1
வாகணங்களின் இணையம்:

வாகணங்களின் இணையம் (Internet of Vehicles(IoV)) என்பது நான்கு சக்கர வாகணங்கள் ,கனரக வாகணங்கள் ஆகிய அனைத்துவகைகளிலான வாகணங்களுடன் இணைக்கப்பட்ட தற்காலிக வலைபின்னல்களில் உருவாக்கிய தரவுகளைப் பயன் படுத்துவதை ஆதரிக்கும் ஒரு விநியோகிக்கப்பட்ட வாகணங்களுக்கான பிணையமாகும். , வாகணங்களை இயக்கும் மனித ஓட்டுநர்கள், பாதசாரிகள், பிற வாகனங்கள், சாலையோர உள்கட்டமைப்புவசதிகள், வாகண மேலாண்மை அமைப்பு ஆகியவை களுடன் நிகழ்வுநேரத்தில் தொடர்பு கொள்ள அனுமதிப்பதே இந்த IoV இன் முக்கிய குறிக்கோளாகும்.இந்த IoV ஆனது பின்வரும்ஐந்து வகைகளாலான பிணைய தகவல் தொடர்புகளை ஆதரிக்கின்றது:

1.ஆன் போர்டு யூனிட்கள் (OBU )என்பதன் மூலம் வாகனத்தின் உள் செயல்திறனைக் கண்காணிக்கும் வாகனத்திற்குள்ளான Intra-Vehicleஎனும் அமைப்புகள்.

2.வாகணத்தை சுற்றியுள்ள மற்ற வாகனங்களின் வேகம், நிலை ஆகியவை குறித்த கம்பியில்லா தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் வாகனங்களுக்கிடையேயான (Vehicle to Vehicle (V2V)) அமைப்புகள்.

3.குறிப்பிட்ட வாகனம் ,சாலையோர ஆதரவுஅலகுகள் (RSUs) ஆகியவற்றிற்கிடையே கம்பியில்லா தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வாகனமும் உள்கட்டமைப்புக்கிமான (Vehicle to Infrastructure (V2I)) அமைப்புகள்

4.பயன்பாட்டு நிரல் இடைமுகங்கள் (API) மூலம் இணையத்திலிருந்து கூடுதல் தகவல்களை அணுக வாகனத்தை அனுமதிக்கும் வாகனமும் மேககணினிக்குமான (Vehicle to Cloud (V2C)) அமைப்புகள்.

5.பாதசாரிகள் மிதிவண்டி ஓட்டுநர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாககூடிய சாலை பயனாளர்களின் (VRU) விழிப்புணர்வை ஆதரிக்கின்ற வாகனமும் பாதசாரி களுக்குமான(vehicle to Pedestrian (V2P)) அமைப்புகள்.

இதுகுறித்து 5 ஜி,புத்திசாலித்தனமான போக்குவரத்து அமைப்புகளின் (Intelligent transport systems (ITS)) சூழல் ஆகியவற்றுடன் விவாதிக்கப்படும்போது, மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து வகையான வலைபின்னல்கள் ஒருசில நேரங்களில் வாகனத்திலிருந்து எல்லாவற்றிற்குமான (Vehicle to Everything (V2X)) தகவல்தொடர்பு என குறிப்பிடப் படுகின்றன. சந்தை ஆராய்ச்சியின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகளாவிய இந்த IoV சந்தையின் மதிப்பானது 2024 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் பிஎம்டபிள்யூ ,டைம்லர் ஆகியோர் உட்பட பலவாகன உற்பத்தியாளர்கள், பாதைகளின் மேலாண்மை,திறனுடைய நிறுத்தங்கள் போன்ற IoV சேவைகளை இணைக்கும் முதன்மை தகவல் மையத்திற்கான ஒரு தளத்தை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளனர்.. ஆப்பிள், சிஸ்கோ, கூகிள், ஐபிஎம், இன்டெல், மைக்ரோசாப்ட், எஸ்ஏபி ஆகியவை இதற்கான கட்டமைவை தற்போது உருவாக்கி கொண்டுள்ளன.என்ற கூடுதல் தகவல்களை மனதில் கொள்க

Leave a comment