1
கணினியில் தற்காலிக சேமிப்புநினைவக(Cache)தரவுகளை எவ்வாறு அழிப்பது

நாம் எல்லோரும் இணையத்தில் உலாவும்போதும் வெவ்வேறு தளங்களைப் பார்வையிடும்போது, இணைய உலாவியானது பல்வேறு உள்ளடக்கங்களையும் தரவுகளையும் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கிறது. இந்த தற்காலிக சேமிப்பு நினைவகத்தையே Cache என அழைக்கப்படுகிறது. இவை ஒன்றாக சேர்ந்து மலைபோன்று குவிந்து நம்முடைய இணையஉலாசெயலை மிகமெதுவாக ஆக்கிவிடுகின்றது இந்த தற்காலிக நினைவகத்திலிருந்து மலைபோல குவிந்துள்ள தற்காலிக தரவுகளை அறவே நீக்கி நம்முடைய இணையஉலாவலை புதியதாக செயல்படுமாறு விரைபடுத்திடபின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக என பரிந்துரைக்கப்படுகின்றதுகணினியில் உள்ள வெவ்வேறு உலாவிகளில் அதை எவ்வாறு அடைவது என்பதைக் காண்பிப்போம் இந்த செயல் நம்முடைய இணைய உலாவியின் வரலாறு குக்கீகள்,பதிவிறக்கங்கள் படிவங்கள் தற்காலிகசேமிப்பகங்கள் ஆகியவற்றை ஒரேயொரு சொடுக்குதலில் அறவே நீக்கம் செய்து புத்துணர்வுடன் இணையஉலாவலை மேற்கொள்ளலாம்

1.இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 இல் தற்காலிக சேமிப்புநினைவகதரவுகளை அழிப்பது

பிற உலாவிகளைப் போலவே,வெவ்வேறு வழிகளில் அணுகலாம். முதலில் இந்த இணைய உலாவியை திரையில் தோன்றசெய்து இந்த திரையில் இடம் சுட்டியானது இருப்பதை உறுதிசெய்துகொள்க தொடர்ந்து விசைப்பலகையில் [Ctrl], [Shift] , [Del] ஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக உடன் Delete browser history எனும் பெயரில் மேல்மீட்பு பட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Temporary Internet files and website files”.எனும்வாய்ப்பினை தவிர மிகுதி தெரிவுசெய்துள்ளஅனைத்து வாய்ப்புகளையும் நீக்கம்செய்திடுக அதன்பின்னர் இதேமேல்மீட்பு திரையிலுள்ள “Delete” எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும் பிறகு இந்த இணைய உலாவியை நிறுத்தம்செய்து மறுபடியும் செயல்படுத்திடுக

2. மொஸில்லா பயர்பாக்ஸில் தற்காலிக சேமிப்புநினைவகதரவுகளை அழிப்பது

இந்த இணையஉலாவியின் வாயிலாக இணையஉலாவரும்போது ஒருசில வலைத்தளங்கள் ஏற்றும்போது சிக்கல்களை ஏற்படுத்தினால் அல்லது புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் காட்டாவிட்டால், அது தற்காலிக சேமிப்பின் காரணமாக இருக்கலாம். இந்த இணையஉலாவியில் இடம்சுட்டிவைத்து கொண்டு விசைப்பலகையில்உள்ள [Ctrl], [Shift] , [Del] ஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக உடன் Clear recent history எனும் பெயரில் மேல்மீட்பு பட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் உள்ள கீழிறங்கு பட்டியலில் last hour, last two hours, last four hours, today or all. ஆகிய வாய்ப்புகளில் ஒன்றினை நம்விருப்பம்போன்று தெரிவுசெய்து கொண்டு நீக்கம் செய்திடலாம் பொதுவாக all. என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் “Details என்பதற்கு அடுத்துள்ள அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் அதில் எந்தெந்த விவரங்களை நீக்கம்செய்யலாம் என விரியும்பொதுவாக தற்காலிக சேமிப்பகத்தைநீக்கம்செய்வதற்காக Cache எனும் தேர்வுசெய்பெட்டியை மட்டும் தெரிவுசெய்துகொண்டுclear nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் நீக்கப்ட்டுவிடும் பிறகு இந்த இணையஉலாவியை நிறுத்தம்செய்து மறுபடியும் செயல்படுத்திடுக

3.கூகுளின் குரோம் இணையஉலாவியில் தற்காலிக சேமிப்புநினைவகதரவுகளை அழிப்பது

இந்த இணையஉலாவியில் இடம்சுட்டிவைத்து கொண்டுவிசைப்பலகையில்உள்ள [Ctrl], [Shift] , [Del] ஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக உடன் Clear Browser cache எனும் பெயரில் புதிய சாளரம் திரையில் தோன்றிடும் அதில் உள்ள கீழிறங்கு பட்டியலில் “last hour”, “last day”, “last week”, “last four weeks” or “all. ஆகிய வாய்ப்புகளில் ஒன்றினை நம்விருப்பம்போன்று தெரிவுசெய்து கொண்டு நீக்கம் செய்திடலாம் பொதுவாக all. என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் விரியும் திரையில் Images and Files in Cache எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டுDelete Browser dataஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும் பிறகு இந்த இணையஉலாவியை நிறுத்தம்செய்து மறுபடியும் செயல்படுத்திடுக இதேபோன்று மற்ற இணையஉலாவிகளுக்குமான படிமுறைகளை https://clear-my-cache.com/en/windows.html எனும் இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொண்டு செயல்படுக

Leave a comment