1
பிளாக்செயின் தொழில்நுட்ப வழிகாட்டி-7-பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திடுகின்ற பல்வேறு துறைகள்

ஆரம்பத்தில், பிளாக்செயின் என்பது பிட்காயின் எனும் நாணய வாய்ப்புகள் பற்றியதாக மட்டுமே இருந்து வந்தது. தொடர்ந்து காலஓட்டத்தில் பிளாக்செயின் அடிப்படையிலான பல்வேறு மறையாக்க நாணயங்களும் சந்தைக்கு வந்துசேர்ந்தன. அவைகளில் ஒருசில வெற்றி வாய்ப்பினை கண்டாலும், வேறு சில மறையாக்க நாணயங்கள் பின்தங்கியிருந்தன. இருப்பினும், வெகுவிரைவில் பிளாக்செயின் தொழில் நுட்பமானது தன்னுடைய உண்மையான திறனைக் கண்டறிந்ததால் .சுகாதாரத் துறை, நிறுவன மென்பொருள் மேம்பாடு, வங்கி, காப்பீடு என்பன போன்ற பல்வேறு கணிக்கமுடியாத துறைகளுக்கும் இந்த சேவையானது பரவி வருகின்றது கிடைத்துள்ள முக்கிய வலைதள புள்ளி விவரங்களின்படி,இந்த பிளாக்செயின் சந்தையானது வருகின்ற 2024 ஆண்டிற்குள் ஏறத்தாழ 20 பில்லியன் அளவிற்கு உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளாக்செயினை பயன்படுத்தி கொள்ளும் பல்வேற் துறைகள் பின்வருமாறு

7.1.வங்கியும் நிதிபரிமாற்ற நடவடிக்கைகளும்: தற்போது அனைத்து வகையான வங்கி நடவடிக்கைகளும் குறிப்பாக பணபரிமாற்ற முறைகள் அனைத்தும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைநோக்கியே நகர்ந்துவருகின்றன. பிட்காயின் போன்ற மறையாக்க நாணயங்களை கொண்டு எந்தவொரு புவிசார் அரசியல் கட்டுப்பாடுகளும் குறுக்கீடுகளும் இல்லாமல் நிதி பரிமாற்ற முறைகளை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். ABRA என்பது பிட்காயின் அடிப்படையிலான பணம் செலுத்துதல் நடவடிக்கைக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

7.2.சைபர் பாதுகாப்பு: பிளாக்செயினில், குறியாக்கவியலைப் பயன்படுத்தி தரவுகள் சரிபார்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இது கணினியில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத மாற்றங்களையும் அபகரித்தல்களையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த அமைப்பிலிருந்து இடைத்தரகர்களை இது அறவே நீக்கம் செய்துவிடுகின்றது, எனவே இதில் யாரும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைச் செய்ய முடியாது.

7.3.விநியோக சங்கிலி: பிளாக்செயின்தொழில்நுட்பமானது விநியோகச் சங்கிலியுடன் இணைந்து சிறந்த வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் பின்னூட்ட பொறிமுறை ஆகியவற்றை வழங்குவதன் வாயிலாக விநியோகச் சங்கிலியில் புதிய புரட்சியை ஏற்படுத்திவருகின்றது. இந்த பிளாக்செயின் தொழில் நுட்பமான விநியோக சங்கிலியின் நிருவாகத்தைப் பயன்படுத்தி எந்தவொரு உற்பத்தி பொருளையும் முழுமையாகக் கண்காணிக்க முடியும். ,மிகமுக்கியமாக ஒரு பொருள் உற்பத்தியின் அல்லது வழங்குகின்ற ஒருசேவையின் ஒவ்வொரு நிலையையும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஐஓடி சென்சார்களின் வாயிலாக பிளாக்செயினில் பதிவு செய்யப்பட்டு விநியோக சங்கிலியின் இயக்கம் தொய்வுற்று தடைபெறாமல் இருக்குமாறுஇந்த பிளாக்செயின் அடிப்படையிலான விநியோக சங்கிலி மேலாண்மை அமைப்பின் மூலம் சரிபார்த்து செயல்படுமாறு கண்காணிக்க முடியும். .

7.4.இணையத்தின் வாயிலான நேரடியாக தரவுகளை சேமித்தல்:ஒன்ட்ரைவ், கூகிள் டிரைவ் போன்ற மையப்படுத்தப்பட்ட சேவையகத்தில் தரவுகளை சேமித்திடும் பணியானது குறிப்பிட்ட பகுதி செயல்படாமல் தோல்வியுற்றால் அந்த ஒற்றை புள்ளியில் சேமித்த தரவுகள்அனைத்தும் முழுமையாக பாதிக்கப் படக்கூடிய நிலை ஏற்படும் . ஆனால் இந்த பிளாக்செயின்தொழில்நுட்பத்தில் விநியோகிக்கப்பட்ட தரவுகளின் சேமிப்பு வழிமுறை பின்பற்றபடுவதால் தரவுகளானவை மிகவும் பாதுகாப்பாகபல்வேறு முனைமங்களிலும் சேமிக்கப்பட அனுமதிக்கபடுகின்றன. அதனால் சேமிக்கப்படுகின்ற தரவுகள் எப்போதும் இழப்பு ஏற்படாத சூழல் ஏற்படுகின்றது மேலும் தரவுகள் மறைகுறியாக்கப்பட்டு சேமிக்கபடுகின்றன

7.5.வலைபின்னலும் IoTஎனும்பொருட்களுக்கான இணையமும்: பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி IoT சாதனங்களுக்கான பரவலாக்கப்பட்ட வலை பின்னலை மிகஎளிதாக உருவாக்கிட லாம். அதன்வாயிலாக IoT சாதனங்களைக் கையாளும் பணியை செயல்படுத்தவதற்கான மைய இருப்பிடத்தின் தேவையை அறவே நீக்கிவிடமுடியும்.

7.6.காப்பீடு:உலகளாவிய காப்பீட்டு சந்தையானது நம்பிக்கை நிருவாகத்தின் அடிப்படையாகக் கொண்டதாகும். அவ்வாறான நம்பிக்கையை நிருவகிப்பதற்கான புதியதொரு வழியாக இந்த பிளாக்செயின் தொழில்நுட்பமானது திகழ்கின்றது. பங்கேற்பாளர்களிடையே பரஸ்பர நம்பிக்கையை இந்த பிளாக்செயின் தொழில் நுட்பமானது உறுதி செய்கின்றது. பிளாக்செயின் அடிப்படையிலான காப்பீட்டு மேலாண்மை அமைப்பிற்கு Aeternity ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

7.7.கூட்ட நிதி(crowdfunding) :என்பது புதியதாக துவங்கிடும் நிறுவனங்களும் செயல் திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அடிப்படை தேவையான நிதியை திரட்டிடுவதற்கான ஒரு பிரபலமான வழிமுறையாகும். இந்த பிளாக்செயின் அடிப்படையிலான crowdfunding தளங்களில் நம்பிக்கை, திறன்மிகு ஒப்பந்தங்கள் இணையத்தின் நற்பெயர் அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் கட்டமைக்கப்படுகின்றது, இந்த சேவைக்காக அதிக கட்டணம் வசூலிக்கும் ஒரு மையநிறுவனத்தின் தேவையை அறவே நீக்குகின்றது. இந்த தொழில் நுட்பத்தின் வாயிலக புதிய செயல்திட்டங்கள் தங்களுடைய டோக்கன்களை வெளியிடலாம் பின்னர் உற்பத்தி பொருட்கள், சேவைகள் அல்லது பணத்திற்காக அவற்றைபரிமாறிக்கொள்ளலாம்.

7.8.பல்லூடகமும் பொழுதுபோக்குநிகழ்ச்சிகளும்: இப்போது மூன்றாம் தரப்பு குறுக்கீடு அதிகமாக இருக்கும் பொழுதுபோக்கு துறையிலும் பிளாக்செயின் தொழில்நுட்பம் நுழைந்துள்ளது. இந்த துறையில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தினை செயல்படுத்தினா ல் இடைத்தரகர்களை இந்த துறையிலிருந்து அறவே அகற்றிவிடுகின்ற சூழல் உருவாகும். இந்த பிளாக்செயின் தொழில்நுட்பம் ஏற்கனவே செயல்படுத்தத் துவங்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இணைய இசையும் ஒன்றாகும் எ.கா.; மைசிலியா & உஜோ இசை ஆகியவைகளாகும்

7.9.வீட்டுமனை கட்டுமானத்துறை :பிளாக்செயின் தொழில்நுட்பத்தினை செயல்படுத்தலினால் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு முக்கியமான துறையாகும். தற்போதைய ரியல் எஸ்டேட் அமைப்பானது ஏராளமான அளவில் நிலஉரிமை மற்றும் பரிமாற்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றது. இந்தத் துறையின் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை செயல்படுத்தினால் பகிர்வு பேரேடுகளுடன் முழு ரியல் எஸ்டேட் அமைப்பினையும் கட்டுப்படுத்திட முடியும். இதற்கு எடுத்துகாட்டாக இந்தியாவில் முதன்முதலில் ஆந்திர மாநில அரசின் பதிவு துறையானது பிளாக்செயின்தொழில்நுட்பத்தின் மூலம் முழுமையான நில பதிவு செயல்முறையை நடைமுறைபடுத்த துவங்கிவிட்டது.

7.10.அரசுத்துறைகள்:அரசாங்க அமைப்புகளில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகாரத்துவ தடைகள், சிவப்புநாடா தன்மைகள் ஆகியவற்றை வெகுவாக குறைத்திடமுடியம், மேலும் அரசாங்கத்தின்அனைத்து நடவடிக்கைகளின் செயல்திறனையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்தி கொள்ளமுடியும். துபாய் நாட்டு அரசானது ஏற்கனவே இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அனைத்து அரசின் நடவடிக்கைகளுக்கும் செயல்படுத்தத் துவங்கியுள்ளது.

முடிவாக மேலும் இந்த பி&%2

Leave a comment