப்ளிகேசன்கள் யூசருடன் இன்டர் ஆக்ட் செய்யும் வகையில் உருவாக்கப்படுகின்றது. வெப் சைட் பெரும்பாலும் ஸடேட்டிக் கண்டண்ட். வெப் சைட்டானது மேலும் பப்ளிக் ஆக எல்லாராலுல் ஆக்சஸ் செய்யப்படுகின்றது
யூசர் இண்டர் ஆக்சன்.
வெப் அப்ளிகசன் ஆனது வெப் பக்கத்தை ரீட் செய்வதுடன் டேட்டாவை மேனிபுலேட் செய்கின்றது. வெப் சைட் ஆனது விசுவல் மற்றும் டெக்ஸ்ட் கண்டண்ட் கொண்டது.பயனரால் பார்க்க மற்றும் வாசிக்க முடியும்.
ஆதண்டுகேசன்.
வெப் அப்ளிகேசன்களை அனுகுவதற்கு ஆதண்டிகேசன் தேவை. அதாவது பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் போன்றவை தேவை. வெப் சைட்டிற்கு ஆதண்டிகேசன் தேவைப்படாது.பயனர் ரெஜிஸ்டெர் செய்து அப்டேட்டை பெறுமாறு கோரபடுகின்றார்.
செயற்பாடு மற்றும் சிக்கல்கள்.
வெப் அப்ளிகேசன்கள் உயர்வாக பயன்படுகின்றது. வெப் சைட்டுடன் ஒப்பிடும் பொழுது சிக்கல் வாய்ந்தது.வெப் சைட் ஆனது சேகரிக்கப்பட்ட டேட்டாவையும் மற்றும் த்கவல்களையும் குறிப்பிட்ட பக்கத்தில் காண்பிக்கின்றது.
மென்பொருள் வகை.
வெப் அப்ளிகேசன் ஆனது முழுமையான சாஃப்ட்வேர் கிடையாது.இது வெப் சைட்டின் ஒரு பகுதியாகும்.,வெப் அப்ளிகேசன் என்பது முழுமையான சாஃப்ட்வேர் ஆகும்.
கம்பைலேசன்.
வெப் அப்ளிகேசன் ஆனது முற்கூட்டியே கம்பைல் செய்யப்பட்டிருக்க வேண்டும். வெப் சைட்டை கம்பைல் செய்யத் தேவையில்லை.பயன்படுத்துதல்.
 அப்ளிகேசன்கள் ஏதாவது மாற்றமிருந்தால் ரிகம்பைல் செய்யப்பட்டு பயன்படுத்தல் வேண்டும்.சிறிய மாற்றங்கள் வெப்சைட்டை கம்பைல் செய்யவேண்டிய அவசியமில்லை. நீங்கள் HTML நிரலை மட்டும் அப்டேட் செய்தால் போதும்.
வெப் சைட்டின் குறைபாடுகள்.
வெப் சைட் எளிதாக கிராஷ் ஆக்லாம்.
நீங்கள் வெப் சைட்டில் குறிப்பிட்டுள்ள இமெயிலுக்கு குப்பை மெயில்கள் வரலாம்.இதை நீங்கள் அவ்வப்போது அப்டேட் செய்யாவிட்டால் வெப் சைட்டின் நம்பகத் தன்மை குறையும்
வெப் அப்ளிசன் குறைபாடுகள்.
பாதுகாப்புத் தன்மைக்கு உத்திரவாதம் இல்லை.அதனால் அன் ஆதரிகேசன் பாதிப்புள்ளாகலாம். எல்லா பிரவுசரும் ஒரே மாதிரி வெப் அப்ளிகேசனுக்கு முன்னுரிமை கொடுக்காது.வெப் அப்ளிகேசன் குறிப்பிட்ட ஆபரேட்ட்டிங்க் சிஸ்டத்திற்கென  உருவாக்கப்படுகின்றது.எனவே ஆப்ஸ்டோரில் இருந்து கண்டுபிடிப்பது கடினமாகின்றது.
சாராம்சம்.
வெப் சைட் என்பது globally accessible இணைய பக்கங்களின் தொகுப்பாகும். இது ஒற்றை domain name கொண்டுள்ளது.
வெப் அப்ளிகேசன் என்பது ஒரு மென்பொருள் அல்லது நிரல் . இது பிரவுசர் மூலம் ஆக்சஸ் செய்யப்படுகின்றது.
வெப் சைட் உங்கள் வணிகத்திற்க்கு பிராண்ட் ஆக அமைகின்றது.
வெப் அப்ளிகேசனிற்க்கு ஆப் ஸ்டோர் ஒப்புதல் தேவைப்படாது.
தரம் மற்றும் தொடர்பான தகவல்கள் வெப் சைட்டின் தன்மைகள் ஆகும்.
வெப் அப்ளிகேசேன்கள் கிளவுட் அடிப்ப்டையிலான மேம்பட்ட மென்பொருளாகும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
Leave a comment