1
UVdeskஎனும் கணினி உதவி அமைவு ஒருஅறிமுகம்

மின்வணிக சந்தைபடுத்துதல் பணிகளுக்காக சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கிடும் ஒட்டுமொத்த ஆதரவு செயல்முறையை எளிதாக்க UVdesk எனும் கட்டற்ற பயன்பாடானது SaaS- அடிப்படையிலான கணினிஉதவி தீர்வை வழங்குகின்றது. இது ஒரு . சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு அனுபவத்தை வழங்குவதற்காக எந்தவொரு வர்த்தகத்திற்கும் பொருந்தக்கூடிய PHP- அடிப்படையிலான கணினி உதவி அமைப்பாக தகவமைப்பினையும் விரிவாக்கத்தையும் அனுமதிக்கின்ற ஒற்றை மென்பொருளாக இது விளங்குகின்றது

இதுமின்வணிக சந்தைக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து வணிகநடவடிக்கைகளை விரைவாக்கிடஉதவுகின்றது.தற்போது நடைமுறையில் Magento, Prestashop, Shopify, CS-Cart, Opencart போன்றவை இதற்கு உதாரணங்களாகும்

இது நம்முடைய விருப்பத்திறகும் வசதிக்கும் ஏற்ப நம்முடைய வலைத்தள முன் முன்பக்க அலுவலக படிவங்களை வடிவமைக்க உதவுகின்றது. தற்போது நடைமுறையில் Contact Form, Feedback Form, Suggestion Form போன்றவை இதற்கு உதாரணங்களாகும்

ஒரே தளத்தில் பல மின்னஞ்சல் சேவை வழங்குநர்களை உள்ளமைத்திடுவதற்கான ஆதரவை இது வழங்குகின்றது . தற்போது நடைமுறையில் Gmail, Yahoo mail, Hotm போன்றவை இதற்கு உதாரணங்களாகும்

எந்தவித செலவும் இல்லாமல் CMS இயங்குதளத்திலிருந்துஇந்த UVdeskஐ அணுகிடலாம்.

இதனுடைய சேவை முற்றிலும் கட்டணமில்லாமல் கிடைக்கின்றது வேர்ட்பிரஸ்., ப்ரீஸ்டா ஷாப் போன்றவை இதனடிப்படையில் மின்வணிகத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது

சக்திவாய்ந்த மின்வணிகத்துடன் இணைக்கப்பட்ட கொள்முதல் உத்திரவுகள், நிகழ்நேர ஆதரவாக கிடைக்கின்றது இந்த UVdesk ஆனது மின்வணிகத்திலுள்ள கடையில் இருந்து கொள்முதல் அல்லது விற்பணைக்கான உத்திரவு விவரங்களைப் பெறுவதற்கான பல்வேறு இலவச இணையவழி பயன்பாட்டைக் கொண்டுள்ளது,. அமேசான், பிளிப்கார்ட் போன்றவை இதற்கு சிறந்த எடுத்துகாட்டுகளாகும்



இது ஒருஎளிய, மின்வணிக கடையாக இணைத்துபயன்படுத்திடஉதவுகின்றது.

கோப்பு பார்வையாளர் பயன்பாடு, தொடர்புடைய கட்டுரைகள், பணி மேலாண்மை ஆகிய பலவற்றின் உதவியுடன் பணி நேரத்தைச் சேமித்து உற்பத்தித்திறனை மேம்படுத்த இதுஉதவுகின்றது மேலும் இது .சமுதாயபல்லூடகத்துடன்எளிதாக இணைந்து செயல்படுவதற்கு உதவுகின்றது

Leave a comment