1
பைதான் எனும் கணினிமொழி பற்றியஒருசில அடிப்படைதகவல்கள்

தற்போதைய சூழலில் அனைவரும் கூடிய வரை மிகவிரைவில் பைதான் எனும் கணினிமொழியை கற்கத் துவங்கிடுக என கணினி வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர் ஏனெனில் தற்போது இந்த பைதான் எனும் கணினி மொழியானது அங்கிங்கிங்கு எனாதபடி அனைத்து வகையான பயன்பாடுகளுக்கும் அடிப்படையாக எங்கெங்கும் நீக்கமற நிறைந்து பிரபலமடைந்து வருகின்றது,அதாவது கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிற்துறையும் தம்முடைய எந்தவொரு தேவைகளுக்கும் இதனைப் பயன்படுத்தி கொள்கின்றன. இது மிகவும் பிரபலமாக இருப்பதை நன்கு புரிந்துகொள்ள. 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிரலாக்க மொழிகளின் IEEE ஸ்பெக்ட்ரம் பட்டியலில் இந்த பைதான்எனும் நிரலாக்கமொழியானது முதலிடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தியின் அடிப்படையில் தெரிந்துகொள்ளமுடியும். அதனால் இன்று, இந்த பைதான் நிரலாக்கத்தைப் பற்றிய ஒருசில சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் தெரிந்து கொள்வோமா, அவை பின்வருமாறு

1. இது ஒரு பொழுதுபோக்குசூழலில் ஏதேச்சையாக உருவாக்கப்பட்டது: டிசம்பர் 1989 இல், Guido Van Rossum என்பவர் கிறிஸ்மஸுக்கு அடுத்துள்ள விடுமுறையின் போது வெட்டியாக பொழுதுபோக்குவதை ஒழித்து பயனுள்ளதாக செயல்படுவதற்காகஒரு செயல் திட்டத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ABC யின் வழித்தோன்றலாக இருக்கும் ஒரு புதிய ஸ்கிரிப்டிங் மொழியை எழுத அவர் யோசித்துக்கொண்டிருந்தார், மேலும் அது யூனிக்ஸ் / சி போன்று தாக்குதலில் பாதிப்படையாமல் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார். முடிவில் ஒருவழியாக புதிய கணினிமொழியை உருவாக்கி அதற்கு பைதான் என்றபெயரை தேர்வு செய்தார்

2. இந்த கணினிமொழியானது ஏன் பைதான் என அழைக்கப்பெறுகின்றது:இந்த கணினிமொழியின் பெயரானது பைதான் எனும் பாம்பின் பெயர் அன்று, ஆனால் அதற்குபதிலாக 1970ஆம் ஆண்டு காலகட்டத்தில் மான்டி பைதான் சர்க்கஸ் எனும் பிரிட்டிஷ் சர்க்கஸின் நகைச்சுவை குழுவானது உலகளவில் மிகபிரபலமாக இருந்துவந்தது Guidoஎன்பவர் அக்காலத்தில் அவ்வாறுபிரபலமான மான்டி பைதான் சர்க்கஸின் மிகத்தீவிர ரசிகராக இருந்துவந்தார். இந்நிலையில் தான் உருவாக்கிய கணினிமொழிக்கு என்ன பெயரை சூட்டுவது என மிகவும் திகைத்து நின்ற நிலையில் இறுதியாக தான் மிகத்தீவிரமாக ரசிக்கும் மான்டி பைதான்எனும்சர்க்கஸ் குழுவினுடைய பெயரையே தான்உருவாக்கிய தன்னுடைய கணினிமொழிக்கும் ‘பைதான்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

3. பைதானின் ஜென்கவிதைவரிகள்: பைதான்மேம்பாட்டின் முக்கிய பங்களிப்பாளரான Tim Peters என்பவர் பைதான் எனும் கணினி மொழியினுடைய தத்துவங்களை முன்னிலைப்படுத்த ஜென்தத்துவ கவிதைவரிகளை எழுதி இதனுடைய குறிமுறைவரிகளுக்கு இடையில் சேர்த்துபிரபலபடுத்திவந்தார். இதனை நாம் காணவிரும்பினால் பைதானின் IDLE-சூழலில் “import this” என்று தட்டச்சு செய்தால்,போதும் உடன் ஜென் கவிதையானது திரையில் தோன்றிடுவதை காணலாம்:

4. பைதானின் பல்வேறுசுவைகள்: இதில் CPython- என்பது C எனும் கணினிமொழியில் எழுதப்பட்டது, பைதானின் மிகவும் பொதுவான செயல்படுத்துதல்கள் இதில் உள்ளன. Jython- இது ஜாவாஎனும் கணினிமொழியில் எழுதப்பட்டது, இதுகுறிமுறைவரிகளை bytecode இற்கு மொழிமாற்றுகின்றது . IronPython- இது.NET எனும் கணினிமொழியில் எழுதப்பட்ட கட்டமைப்பிற்கான ஒருவிரிவாக்க அடுக்காக C # இல் செயல் படுத்தப்படுகின்றது . Brython- இனையஉலாவிகளுக்கான பைதான்ஆகும், இது இணையஉலாவியில் இயங்குகின்றது . RubyPython- பைதான் , ரூபி ஆகிய இரண்டு கணினிமொழிகளுக்கும் இடையில் மொழி பெயர்ப்பு பாளமாக திகழ்கின்றது .PyPy- இது பைதானை செயல்படுத்துனராக பயன்படுகின்றது.Micro Python- இதுமீச்சிறு கட்டுபாட்டாளரில் இயங்குகின்றது

5. பைதானைப் பயன்படுத்தும் பெரிய நிறுவனங்கள்:பல்வேறு பெரிய நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளுக்கு / சேவைகளுக்கு இந்த பைதான் எனும் கணினிமொழியின் பெயரை பயன்படுத்துகின்றன (அல்லது பயன்படுத்தியுள்ளன). இவற்றில் ஒரு சிலநிறுவனங்கள் பின்வருமாறு: NASA , Google , Nokia , IBM ,Yahoo! Maps ,Walt Disney,Facebook ,Netflix , Expedia , Reddit , Quora, MIT, Disqus, Hike ,Spotify,Udemy,Shutterstock,Uber,Amazon,Mozilla,Dropbox,Pinterest, Youtube

6. இதன் குறிமுறைவரிகளில்பிறையடைப்புகளைபயன்படுத்துவதில்லை: ஜாவா , சி ++ ஆகிய கணினிமொழிகளை போன்றில்லாமல், பைதான் குறிமுறைவரிகளை வரையறுக்க பிறையடைப்பு களைப் பயன்படுத்துவதில்லை. ஆயினும்பைதானில் குறிமுறைவரிகளில் உள்தள்ளல்மட்டும் கட்டாயமாகும்.

>>> from_future_import braces

என்றவாறு கட்டளைவரிகளின் வாயிலாக பிறையடைப்புகளைப்பதிவிறக்கம் செய்தால், அது நமக்கு இதில் இலக்கணப்பிழை உள்ளது இவ்வாறு பதிவிறக்கம் எதுவும் செய்யமுடியாது என்றவாறு நகைச்சுவையான பிழையைத் திரையில் பிரதிபலிக்கச் செய்கினறது.

7. இதன்செயலிகளில் பல மதிப்புகளைத் பெறமுடியும்: பைதானில் ஒரு செயலியானது பின்வரும் குறிமுறைவரிகளை போன்றுஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளைத் தருகின்றது..ஜாவா போன்ற ஒரு கணினிமொழியில் இது சாத்தியமில்லை. அதற்கு பதிலாக மதிப்புகளின் வரிசையை நாம் திரும்பப் பெறமுடியும்

>>> def func() :

return 7, ‘Ayushi’ , 99

>>> roll,name,score=func ()

>>>roll,name,score

(7, ’Ayushi’ , 99)

>>>name

’Ayushi’

8. இது ஒரே statement இல்பல பணிஒதுக்கீடுகளை ஆதரிக்கின்றது: ஒரே மதிப்பை ஒரே அறிக்கையில் பல மாறிகளுக்கு ஒதுக்கீடுசெய்வதற்காக பைதான்நம்மை அனுமதிக்கின்றது. அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் பல மாறிகளுக்கு மதிப்புகளை ஒதுக்கவும் நம்மை அனுமதிக்கின்றது. இதன் பயனாக பைதானில் மாறிகளுடைய மதிப்புகளின் இடமாற்றத்தினை மிகவிரைவாக செய்திடமுடியும் மேலும் ஒரேயொரு குறிமுறைவரியிலேயே இதனை செய்ய முடியும் என்ற கூடுதலான தகவலையும் மனதில்கொள்க:

>>>> a,b=7,8

>>>a,b=b,a

>>>print(a,b)

8,7

9. இதில்slicing எனும் வெட்டுதல்: இதில் slicing என்பதன் வாயிலாக, பட்டியலைத் எதிர்திசையில் திருப்புவது மிகவும்எளிதானசெயலாகும்.மதிப்புகளின் பட்டியலை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இதனுடைய slicing என்பதன் துனையுடன் வெட்டிடும்போது -1 என்ற படிநிலையில் இருந்தால், அந்த பட்டியலை வலமிருந்து இடமாக (தலைகீழாக) பெறுமுடியும்.

>>> nums=[1,2,3,4,5,6,7,8,9]

>>> nums [ : :-1 ]

[9,8,7,6,5,4,3,2,1]

10. தொடர் சங்கிலியால் ஒப்பீடு செய்யமுடியும்:இதில் குறிப்பிடும் நிபந்தனைகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பீடுகளைக் கொண்டிருக்கலாம். ஒரு மதிப்பு மற்றொன்றை விட பெரியதாகவோ, அதேநேரத்தில் மற்றொன்றை விட சிறியதாகவோ இருக்கின்றதா என்பதை சரிபார்க்கும் ஒரு நிபந்தனையை இதில் மிகஎளிதாக செயற்படுத்திடலாம்.

>>> 1<2<3>> 11.5

11. சர எழுத்துகள்(String literals)என்பது ஒன்றாக இணைகின்றது:ஒரு காலி இடைவெளியால் பிரிக்கப்பட்ட சரஎழுத்துகளை நம் தட்டச்சு செய்திடும்போது, பைதான் மொழியானது அவற்றை ஒன்றாக ஒருங்கிணைத்து ஒரேசொல்லாக பாவித்து திரையில் கொண்டுவருகின்றது. எனவே, ‘அனைவருக்கும் வணக்கம்’ ‘ ! ’என்றவாறான காலி இடைவெளியுடன் கூடிய தனித்தனி யானஇரு சொற்கள் ‘ அனைவருக்கும்வணக்கம் ! ’ என ஒரே சொல்லாகஆக்குகின்றது

>>>’அனைவருக்கும்’ ‘வணக்கம்’ ‘ ! ’

‘ அனைவருக்கும்வணக்கம்! ’

12. antigravity!எனும் நகைச்சுவை இணையபக்கம்:நாம் இதனுடைய IDLE சூழலிற்கு சென்று import antigravityஎன தட்டச்சு செய்தால் போதும், உடன் நகைச்சுவையுடன்கூடிய ஒரு இணையப்பக்கத்தைத் திரையில் தோன்றச்செய்திடுகின்றது.

13. ஜாவாஸ்கிரிப்டில் பைதானின் பாதிப்பு:ஜாவாஸ்கிரிப்ட் வடிவமைப்பை பாதித்த 9 கணினி மொழிகளில் பைதானும் ஒன்றாகும். மற்றவை AWK, C, HyperTalk, Java, Lua, Perl, Scheme, Self ஆகியவைகளாகும்.

14. அறிக்கைகளைில் for- while- else ஆகியவற்றை எளிதாக பயன்பட&%2

Leave a comment