1
சிந்து சமவெளி நாகரிகமா... சரஸ்வதி சிந்து நாகரிகமா?

சிந்து சமவெளி நாகரிகமா... சரஸ்வதி சிந்து நாகரிகமா?

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நேற்று (1-பெப்ருவரி 2020) இந்தியாவின் 2020 ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டத்தை அறிவித்து பேசியதில் சரஸ்வதி சிந்து நாகரிகம் என திரும்பத் திரும்ப சொல்லியதின் பின்னணியில் காண்க: மற்றும் காண்க:

ஆரிய வருகை அல்ல, ஆரிய படையெடுப்பும் அல்ல, 

ஆரிய ஆக்கிரமிப்பையே 

இந்தியாவின் வரலாற்றில் மறைக்க முயல்வது, ஏற்றுக்கொள்ள முடியாத வரலாற்று திரிபு 

என்பதை விளக்கவே இந்தப்பதிவு.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் காலத்தில் கூட சிந்துவெளி, துவாரகை ஆய்வு முடிவுகள் தமிழருடையதா, ஆரியருடயதா என்ற கேள்விக்கு மழுப்பலாக அது இந்தியருடையது என முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. அன்று சொன்னது தமிழருக்கு எதிரான ஆரியத்தின் கொடூர முகம் என்றைக்கும் மாறாது என்பதையே காட்டுகிறது.

அவர்களது பட்ஜெட் அறிக்கையில் கூட நாட்டுக்கு நல்லவிதமாக எதுவும் இல்லை என்பது நாமனைவரும் அறிந்த ஒன்றே. 

 இந்தியப்பொருளாதாரத்தை கூறு போட்டு விற்கும் மோடி ஆட்சி கேவலமானஆட்சியே. 

 

நாட்டை விற்கும் கட்சிகளில் காங்கிரஸ் கட்சி க்கும்  பிஜேபி க்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நமது முந்தைய கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம். 

1. பட்ஜெட் ஏதோ நமக்கு புரிஞ்ச வரை ? காண்க:

2. 100 சதவிகித அந்நிய முதலீடும் நரேந்திர மன்மோகன்சிங்டியும். காண்க:

3. இந்தியா 3 வது பெரிய பொருளாதார நாடு உண்மையா? காண்க:

சரி நம்ம தலைப்புக்குள் வருவோம்:
 சிந்து சமவெளி நாகரிகமா... சரஸ்வதி சிந்து நாகரிகமா?

கைபர் போலன் கணவாய் வழியாக வந்து ஆக்கிரமித்த ஆரியர்கள் தாங்களே இந்தியாவின் பூர்வ குடிகள் என்றும் சமஸ்க்ரிதமே மூத்த மொழி என்றும் பல்வேறு கட்டுக்கதைகளை பல ஆண்டு காலமாகவே அவிழ்த்து விட்டுக் கொண்டே நாட்டை ஏமாற்றும் நாசகார கும்பல் என்பதை பல்வேறு வரலாற்று அறிஞர்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்துக்கொண்டே வருகின்றனர்.

1. ரிக் வேதத்தில் இருப்பது திராவிட மொழியே என்று ரொமிலா தாப்பர் என்ற வரலாற்று அறிஞரும் காண்க:

2. சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது என்று கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியான `எர்லி இந்தியன்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் அவர் ஆன்ஸெஸ்டர்ஸ் அண்ட் வேர் வீ கேம் ஃப்ரம்’ (Early Indians: The Story of Our Ancestors and Where We Came From) என்ற நூலில் தொல்லியல் மரபணுவியல் அடிப்படையில் திரு டோனி ஜோசப் அவர்களின் கட்டுரையும் தமிழின் தொன்மையை ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றன. காண்க: 
 3. சமசுகிரிதம் என்று ஒரு மொழியே உலகில் இல்லை என நிரூபிக்கும் எனது கட்டுரை. காண்க:

 4. ஆரியர்கள் என்பவர்கள் மத்திய ஐரோப்பாவின் காகசஸ் மலை மற்றும் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்களே என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் கட்டுரை. காண்க:

5. வேத கால பண்பாட்டைவிட சிந்துவெளி நாகரிகம் மிகப் பழமையானது: ஐராவதம் மகாதேவன். காண்க:

உண்மையில் சிந்துவெளி நாகரிகத்தில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அரைவேக்காடுகள் சொல்லுகின்ற சரஸ்வதி நதி என்ற வார்த்தையே கூட தமிழர் வரலாற்றையே அடிப்படையாகக் கொண்டது என்பதை அறியாதவர்களே அவர்கள். 


தமிழர் வரலாறு கூறும் சரஸ்வதி நதி 
பற்றிய தேடலே இந்தக் கட்டுரை:

சரஸ்வதி நதியின் வேர்மூலம் கிறித்தவ, யூத, இசுலாமிய, ஆரிய வேத காலத்திற்கு முந்தியது; இந்தியா முழுவதும் பரவியிருந்த பூர்வகுடிமக்களான தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடையது; 
என்பதை இக்கட்டுரை நிரூபிக்க இருப்பதால் அந்த மதங்களின் வரலாற்றைத் தொட்டுச்செல்கிறது சரஸ்வதி நதி பற்றிய நமது தேடல். 

இந்தக்கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புவோர் இங்கே காணலாம். காண்க:

1. ஆபிரகாமின், யூதர்களின் பூர்வ தோற்ற வரலாறு.

யூத வரலாற்று ஆசிரியர் பிலேவியுஸ் யோசேபுஸ் (Flavius Josephus 37-100 AD) என்பவர் யூதர்களின் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை ஆராய்ந்து அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்களே என்று உறுதிபட கூறுகிறார். காண்க:

மேலும் யூதர்களின் இந்திய மூலம் பற்றி கிரேக்க அரிஸ்டாட்டில் கூறிய செய்தியும் முக்கியத்துவமானது.

In his plea Contra Apionem (1.179) the Jewish-Roman historian Flavius Josephus quotes Aristotle's pupil Clearchos of Soli as having claimed that Aristotle had been very impressed once with the discourses of a Jewish visitor, and more so with the steadfastness of his dietary discipline and had concluded that in origin the Jews had been Indian philosophers. (p. 564)

"Antiquities of the Jews" என்ற நூலின் 7 வது பக்கத்தில் பிலேவியுஸ் யோசேபுஸ் யூதர்களின் தொடக்க வாழிடம் கங்கை ஆறு உள்ள இந்தியாவே என்று தெளிவாகத் தெரிவிக்கிறார். ஆபிரகாம் பற்றிய விவிலிய விளக்கத்திலும் அவரின் பிறந்த ஊரின் பெயரே 'ஊர்' என்றே அழைக்கப்படுகிறது. ஊர் நகரம் அமைந்த நாட்டின் பெயரும் கல்தேயம் கல்தேசம் என்றே அழைக்கப்படுகிறது.
Godfrey Higgins என்பவர் எழுதிய Anacalypsis என்ற நூலில் கி. மு. 300 இல் கிரேக்க அலெக்ஸாண்டருக்கு பிந்தைய ஆட்சியாளர் செலூகஸ் நிகேடார் என்பவர் அனுப்பிய தூதர் மெகஸ்தனிஸ் என்பவரின் இந்திய பயணத்திற்கு பிந்தைய குறிப்பேடுகளில் யூதர்கள் இந்திய மக்களினங்களில் ஒரு பிரிவினரே என்பதைக் குறிப்பிடுகின்றார்.

ஆபிரகாம், அவரது மனைவி சாராள் பெயர்களின்

Who Voted

Leave a comment