1
அலுவலக குழுக்களுடன் எளிய தகவல்தொடர்பிற்கு UniVoIP App எனும் பயன்பாடு


நம்முடைய அலுவலக குழுக்களுக்குள் எந்தஇடத்திலிருந்தும் எந்தவொரு சாதனத்தலிருந்தும் தொலைநகல், செய்திகள், கூட்டங்கள் ஆகியவற்றின் வாயிலான எளிதான தகவல்தொடர்பிற்கு உதவ காத்திருப்பதுதான் UniVoIP App எனும் பயன்பாடாகும் இதன் வாயிலாக கேட்பொலி வாயிலாகவும் கானொளி வாயிலாகவும் அலுவலக அல்லது வியாபார கூட்டங்களை எளிதாக பாதுகாப்பாக நடத்தலாம் வாடிக்கையாளர்களுடன் இணைந்துவியாபார கூட்டங்களை கூட எந்தவொரு நிறுவனமும் மிகஎளிதாக இதன் வாயிலாக நடத்தமுடியும் 128-bit AES மறையாக்கத்துடன் கூடிய செந்தரமான FIPS 140-2எனும் மறையாக்க சான்றிதழுடன்SRTP ஐ இது பாதுகாப்பான தொலைதூர அல்லது சேய்மையிலுள்ள தொலைபேசி சாதனங்களை இணைக்கின்றது ஒரு கைபேசி அல்லது மேககணினி வாயிலான தீர்வு ஆகியவற்றின் மூலம் ஒரு நிறுவனம் தம்முடைய பணியாளர்களுடன் தகவல்தொடர்புகொள்வதற்காக இது பெரிதும் உதவுகின்றது

வரம்பில்லாத அளவிற்கு தொலைபேசியாக பயன்படுத்தி கொள்ளமுடியும் ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு ஒரு சேவையாக இது செயற்படுத்தப்படுகின்றது இதனை தரவு மையமாக கூட பயன்படுத்தி கொள்ளமுடியும்

பாரம்பரிய தொலைபேசி அமைப்புகள் அவைகளின் செயலிழப்பின் போது தொடர்ச்சியான வணிகநடவடிக்கைகள் தடங்களாகி நின்றுவிடுகின்றன. ஆனால் இந்த UniVoIP App ஆனது மேககணினியின்அடிப்படையிலான தகவல்தொடர்பு கருவிகள் உடனடி செய்திகள் முதல் தொலபேசி அழைப்புகள் வரை தகவல்தொடர்புகளைத் தடங்களின்றி வழங்குவதை உறுதி செய்கின்றன.

நம்முடைய தொழிலானது நிதி முதல் கல்வி வரை, எதுவாக இருந்தாலும், நம்முடைய வியாபார குழு மற்றும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தொடர்புகொள்வதற்கு இந்த மேககணினி அடிப்படையிலான UniVoIP Appஇன் சேவைகளை உறுதியாக செயல்படும் என நம்பலாம்.மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://univoip.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a comment