1
நிழல்ஒவியம் வரைதல் (shadow draw) எனும் கட்டற்றபயன்பாடு ஒரு அறிமுகம்

ஒரு ஓவியத்தை எவ்வாறு வரைவது என அறியாத தெரியாத துவக்க நிலையாளர்களும் நிழல்ஓவியம் வரைதல்(shadow draw) எனும் பயன்பாட்டின் வாயிலாக மிகத்திறனுடன் ஓவியம் வரைய கற்றுக் கொள்ள முடியும் அதாவது புதியவர்கள் எவ்வாறு புதியதாக ஒருஓவியத்தை வரைய வேண்டும் என படிப்படியாக ஓவியம் வரைவதற்கான அனைத்து தொழில்நுட்பங்களுடனும் இது கற்றுதருகின்றது அவ்வாறு ஒரு ஓவியத்தை வரைவதற்காக வேடிக்கையான ஒருசிலஎளிய வழியைக் கண்டறிய இந்த நிழல்ஓவியம் வரைதல்எனும் பயன்பாடானது பேருதவியாக விளங்குகின்றது

நம்முடைய ஐபாட் , ஆப்பிள் பென்சில் ஆகியவற்றின் வாயிலாக நாம் ஓவியம் வரைதலை கற்றுகொள்ள தயாராக இருந்தால் இந்த நிழல்ஓவியம்வரைதல் எனும் பயன்பாடானது மிகவும் சிறப்பாக உதவுகின்றது.

. உண்மையில் ஒரு ஓவியத்தை எவ்வாறு வரைய வேண்டும் என்பதை அறிய எளிதான திறனுள்ள பல்வேறு வழிமுறைகளை இதுகொண்டுள்ளது நிழலாடுவதன் மூலம் புதிய ஓவிய கலைஞர் ஒருவர் ஓவியங்களை எவ்வாறு வரையலாம் என்பதைக் கற்பிக்கும் நல்லதொரு பயன்பாடாக இது விளங்குகின்றது. இது மிகவும் எளிமையானது ஆனால் பயனுள்ளது. எப்படி வரைய வேண்டும் என்பதை அறிய விரும்புவோருக்கு இது சரியான பயன்பாடாகும் ஒவ்வொரு நாளும்பல்வேறு புதியபுதிய வழிகளில் ஒவியம் வரைய இது மிகஎளியவழிமகாட்டியாகவிளங்குகின்றது

. இதன் வாயிலாக நம்முடைய நடைமுறை வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து எளிதான ஒரு ஓவியத்தை வரையகற்றுகொள்ள முடியும் உண்மையில் ஓவியஆசிரியர் ஒருவர் நம்முடைய கையை பிடித்து புதியதாக ஒருஓவியத்தை எவ்வாறு வரைவது என வழிகாட்டக்கூடிய பயன்பாடாக இதுவிளங்குகின்றது ஒரு ஓவியக்கலையை கற்றுகொள்வது என்பது அதற்கான சிறப்பு வகுப்பில் மட்டுமே பெறக்கூடிய ஒரு நிகழ்வாகும் .அவ்வாறான நிகழ்வினை நம்முடைய ஐபாடில் இந்த நிழல் ஓவிய ம் வரைதல் எனும் பயன்பாட்டினை நாம் செயல்படுத்தியவுடன் கிடைக்கச்செய்கின்றது அதாவது இது நாம் ஓவியம் வரைவதற்காக நம்முடைய கையை மாயமாக பிடித்து வழிநடத்தி சென்று புதிய ஒரு ஓவியத்தை வரையகற்று கொடுக்கின்றது இவ்வாறு ஓவியம் வரைய நாம் கற்றுகொள்ளும்போது நாம் வரையும் புதிய ஓவியத்தில் ஏதேனும் தவறான கோடுகளை வரைந்துவிட்டால் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் ஒவ்வொரு அடியிலும் இது நம்முடன் இருந்து திருத்தி சரியாக ஒரு ஓவியத்தை எவ்வாறு வரைவது என கற்றுகொடுக்கின்றது

நேரடியாக ஓவியகல்லூரி வகுப்புகளுக்கு செல்லும் நேரத்தையும் இடத்தையும் சேமித்திட இது உதவுகின்றது

இந்த நிழல் ஓவியம்வரைதல் எனும் பயன்பாடானது ஒரு ஐபாட், ஆப்பிள் பென்சில் ஆகியவற்றை விட அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது. இந்த பயன்பாட்டினை செயல்படுத்ததுவங்கியவுடன் விசைப்பலகையில் ஒருசில பொத்தான்களை அழுத்துவதன் வாயிலாக நாம் ஓவியம் வரையும் பணியை உடனடியாக துவங்கலாம். ஒவியம் வரைவதற்காக நாம் எந்தவொரு ஓவியகலைப் பொருட்களையும் சேகரிக்கத் தேவையில்லை என்பதால் நம்முடைய நேரத்தைச் சேமித்திடலாம் படுக்கையில் ஒரு போர்வையின் கீழ் படுத்து கொண்டு அல்லது பயணத்தின்போது என்றவாறு நாம் எந்தவொரு இடத்திலிருந்தும்ஒரு சில நிமிடங்களுக்குள் இதன்துனையுடன் ஓவியம் வரைவதற்கு கற்று கொள்ளத்துவங்கிடலாம் .எந்தவொரு சூழலிலும் நாம் ஒரு ஓவியத்தை எவ்வளவு சிறப்பாக வரையமுடியும் என்பதை இந்த பயன்பாடு நடைமுறையில் செயல்படுத்தி கற்றுகொள்ள உதவுகின்றது

தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓவியக்கலையின் நுனுக்கங்களை இதன் வாயிலாக கற்றுகொள்ள முடியும் அதாவது இந்த நிழல்ஓவியம்வரைதல் எனும் பயன்பாட்டின் மூலம், இதிலுள்ள 400 க்கும் மேற்பட்ட ஓவியம் வரைவதற்கான பாடங்களின் துனையுடன் ஓவியம் வரையும் கலையை கற்று தெளிவுபெறலாம்ஆப் ஸ்டோரில் நிழல்ஓவியம் வரைதலை கட்டணமில்லாமல் பயன்படுத்தி கொள்ளமுயற்சித்திடுக. இந்த நிழல்ஓவியம்வரைதல் எனும் பயன்பாட்டினை கட்டணத்துடன் கூட பயன்படுத்தி கொள்ளமுடியும்மேலும் விவரங்களுக்குhttps://www.shadowdrawapp.com/ எனும் இணைய முகவரிக்கு செல்க

Leave a comment