1
ஸ்பரிசம்உனக்குள் இருக்கும் உன்னை
எதன் மீதும் பற்றுதல் இன்றி
எனக்குள் இருக்கும் என்னிடம்
சிறகடித்து பறத்தல் நிமித்தம் போல
பெரு வாழ்வு வாழ்ந்துவிட்டதாக
சிலாகித்து சினுங்கும்
பேரன்பு பூசிக்கொண்டலையும்
நின் மௌன முகத் தோற்றத்தை
என் நெஞ்சம் முழுதும் பூசிக்கொள்கிறேன்

தெரியுமா !!!

ஒரு பட்டாம்பூச்சி
என் தேகம் முழுக்க
வந்து வந்து அமரும்போது
மெல்லிய சிலிர்த்தல்
நிகழ்ந்த அதே பேருணனர்வு
நீ என் நெஞ்சத்தில் சாய்ந்திடுகையில்
சில்லிட்டு உணர்கிறேன்

பெருங்காதலை இத்துணை வேகமாக
உனக்குள்ளும் எனக்குள்ளும்
ரசாயன கலவை செய்தது
எதுவோ?...
Be the first to vote for this post!

Leave a comment