1
பாதுகாப்பான தேர்வுகளுக்கான உலாவி

பாதுகாப்பான தேர்வு உலாவி (Safe Exam Browser(SEB))என்பது இணையத்தின் வாயிலாக அனைத்துவகையான தேர்வுகளையும் பாதுகாப்பாக மேற்கொள்ள உதவிடும் ஒரு இணைய உலாவி சூழலாகும்.அதாவது இதனை கொண்டு தமிழ்நாடு தேர்வாணையும், பல்கலைகழகங்கள்.போன்றவை இணையத்தின் வாயிலாக தாங்கள் நடத்தவிரும்பும் நேரடி தேர்வுகளுக்கு இந்த பயன்பாட்டு மென்பொருளை பயன்படுத்தி கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகின்றது இந்த மென்பொருளானது எந்தவொரு கணினியையும் தற்காலிகமாக பாதுகாப்பான பணிநிலையமாக மாற்றுகின்றது. இது கணினி செயல்பாடுகள், பிற வலைத்தளங்கள் , பயன்பாடுகள் போன்ற ஆதாரங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றது மேலும் எந்தவொரு தேர்வு நடைபெறும்போதும் அங்கீகரிக்கப்படாத வளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றது

இந்த SEB ஆனது எந்தவொரு கணினியிலும் இயங்குகின்ற திறன்கொண்டது, மேலும் இது ஒரு இணையம் வழியான கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) அல்லது இணைய மதிப்பீட்டு அமைப்புடன் இணைந்து செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த SEB ஆனது எந்தவொரு இணைய அடிப்படையிலான LMS , பிற வகையான இணைய அடிப்படையிலான தேர்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது. அதாவது Moodle, ILIAS, OpenOLAT போன்ற ஒருசில கற்றல் மேலாண்மை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது குறிப்பாக இவற்றுடன் ஒரு இணக்கமான வினாடி வினா பயன்முறையை கூடவழங்குகின்றது.

இந்த SEB ஆனது ஒரு kiosk பயன்பாட்டினையும் உலாவி பகுதியையும் கொண்டுள்ளது, அவை கணினி அல்லது மடிக்கணினி சாதனத்தில் இயங்குகின்றன. .கியோஸ்க் பயன்பாடு தேர்வு களுக்கான கணினியைப் பூட்டிடுகின்றது, இணையத்தின் உலாவிடும் பகுதியானது (அல்லது ஒரு வளாகபிணையம்) ஒரு சேவையகத்தில் இயங்குகின்ற LMS வினாடி வினா தொகுப்புடன் தொடர்பு கொண்டு செயல்படுகிறது.படத்தில் SEB கியோஸ்க் பயன்பாடு(விண்டோ மேஜைக்கணினி ) , SEB இணையஉலாவி (ஃ பயர் ஃபாக்ஸ் )ஆகிய இரண்டு உட் கூறுகள், கொண்டுள்ளதை காணலாம் அதனோடு ILIAS அல்லது Moodle. கொண்ட LMS எனும் மூன்றாம் விருப்ப பகுதி ஒன்று ம்ஆதரிக்கப்படுமாறு காண்பிக்கப்பட்டுள்ளது அல்லது எக்செல் அல்லது ஆர் என்பன போன்ற பல்வேறு மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை ஒரு இணையத்தின் வாயிலான தேர்வின் போது இயக்க அனுமதிக்கப்படலாம் இவையனைத்தும் SEB கியோஸ்க் பயன்பாட்டால் ஒரே நேரத்தில் செயல்படுவதற்காக தொடங்கப்படுகின்றன.

இந்த SEBஎனும் பாதுகாப்பான தேர்வு உலாவி யானது மாணவர்களின் சொந்த கணினி ,மடிக்கணி போன்ற வற்றுடன் கூடிய விண்டோஸ், மேக்ஸ் iOS ஆகிய மூன்று தளங்களிலும் செயல்படுகின்ற நிருவகிக்கப்படாத கணினிகளிலும், நிருவகிக்கப்பட்ட சூழல்களிலும் பாதுகாப்பான தேர்வுகளை செயல்படுத்த உதவுகின்றது. SEB 2.0 இற்கு மேற்பட்ட பதிப்புகள் எந்தவொரு இணையத்தின் வாயிலான தேர்விற்கு ம்ஒரு தனிப்பட்ட உள்ளமைவை வழங்குகின்றது, அதனோடு இது தேர்வின் போது தவறாக முறைகேடாக கையாளுதலுக்கு எதிரான வலுவான குறியாக்கத்தாலும் விரிவான அங்கீகார த்தினாலும்பாதுகாக்கின்றது. , ஒரு குறிப்பிட்ட, மாற்றப்படாத SEB பதிப்பினை கொண்டு மிகச்சரியான தேர்வு அமைப்புகள் ஒரு தேர்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன வாஎன சரிபார்க்க முடியும்.

இது ஒரு ஒருங்கிணைந்த பதிப்பாகும், இது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வசதிவாய்ப்புகள், தேர்வு அமைப்பு இடைமுகம், இணக்கமான உள்ளமைவு கோப்புகள் , மிகவும் ஒத்த பயனர் இடைமுகம் ஆகியவற்றை மூன்று தளங்களிலும் கொண்டு வருகிறது, அதே நேரத்தில் கணக்கியல் இயக்க முறைமை வேறுபாடுகள் , தனித்துவமான இயங்குதள மான மைக்ரோசாப்ட் விண்டோ: , இணையஉலாவியான மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றது

. இதில் பொதுவான நிருவகிக்கப்பட்ட வலை உலாவி, மறைகுறியாக்கப்பட்ட உள்ளமைவு கோப்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டமைக்க முடியும், சிறப்பு மீயிணைப்புகளைப் பயன்படுத்தி, SEB ஐ மற்ற வலை உலாவிகளில் இருந்து தொடங்கலாம் மேலும் ஒரு தேர்வுக்கு தனித்தனியாக மறுகட்டமைவை செயற்படுத்திடலாம், முழுத்திரை பயன்முறை அல்லது பல்வேறு உலாவி சாளரங்கள் என மாற்றிகொள்ளலாம் இது ஒரு மெய்நிகர் இயந்திரத்தில் அல்லது ஜெயில்பிரேக் செய்யுப்பட்ட சாதனத்தில் இயங்குகிறதா என்பதை கண்டறிந்து, அவ்வாறு தொடங்க மறுக்க முடியும், மேலும் இதுகுறிப்பிட்ட வலைத்தளங்கள், பக்கங்கள் அல்லது ஆதாரங்களை மட்டுமே அணுக அனுமதிக்கும் URL வடிப்பான், மனித இடைமுகப்பினைத் தடுக்கசேவையகங்களுக்கான இணைப்பு மீதான நடுத்தர தாக்குதல்கள், எழுத்துப்பிழை சரிபார்ப்பு அகராதி தேடல் முடக்கப்பட்டுள்ளது, HTML மற்றும் PDF ஆவணங்கள், முழு வலை பயன் பாடுகளையும் கூட தேர்வில் பயன்படுத்தல் என்பனபோன்ற பல்வேறு வசதி வாய்ப்புகள் இதில் கிடைக்கின்றன மேலும் விவரங்களுக்கு https://www.safeexambrowser.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

Leave a comment