1
எந்த வொருகணினியிலும் உங்கள் விருப்பமான இணையஉலாவியை எவ்வாறு பயன்படுத்திகொள்வது-

தற்போதைய காலச்சூழலில் நாமெல்லோரும் நிலையாக ஒரேஇடத்தில் பொறுமையாக நின்று எந்தவொரு பணியை செய்யமுடியாமல் நம்முடைய கால்களில் சக்கரத்தை கட்டியுள்ளதை போன்று அங்கு இங்கு என எப்போதும் நாம்ஓடிகொண்டே இருக்கின்றோம் இவ்வாறான சூழலில் நாம்குறிப்பிட்ட இணையஉலாவியை பயன்படுத்தி நம்முடைய இணைய உலாவலை செய்வது நமக்கு மிகபிடித்தமாகவும் விருப்பமானதாகவும் இருக்கும் ஆயினும் நாம் பயனிக்கும் இடத்தில் அவ்வாறான நமக்கு விருப்பமான இணையஉலாவி பயன்பாடு இருக்குமா என உத்திரவாதம் எதுவும் கிடையாது இந்நிலையில் நாம் எந்த இடத்திலிருந்தும் நாம் விரும்பும் இணைய உலாவி பயன்பாட்டின் வாயிலாக இணையத்தை அணுக வேண்டும். ஆனால் தனிப்பட்ட தேடல்களைச் செய்ய அல்லது இணைய பயன்பாட்டில் பணி செய்ய அறிமுகமே இல்லாத பல்வேறு நபர்களும் பயன்படுத்திடுகின்ற பொது வான கணினியைப் பயன்படுத்த முடியமா என நாம் கவலைப்படலாம். இந்த நிலையில் இந்த சிக்கலை தீ்ர்வுசெய்வதற்கான அல்லது நம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவென ஒரு வழி,யாக நாம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய சிறிய கையடக்க இணையஉலாவி (portable browser) என்பது நமக்கு கைகொடுத்து நம்மை காத்திடவந்துள்ளது, இதனை யூ.எஸ்.பி டிரைவ் போன்ற சிறிய சேமிப்பக சாதனத்திலிருந்துகூட நேரடியாக இதைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த உலாவியின் சிறிய பதிப்பைப் பயன்படுத்துவதன் மூலம், நம்மை அடையாளம் காணும் எந்த வொரு தடயங்களையும் கணினியில் விட்டிடாமல் புக்மார்க்குகள், வரலாறுகள், தனியாளர் பயன்முறை நீட்டிப்புகள் ஆகிய அனைத்தையும் அறவே நீக்கம் செய்து மிகபாதுகாப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.. இதனுடைய வசதி வாய்ப்புகள் பின்வருமாறு

நாம் ஏதேனுமொரு பணியை செய்வதற்காக அல்லது விடுமுறையை கழிப்பதற்காக அல்லது உறவினர்களின் குடும்ப முக்கிய நிகழ்வில் பங்கு கொள்ள பயணம் செய்கின்ற நிலையில் அங்கு பல்வேறு அறிமுகமில்லாத நபர்களும் பயன் படுத்திடுகின்ற பொது வான கணினியை நாம் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானால், அவ்வாறான நிலையில் வேறுஎந்தவொரு புதிய மென்பொருளையும் அந்த கணினியில் நிறுவுகை செய்திட முடியாது. ஆயினும் நாம் விரும்பும் இணைய உலாவியின் வாயிலாக மிகமுக்கியமான பணியை செய்யவேண்டும்என தவித்து கொண்டிருப்போம் அந்நிலையில்நாம் பயன்படுத்த விரும்பும் உலாவியின் நகலை நம்முடைய கைவசம் வைத்திருப்பது இணையத்தை அணுகுவதை எளிதாக்குகின்றது. இந்த கையடக்க இணைய உலாவியைப் பயன்படுத்து வதற்காகவென தனியாக குறிப்பிட்ட கணினியில் எந்தவொரு மென்பொருளையும் நிறுவ வேண்டிய அவசியமில்லை, இது கணினியில் மென்பொருளை நிறுவுகை செய்வதற்கான நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றது. இதுமென்பொருளின் வழக்கமான பதிப்பை விட வேகமாக இயங்கும். திறன் கொண்டதாகும் இது விண்டோஸ் பதிவேட்டில் செயல்பாட்டின் எந்த தடயங்களையும் விடாது. தனிப்பட்ட தகவல்களை விட்டு விடுவோமோ என்ற பயத்தில் உலாவியின் நிறுவப்பட்ட பதிப்பைப் பயன்படுத்த நாம்விரும்பவில்லை. எனும் சூழ்நிலையில் கையடக்க உலாவிகள் மிகச் சிறந்ததாக அமைகின்றன, ஏனென்றால் நாம் ஒரு சிறிய உலாவியைப் பயன்படுத்தும்போது, நம்முடைய எல்லா தகவல்களும் கணினியில் இல்லாமல் சேமிப்பக சாதனத்தில் சேமிக்கப்படும்.

ஒரு சில சிறிய உலாவிகள் Chrome, Firefox ,Opera போன்ற பிரபலமான இணைய உலாவிகளின் பதிப்புகள். அசல் மென்பொருளின் அதே செயல்பாடு , செயல்திறன் ஆகியவற்றை . கொண்டுள்ளன. அவை குரோமியம், அவந்த் உலாவி, மிடோரி, க்யூட்வெப் போன்ற குறைந்த அறியப்படாத மூலங்களிலிருந்து பரவலான சிறிய உலாவிகளும் உள்ளன. நம்முடைய விரிவாக்கங்கள் புக்மார்க்குகள் தேவையில்லை என்றால் இவை நல்ல தேர்வாக இருக்கும். நம்முடைய செயல்பாட்டின் தடயங்களை மற்ற கணினியிலிருந்து அறவே நீக்கிவிட இவை உதவுகின்றன.

கொடுக்கப்பட்ட சிறிய உலாவியைப் பதிவிறக்குவதற்கு சற்று வித்தியாசமான வழிமுறைகள் இருக்கலாம், ஆனால் பின்வருமாறு செயல்பட வேண்டும்: 1. பயன்பாட்டின் பதிவிறக்கப் பக்கத்தைப் பார்வையிடுக. நாம் பயன்படுத்த விரும்பும் உலாவியை அடைய மேலே உள்ள எந்த இணைப்புகளையும் பயன்படுத்திகொள்க. 2. பதிவிறக்க பொத்தானை சொடுக்குதல் செய்து கோப்பை நம்முடைய கணினியில் சேமித்திடுக. 3. நாம் பதிவிறக்கிய “AppNamePortable_x.x.paf.exe” கோப்பின் இருப்பிடத்திற்கு செல்க. 4. அந்த செயலிகோப்பை இருமுறை சொடுக்குக 5. உடன்திரையில் கேட்கும் கட்டளைகளைப் பின்பற்றிடுக. 6. கோப்பை எங்கே சேமிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கும் திரைக்கு வரும்போது, இதை நம்முடைய யூ.எஸ்.பி டிரைவிற்கு மாற்றிடுக . 7. நம்முடைய இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்ததுOK.எனும் பொத்தானை சொடுக்குக. 8. தொடர்ந்து Installஎனும் பொத்தானை சொடுக்குக.

மற்றொரு கணினியில் நிரலைப் பயன்படுத்த: 1. யூ.எஸ்.பி டிரைவை கணினியல் அதற்கான வாயிலில் செருகுக, நம்முடைய நிரலை நிறுவிய கோப்பகத்தில் உலாவுக. 2. “AppNamePortable.exe” எனும் கோப்பை இருமுறை சொடுக்குக. 3. இப்போது, வழக்கமான பதிப்பைப் போலவே உள்நுழைந்து இணைய பயன்பாட்டைப் பயன்படுத்திடுக.

தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைப் பற்றி கவலைப்படாமல் நம்முடைய விரல் நுனியில் கணினியில் இணையத்தை வைத்திருக்க விரும்பினால், நமக்கு பிடித்த உலாவியைத் தேர்வுசெய்து, சிறிய பதிப்பை ஃபிளாஷ் டிரைவ் அல்லது பிற சிறிய சேமிப்பகத்திற்கு பதிவிறக்கி கொள்க அதன்பின்னர் . நாம் செல்லும் எல்லா இடங்களிலும் அதை நம்முடன் இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தி கொள்ளலாம் அல்லவா.

Leave a comment