1
தை அமாவாசையும் தமிழர்களின் அறிவியலும்

இன்று (24 ஜனவரி 2020) தை அமாவாசை. 
தை அமாவாசை தமிழர்களின் விழா, 
தமிழர்களின் விழா என்றாலே அது வானியல் விழாதான். 
இதுவும் ஒரு வானியல் விழாதான். 1. சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். 

சூரியனைத் தந்தை என்கிறோம். சந்திரனைத்  தாய் என்கிறோம். 
எனவே சூரியனும் சந்திரனும் எமது தாய் தந்தை யாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. நம்ம பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் 12 நட்சத்திரகூட்டங்களில் எதில் நிற்கிறதோ அதுவே ராசி. 

கீழேயுள்ள படத்தில் 12 படங்களும் நாம் வானில் காணும் நட்சத்திரங்களின் 12 குழுக்கள். 

அந்த 12 படங்களின் நடுவிலுள்ள கோடு சூரியனின் பாதை. 

அதாவது பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனுக்கு பின்னாலுள்ள நட்சத்திர குழுக்கள். 12 ராசியும் 12 மாதங்கள்.
12 ராசியில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் நிற்கின்ற நேரத்தில் நிலா வும் அதே ராசியில் சூரியனை ஒட்டி பயணிக்கும்போது அந்நாளின் இரவில் வருவது அம்மாதத்தின் அமாவாசை. அதன் எதிர்த்திசையில் வந்தால் பௌர்ணமி.

‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும். ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ (New Moon) எனப்படும். 

நிலா முழுமையாக, பூரணமாகத்  தெரியும் நாள் பௌர்ணமி (Full Moon).  காண்க:

ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். அந்த சுழற்சி முறைப்படி ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான  
சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை
சந்திரன் மகர ராசியில் சூரியனுடன் சேரும் நாளே தை அமாவாசை.2. இரண்டாவதாக பூமியின் சுழற்சிற்கேற்ப சூரியனின் பயணம் 2 திசைகளில் நடக்கிறது நாம் அறிந்ததே.

1.  தட்சிணாயனம்:
சூரியனின் 
(வடக்கிலிருந்து தெற்குதிசை நோக்கிய பயணம் = கடக ரேகையிலிருந்து மகர ரேகைக்கு)(Tropic of Cancer to Tropic of Capricorn)
 
2.  உத்தராயனம்:
சூரியனின் 
(தெற்கிலிருந்து வடதிசை நோக்கிய பயணம் =  மகர ரேகையிலிருந்து கடக ரேகைக்கு)(Tropic of Capricorn to Tropic of Cancer)


முதல் பயணம் ஆடி மாதத்தில் ஆரம்பிக்கிறது. ஆகவே தட்சிணம் அ தெக்கணம் (Deccan) அ தென்திசை நோக்கிய சூரியனின் பயணம் ஒரு வானியல் நிகழ்வு விழா. 
 
இந்த சூரியனின் தெற்கு திசை நோக்கிய பயணத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை சிறப்பானது. 
 
இந்த வானியல் நிகழ்வு (சூரிய, நிலவு, பூமி நேர்கோட்டில் சந்திப்பு) தமிழர்களுக்கு சிறப்பானது, ஆகவேதான் விழா. அதே போல 
 
சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தில் வரும் முதல் அமாவாசை தை அமாவாசை. கீழுள்ள படம் மேலும் இதனைத் தெளிவாக்கும்.


தை அல்லது ஆடி மாத அமாவாசை தினத்தில் 
 இறந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல் 

3. தர்ப்பணம் செய்தல் என்றால் என்ன?

தர்ப்பணம் எனபது எள்ளுடன் கலந்த நீரை தெற்கு நோக்கி தாரை வார்ப்பது.
வள்ளுவர் வாக்குப்படி தென்புலத்தார் பிறகு தான் தெய்வம் என்றபடி அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட்ட பின்னரே தெய்வத்தை வழிபட வேண்டும். 

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (குறள்: 43 )


முன்னோர்கள் (தென்புலத்தார்), தெய்வம், விருந்து (விருந்தினர்), ஒக்கல் (சுற்றத்தார்), தான் என்ற ஐந்திடத்திலும் (ஐம்புலம்) செய்ய வேண்டிய நல்வழி (ஆறு) யினைப்  போற்றிக் காத்து வழுவாமல் நடந்து கொள்ளுதல் சிறப்புடைய அறமாகும். காண்க:

ஆக நமது முன்னோர் தென்புலத்தில் குறிப்பாக  
கடல்கோளில் இறந்துபோன 
குமரிக்கண்ட முன்னோர்கள் (தென் புலத்தார்)
தொடங்கி நமது பெற்றோர் (இறந்திருந்தால்) வரை. காண்க:

4. ஏன் அமாவாசை நாளில் தர்ப்பணம்?

சூரியனைத் தந்தை அல்லது "பிதிர் காரகன்" என்கிறோம். 
சந்திரனைத்  தாய் அல்லது "மாதுர் காரகன்" என்கிறோம். 
எனவே சூரியனும் சந்திரனும் எமது தாய் தந்தை யாகிய வழிபடு தெய்வங்களாகும். 

அமாவாசை அன்று நிலவு தென்படுவதில்லை, மறைந்துவிடுகிறது. 

எனவே மறைந்துபோன முன்னோர், பெற்றோரை அந்த நாளில் நினைவு கூறுதல் சிறப்பானது. ஒவ்வொரு அமாவாசையன்றும் நினைவு கூர்ந்தனர் தமிழர்
 

அதிலும் மிகச்சிறப்பாக வருடத்தின் 
இரண்டு சிறப்பு அமாவாசை நாட்களில் - தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை.
5. இறந்தோருக்கும், காகத்துக்கும் என்ன சம்பந்தம்?
காகங்கள் பொதுவாக அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், மாலையிலும் குளித்தல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை.
தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் 
அனைத்து காக்கை களும் ஒன்று கூடி கரையும்  
தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. 

மேலும் காக்கை சனி கிரகத்தின் வாகனம். அதே போல எமனின் இன்னொரு வாகனமாகவும் கருதப்படுகிறது. 

காரணம் காரி என்ற சனி கிரகம் பூமிக்கு கிரக ஈர்ப்பின் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இங்கும் தமிழரின் அறிவியலே காண்க:

எருமை, காகம் எனும் இரண்டு கரிய நிறமுள்ள பிராணிகளை வாகனமாகக் கொள்வதிலும் தமிழரின் அறிவியல் உள்ளது காண்க:   எமன் என்னும் யாமம் அ காலம் என்பதும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. 

இரண்டுமே அடிப்படையில் கரிய நிறம் என்பதால் காகம் ஒரு தூதுவராக கருதப்படுகிறது.

தமிழர்களின் தை அமாவாசை தென் அமெரிக்கா வரை பரவியுள்ளது பற்றியும், அங்கே உள்ள தமிழர் பாரம்பரியம் பற்றியும் திதி, காகம், சூரியன், சந்திரன், முன்னோர் வழிபாடு, அமாவாசை பற்றியும் மேலும் அறிய விருப்பமுள்ளோர் இப்பதிவில் காணலாம். காண்க:

                                                                 தொடர்ந்து தேடுவோம்... 

Who Voted

Leave a comment