1
விசுவல் பேசிக் .நெட் அடிப்படைகள்-பகுதி-2


வேரியபிள்.
வேரியபிள் என்பது மெமரி லொகேசனுக்கு நாம் வைக்கும் பெயராகும். இதில் நாம் டேட்டாக்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம். அந்த டேட்டாவை நாம் விரும்பிய வகையில் மேனிப்புலேட் செய்து கொள்ளலாம்.
வேரியபிளில் டேட்டாவை ஸ்டோர் செய்வதற்கு முன் அது எந்த வகையான டேட்டா என அறிவிக்க வேண்டும். டேட்டா டைப்கள் integer, single, double, string என நிறைய் உள்ளன.
சான்று
Dim strmsg As string.
மேலே உள்ள வரியில் Dim என்பது Dimension என்பதன் சுருக்கமாகும்.strmsg என்பது வேரியபிளின் பெயர். String என்பது டேட்டா டைப்.
Dim intval  As Integer
Dim sngval As Single
Dim dblval As Double.
இவ்வாறு நாம் டேட்டாகளை நாம் செய்யலாம்.
இப்பொழுது அடுத்த டூலாக நாம் ரேடியோ பட்டன் குறித்துக் காணலாம். ரேடியோ பட்டன் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சாய்ஸ்களில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பதற்க் பயன்படுகின்றது.
கீழ்வருமாறு ஃபார்ம் டிசைன் செய்து கொள்ளவும்.

Public Class Form2

    Private Sub radGreen_CheckedChanged(sender As Object, e As EventArgs) HandlesradGreen.CheckedChanged
        ActiveForm.BackColor = System.Drawing.Color.Green
    End Sub

    Private Sub radBlue_CheckedChanged(sender As Object, e As EventArgs) HandlesradBlue.CheckedChanged
        ActiveForm.BackColor = System.Drawing.Color.Blue
    End Sub

    Private Sub radWhite_CheckedChanged(sender As Object, e As EventArgs) Handles radWhite.CheckedChanged
        ActiveForm.BackColor = System.Drawing.Color.White
    End Sub

    Private Sub radRestore_CheckedChanged(sender As Object, e As EventArgs) HandlesradRestore.CheckedChanged
        ActiveForm.BackColor = System.Drawing.SystemColors.Control
    End Sub

    Private Sub btnExit_Click(sender As Object, e As EventArgs) Handles btnExit.Click
        End
    End Sub
End Class
ஒவ்வொரு ரேடியோ பட்டனும் கிளிக் செய்யும் பொழுது ஃபார்மின் பின்னனி நிறம் மாறுகின்றது. அதற்கான நிரல் வரிகள் தான் மேலே உள்ளன.
இதில் ActiveForm என்பது கரண்ட் ஃபார்மை குறிக்கும். மேலும் பட்டனை கிளிக் செய்யும் பொழுது அப்ளிகேசனை நிறைவு பெற செய்ய End என்ற கட்டளை பயன்படுகின்றது.
இப்பொழுது மீண்டும் ஒரு சான்று நிரல்.
பின் வருமாறு லேபிள், டெக்ஸ்ட் பாக்ஸ், பட்டன் என ஃபார்மை டிசைன் செய்து 

Leave a comment