1
விசுவல் பேசிக் .நெட் அடிப்படைகள்-பகுதி1

  
                          
விசுவல் பேசிக்.நெட் என்பது  .NET –ல் டிஸ்ட்ரிபுயூட்டட் பயன்பாடுகள் உருவாக்குவதற்கு பயன்படும் மொழிகளில் ஒன்றாகும்.இது vb6-ன் மேம்படுத்தப்பட்ட வெர்சன் ஆகும். இதில் மேலும் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் கருத்துகளான இன் ஹெரிடன்ஸ், அப்ஸ்ட்ராக்சன், என்கேப்சுலேசன், பாலிமார்பிசம்போன்றவை நடைமுறைப் படுத்தப்பட்டிருகின்றது.
மேலும் இது மல்டிதிரட்டிங்க், ஸ்ட்ரக்சர்டு எர்ரர் ஹாண்ட்லிங்க் ஆகியவற்றை கொண்டுள்ளன.
விபி.நெட்டில் உட்புகுத்தப்பட்டிருப்பவை.
1.      இன்ஹெரிடன்ஸ்
2.      கன்ஸ்ட்ரக்டர் மற்றும் டெஸ்ட்ரக்டர்
3.      ஓவர் லோடிங்க்
4.      ஓவர் ரைடிங்க்
5.      ஸ்ட்ரக்சர்டு எர்ரர் ஹேண்ட்லிங்க்
6.      மல்டிதிரட்டிங்க்
இன்ஹெரிடன்ஸ்
இன் ஹெரிடன்ஸ் என்பது ஏற்கனவே உள்ள கிளாசை நீட்டுவிப்பதாகும். அதாவது புதியதாக ஒரு கிளாஸ் எழுதாது ஏற்கனவே உள்ள கிளாசின் பண்புகள் பிஹேவியர் ஆகியவற்றை திரும்ப பயன்படுத்திக் கொண்டு கூடுதலாக தேவைப்படுவதை மற்றும் சேர்த்து கொள்ளுதல் ஆகும்.
இதற்கு Inherits என்ற கீவேர்டு பயன்படுகின்றது.
சான்று
Class derived Inherits basic
--
--
End class

கன்ஸ்ட்ரக்டர் மற்றும் டெஸ்ட்ரக்டர்.
கன்ஸ்ட்ரக்டர் என்பது ஒரு கிளாசிற்கு ஆப்ஜெக்ட் உருவாக்கபடும் பொழுது தானாக அழைக்கப்படும் மெத்தட் ஆகும். இது கிளாசின் மெம்பர்களை தொடக்குவிக்க பயன்படுகின்றது. டெஸ்ட்ரக்டர் என்பது ஆப்ஜெக்ட் அழிக்கப்படும் பொழுது அழைக்கப்படும் மெத்தட் ஆகும். அது ஆப்ஜெக்ட் பயன்படுத்திய ரிசோர்ஸ்களை திரும்ப பயன்படுகின்றது.
ஓவர் லோடிங்க்.
இது ஒரு கிளாசிற்குள் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெத்தட்கள் ஒரே பெயரில் எழுத பயன்படுகின்றது. ஆனால் அதன் பாராமீட்டரின் எண்ணிக்கையோ, ஆர்டரோ, டைப்போ ம

Leave a comment