1
கணினி நிரலாக்கமும் நிரலாக்க மொழிகளும்.


நிரல் என்பது அறிவுறுத்தல்களின் தொகுப்பாகும். ஒரு நிரலுக்கென்று அல்கரிதம் எழுதியிருப்போம்.ஃப்ளோ சார்ட் வரைந்திருப்போம். அதற்கடுத்த படி நிரலாகமாகும். ஒரு குறிப்பிட்ட மொழியில் நிரல் எழுத வேண்டும்.அதாவது நாம் உருவாக்கிய அல்கரிதத்தை எடுத்துக் கொண்டு நிரலாக மாற்ற வேண்டும்.அப்பொழுது தான் கணினியானது அதை இயக்க முடியும்.
நிரலாக்க மொழி என்பது ஒரு நிரலின் இயக்க அறிவுரைகள்,ஒரு முறைமையின் நடத்தையை கட்டுப்படுத்துதல்,அல்கரிதத்தை விவரித்தல்போன்றவற்றை செய்கின்றன.
ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் ஒரு சிண்டாக்ஸ் இருக்கும்.பொதுவாக நிரலாக்க மொழிகள் என்பது ஹை லெவெல் மொழிகளை குறிக்கும்.உதாரணத்திற்கு c,c++, java, c#, vb.net போன்றவை.
பொதுவாக ஹை லெவெல் மொழிகள் மனிதர்களுக்கு புரியும்படி இருந்தாலும் கணினியானது மெசின் லெவெல் மொழியை மட்டுமே புரிந்து கொள்ளும். மெசின் லெவெல் மொழி என்பது எண்களை மட்டுமே கொண்டிருக்கும். ஒவ்வொரு cpu –ற்க்கும் ஒரு மெசின் லெவல் மொழியைக் கொண்டிருக்கும்.
மெசின் லெவெல் மொழிக்கும் ஹை லெவெல் மொழிக்கும் இடையே இன்னொரு மொழி உண்டு அது அசெம்பிளி மொழியாகும்.இது பொதுவாக மெசின் லெவெல் மொழியை ஒத்திருந்தாலும் இது சற்று மனிதர்களால் புரிந்து கொள்ளகூடியது. இவை எண்களுக்கு பதிலாக பெயர்களைக் கொண்டிருக்கும்.
ஹைலெவெல் மொழியாக இருந்தாலும் அசெம்பிளி மொழியாக இருந்தாலும் இவை மெசின் லெவெல் மொழியாக மாற்ற வேண்டும். அப்பொழுது தான் அவை கணினியால் புரிந்து கொள்ள முடியும் . அதற்கு கம்பைல் அல்லது இன்டெர்பிரட் செய்ய வேண்டும்.
ஒரு பிராஜெக்ட் செய்வதற்கு முன் எந்த மொழி என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.ஒவ்வொரு மொழிக்கும் ஒரு அட்வாண்டேஜ் மற்றும் டிஸ்அட்வாண்டேஜ் இருக்கும்.
சில மொழிகள் கம்பைல் செய்யப் படுகின்றன. சில மொழிகள் இண்டர்பிரட் செய்யப்படுகின்றன. சான்றிற்க்கு basic மொழியானது இண்டர்பிரட் செய்யப்படுகின்றது c  மொழியானது கம்பைல் செய்யப்படுகின்றது.
ஒர&#

Leave a comment