1
திறன்பேசியை விண்டோசெயல்டும்மைக்ரோபோனாக மாற்றிடலாம்

கணினியில் மைக்ரோஃபோன் இல்லை என்றாலும், கைவசமுள்ள திறன்பேசியையே Skypeஇன் வாயிலாக கணினியின் மைக்ரோஃபோனாகப்மாற்றி பயன்படுத்தமுடியும் , அதை அமைப்பது நம்பமுடியாத எளிதானது. மைக்ரோஃபோனாகப் பயன்படுத்து வதற்கான பல்வேறு வழிமுறைகள் உள்ளன

அவ்வாறான வழிகளில் சிறந்த ஒன்று WO Mic ஐப் பயன்படுத்துவதாகும். இதன் மூலம், திறன்பேசியை கணினியுடன் இணைக்க யூ.எஸ்.பி, புளூடூத் அல்லது வைஃபை பயன்படுத்தலாம். இதனை முற்றிலும் கட்டணமில்லாமல் பயன்படுத்திகொள்ளலாம், , மேலும் இதுசெந்தர மைக்ரோஃபோனைப் போலவே எந்தவொரு பயன்பாட்டிலும் செயல்படும் திறன்கொண்டது, இதற்காக WO Mic இணையதளத்திற்குச் சென்று PC client, PC driver ஆகியவற்றை பதிவிறக்கம் செய்திடுக. பின்னர் இவ்விரண்டையும் நம்முடைய கணினியில் நிறுவுகைசெய்திடுக. அதன்பின்னர் நம்முடைய கைபேசியில செயல்படும் Android அல்லது iOS பயன்பாட்டைப் தெரிவுசெய்து கொள்க. தொடர்ந்து கணினியை செயல்படுத்த தொடங்குக. பின்னர் Connection => Connect=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக தொடர்ந்து விரியும் திரைக்குச் சென்று குரலொலி செல்வதற்கும் வருவதற்குமான போக்குவரத்து வகையை (Transport type) தேர்வுசெய்க. தொடர்ந்து பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக

வழிமுறை.1. புளூடூத் வழியாக இணைத்தல்

முதலில், விசைப்பலகையி்ல்Windows key + I ஆகிய விசைகளை அழுத்தி கணினியின் அமைவு திரைக்கு செல்க பின்னர் கணினியில் புளூடூத்தை இயலுமை செய்திடுவதற்காக Devices => Bluetooth & other devices=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக தொடர்ந்து Bluetooth ஐ செயல்படசெய்திடுக கணினியானது இப்போது பிற சாதனங்களால் கண்டறியப்படும். அடுத்து, கைபேசியில் புளூடூத்தை இயக்குக. இந்த விருப்பத்திற்கான சரியான இடம் சாதனத்திற்கு ஏற்ப மாறுபடும், ஆனால் இது வழக்கமாக அமைப்புகளுக்குள்(Settings) இருக்கும், அல்லது ஒருவேளை இணைப்புகள் வகையின் கீழ்இருக்கலாம் கைபேசியை கணினியுடன் இணைக்கவும். இந்த இணைப்பை உறுதிப்படுத்த கணினியில் ஒரு மேல்மீட்பு அறிவிப்பு பெட்டிதிரையில் தோன்றிடுமாறு செய்யப்பட வேண்டும். WO Mic பயன்பாட்டில் போக்குவரத்து வகையாக புளூடூத்தைத் தேர்ந்தெடுத்து,Target Bluetooth device இன் கீழிறங்கு பட்டியில் இருந்து கைபேசியைத் தேர்ந்தெடுத்துகொண்டு OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. . அதன்பின்னர் கைபேசியில் WO Mic பயன்பாட்டில், settings cog, எனும் தாவியின் பொத்தானைதெரிவுசெய்துசொடுக்குதல்செய்து அந்ததாவியின்திரைக்கும் பின்னர் Transport எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து அந்த தாவியின்திரைக்கும் செல்க அங்கு போக்குவரத்து வகையாக Bluetooth என்பதை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் நாம் வந்தவழியே முதலில் இருந்த திரைக்கு சென்று play icon எனும்தாவியின் பொத்தானை தெரிவுசெய்து அந்த தாவியின்திரைக்கு சென்று பேச தொடங்குக

வழிமுறை.2. யூ.எஸ்.பி வழியாக இணைத்தல்

இந்தவழிமுறையில் Android மட்டுமே செயல்படும். கைபேசியில் மின்னேற்றம் செய்ய பயன்படுத்தும் அதே வழிமுறையில்யூ.எஸ்.பி கம்பியை பயன்படுத்தி கைபேசியை கணினியுடன் இணைக்கவும். . உடன் விண்டோஸ்ஆனது அதற்கான இயக்கியை நிறுவுகை செய்திடுமாறு கோரும், எனவே அந்த செயல்முறையைப் பின்பற்றவும். அடுத்து, கைபேசியின் மேம்படுத்துநர் விருப்பங்களில் யூ.எஸ்.பி பிழைத்திருத்தத்தை இயக்குக. கைபேசியை விண்டோஸ் ஒரு சாதனமாக அங்கீகரிக்க வேண்டும்.அதற்காக WO Mic பயன்பாட்டில், போக்குவரத்து வகையாக (Transport type) USB ஐத் தேர்ந்தெடுத்து கொண்டுOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.. கைபேசியில் WO Mic பயன்பாட்டில், settings cog, எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அந்ததாவியின்திரைக்கும் பின்னர் Transport எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து அந்த தாவியின்திரைக்கும் செல்க அங்குபோக்குவரத்து வகையாக USB என்பதை தெரிவுசெய்து கொள்க அதன்பின்னர் நாம் வந்தவழியே முதலில் இருந்த திரைக்கு சென்று play icon எனும்தாவியின் பொத்தானை தெரிவுசெய்து அந்த தாவியின்திரைக்கு சென்று பேசதொடங்குக

வழிமுறை3. அருகலை(Wi-Fi) வழியாக இணைத்தல்

இந்த வழிமுறையில் கைபேசி கணினி இரண்டையும் ஒரே அருகலை(Wi-Fi) வலைபின்னல் இணைப்புடன் இணைக்க வேண்டும். விண்டோஸில் அருகலை(Wi-Fi)வலைபின்னலை மாற்ற, விசைப்பலகையி்ல்Windows key + I ஆகிய விசைகளை அழுத்தி அமைப்புதிரைக்கு செல்க அடுத்து Network & Internet => WiFi => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் settings cog, எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அந்ததாவியின் திரைக்கும் பின்னர் Transport எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து அந்த தாவியின்திரைக்கும் செல்க அங்குபோக்குவரத்து வகையாக Wi-Fi என்பதை தெரிவுசெய்து கொள்க OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. . Server IP address புலத்தில் இந்த பயன்பாட்டின் IP address உள்ளீடுசெய்து கொண்டு மைக்ரோஃபோனைப் பயன்படுத்தத் தொடங்கOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. .

வழிமுறை 4. அருகலை(Wi-Fi) நேரடியாக இணைத்தல்

இந்த வழிமுறையில் கைபேசியை அருகலை(Wi-Fi) முதன்மை மையமாக மாற்றிடுவதற்காக நம்முடைய பிணைய தரவைப் பயன்படுத்த வேண்டும். கணினிக்கு அதன் சொந்த இணைய இணைப்பு இல்லை என்றால், மேலே உள்ள பிற முறைகள் பொருத்த மானவை அல்ல. முதலில்,கைபேசியிலிருந்து மொபைல் ஹாட்ஸ்பாட்டை உருவாக்கிடுக . இதைச் செய்வதற்கான வழிமுறையானது ஒவ்வொரு சாதனத்திலும் அந்தந்த சாதனத்தின் கட்டமைவிற்கு ஏற்ப மாறுபடும், இதனை Settings எனும் அமைப்பில் பார்த்து தெரிந்து கொள்க முதலில் Network & Internet => WiFi => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் hotspot.என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் கைபேசியில் settings cog, எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அந்ததாவியின் திரைக்கும் பின்னர் Transport எனும் தாவியின் பொத்தானை தெரிவுசெய்து அந்த தாவியின்திரைக்கும் செல்க அங்கு போக்குவரத்தின் வகையாக Wi-Fi Direct என தெரிவுசெய்து கொள்க Soft AP IP address எனும் புலத்தில் இயல்புநிலையில் உள்ள192.168.43.1. எனும் முகவரியை ஆமோதித்துOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இந்நிலையில் நம்முடைய குரலை அங்கீகாரம் செய்யவில்லை யெனில் விசைப்பலகையில் Windows key + I ஆகியஇருவிசைகளை அழுத்தி கணினியின் அமைப்பு திரைக்கு செல்க System => Sound.=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் திரையின் Input,என்பதற்கு கீழே உள்ள கீழிறங்கு பட்டியைவிரியச்செய்து Microphone (WO Mic Device)என்பதை தெரிவுசெய்து கொள்க நம்முடைய குரலொலியை Test your microphoneஎனும் பட்டையில் அதன் ஒலிப்பு அளவை சரிபார்த்து கொள்க

வெப்கேமாககூட திறன்பேசியை பயன்படுத்துதல்: திறன்பேசியை வெப்கேமாகப் பயன்படுத்த முயற்சி செய்யலாம்.அனைவருக்கும் உகந்ததாக இருக்காது என்றாலும், விரைவாகப் பேச வேண்டியவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும், மேலும் பாரம்பரிய மைக்ரோஃபோன் எளிதாக இல்லையெனில். ஒரு பைசா கூட செலவழிக்காமல் சில நிமிடங்களில் இந்த வழிமுறையை பின்பற்றிடுக

Leave a comment